This entry is in the series 20110102_Issue

கலாசுரன்


——————————————————
சோகத்தில் முளைத்த
ஒரு புன்னகையை
வீசியபடியே
அவன் கேட்டான்
நலமா….??

நலம் எனப் பதிலளித்த
முகத்திலும் படிந்திருந்தது
நரை விழுந்த ஒரு சோகம்
அவனும் கேட்டுக்கொண்டான்
நலமா…?

இன்னொருவன்
நிகழ்பவை அறியாது
தன் சோகங்களை
தனக்கான ஒரு வெற்றிடத்தில்
கண்களால் கணக்க்கிட்டுக்கொண்டிருந்தான்….
———————————————————————-
..

Series Navigation