இந்திய வரலாற்றில் ஜிஹாத்: டாக்டர்.அம்பேத்கர் – பகுதி 1

This entry is part [part not set] of 24 in the series 20081113_Issue

நேசகுமார்


[முன்குறிப்பு: இக்கட்டுரை பாகிஸ்தானின் ராயல் புக் கம்பெனி வெளியிட்டுள்ள டாக்டர் அம்பேத்கரின் ‘பாகிஸ்தான் பற்றிய சிந்தனைகள்’ நூலை அடிப்படையாகக் கொண்டது (Thoughts on Pakistan, Published by Royal Book Company, Karachi, Reprinted in 2008, pages 48-52). அடிக்குறிப்புகள் மற்றும் அடைப்புக்குறிக்குள் இருப்பவை மட்டும் கட்டுரையாளருடையவை. இந்த நூலின் சம்பந்தப்பட்ட பக்கங்களை கீழ்க்கண்ட வலைப்பதிவில் காணலாம்: http://nesamudan.blogspot.com]

சீன யாத்ரீகர் ஹ்வான் த்சாங் (Hsuan-tsang)[1] இந்தியாவிற்கு வருகை தந்தபோது அவர் கண்ட இந்தியாவின் பகுதியாக பஞ்சாப்[2] மட்டுமல்லாது ஆஃப்கானிஸ்தானும் இருந்தது[3]. அங்கே வாழ்ந்தவர்கள் வேத சமயத்தையும், பவுத்தத்தையும் பின்பற்றியவர்களாக இருந்தனர் என்பதை அவரது பதிவுகள் மூலம் அறிய முடிகிறது.

இடைப்பட்ட காலத்தில் என்ன நேர்ந்தது?

இடைப்பட்ட காலத்தின் முக்கிய நிகழ்வு, இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்த முஸ்லீம் கூட்டங்களின் நாசகாரத் தாக்குதல்களாகும். இந்தியாவின் மீதான முஸ்லீம்களின் தாக்குதல் முஹம்மது பின் காசிமின் தலைமையிலான அரபுப் படைகள் சிந்துத் பிரதேசத்தில் கி.பி. 711ல் முதன்முதலாக வந்திறங்கி[4] தாக்கியதிலிருந்து துவங்கியது.

ஆயினும் இந்தத் தாக்குதல் இந்தியாவின்மீதான நிரந்தர ஆக்கிரமிப்பு ஆகிவிடவில்லை. ஏனெனில், பாக்தாதில் இருந்த காலிஃபேட் இப்படையை ஒன்பதாம் நூற்றாண்டின் நடுவில் திரும்ப அழைத்துக்கொள்ள நேர்ந்தது[5].

ஆனால், இதற்குப் பின் இந்தியர்களின் நிலை மிகவும் மோசமானது. மிகக் கொடூரமான படையெடுப்புகளை கஜினி முஹம்மது கிபி 1001லிருந்து நிகழ்த்த ஆரம்பித்தான். கிபி 1030 மரணித்த அவன் அந்த முப்பது ஆண்டுகளில் பதினேழு முறை இந்தியாவைச் சூறையாடினான். அதற்குப் பின்னால் கோரி முஹம்மது தனது சூறையாடலை கிபி 1173ல் துவங்கினான். கோரி முஹம்மது கிபி 1206ல் கொல்லப்பட்டான். அதாவது முப்பதாண்டுகள் கஜினி முஹம்மதுவும், முப்பதாண்டுகள் கோரி முஹம்மதுவும் இந்தியாவுக்குள் வந்தேறிச் சூறையாடினார்கள், குதறித் தள்ளினார்கள்.

….. இந்த முஸ்லீம் படையெடுப்புகள்[6] வெறும் பணத்துக்காகவோ, பதவி ஆசையினாலோ, வெற்றி கொள்ளும் வெறியிலோ நிகழ்த்தப்பட்டவை அல்ல. இந்தக் கொடூரங்களுக்கு பின்னே வேறொரு முக்கியக் காரணம் இருந்தது. முஹம்மது பின் காசிமின் சிந்துப் படையெடுப்பு அரபுக் கப்பலொன்றைத் தேபல்[7] துறைமுகத்தில் சிந்து அரசன் ராஜா தாஹிர் கைப்பற்றியதற்கு பதிலடியாக, அந்த அரசனை தண்டிப்பதற்காக நிகழ்த்தப்பட்டதாகும்[7]. ஆனால், இதனோடு சிலைகளை வழிபடும், பல கடவுளர்களை வணங்கும், இந்தியர்களைத் தாக்கி அங்கே இஸ்லாத்தை நிறுவும் நோக்கமும் இந்தப் படையெடுப்புக்கு இருந்தது. ஹஜ்ஜாஜ் என்ற ஆளுனருக்கு (இவர் முஹம்மதின் மாமனாரும் ஆவார்) முஹம்மது பின் காசிம் அனுப்பிய ஒரு கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறான்[8]:

“ராஜா தாஹிரின் உறவினர்கள், முக்கிய அதிகாரிகள், படைத்தலைவர்கள் (அடிமையாகக் கைப்பற்றப்பட்டு) அனுப்பப் பட்டுள்ளனர். அங்கிருந்த காஃபிர்கள் இஸ்லாமியராக்கப்பட்டு அல்லது (மதம் மாற மறுத்தவர்கள்[9]) அழிக்கப்பட்டுவிட்டனர். சிலை வழிபாடு நடந்த கோவில்களுக்குப் பதிலாக மசூதிகள் நிர்மாணிக்கப்பட்டு (கடவுள் உத்தரவிட்டபடி) குறிப்பிட்ட நேரங்களில் தொழுகை நடத்தப்படுகிறது. இந்தப் பிரதேசத்தில் தக்பீரும்[10] அல்லாஹூ அக்பர் என்ற கோஷமும் எதிரொலிக்கின்றன”.

இந்தக் கடிதத்தையும், அதனுடன் சேர்த்து அனுப்பப்பட்டிருந்த அரசரின் தலையையும் பெற்றுக்கொண்ட ஆளுனர் ஹஜ்ஜாஜ் தனது மறுமொழியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

“….காபிர்களிடம் கருணை காட்டக்கூடாது, அவர்களது கழுத்தை அறுத்துக் கொல்ல வேண்டும் என்று வல்லமை பொருந்திய நமது கடவுள்[11] கட்டளையிட்டிருப்பதை மறந்துவிடாதே. நண்பன் எதிரி என்று பார்க்காதே. பெரியவர்கள் சிறியவர்கள் என்று யாராயிருந்தாலும் பாதுகாப்பு தா. எதிரிகளில் உனது அந்தஸ்துக்குக் குறைவானவர்கள் யாரானாலும், அவர்களிடம் தயவு காட்டாதே..”

கஜினி முஹம்மதுவும் தனது படையெடுப்புகளை (கஸ்வாக்களாக[12]), புனிதப்போராக–ஜிஹாதாகவே பார்த்தான். அவனுடன் இருந்த சரித்திர வல்லுனர் அத்-உத்பி இவ்வாறு பதிவு செய்கிறார்:

“அவன் (முஹம்மது) சிலை வழிபாடு நிகழ்ந்த கோவில்களை உடைத்து அழித்துவிட்டு அங்கே இஸ்லாத்தை நிறுவினான். அவன் நகரங்களைக் கைப்பற்றி, (சிலை வழிபாட்டின் காரணமாக) வழிகெட்ட[13] ஜனங்களைக் கொன்று போட்டு, முஸ்லீம்களின் மனதில் திருப்தியை உண்டாக்கினான். பின்பு அவன் (சொந்த) நாடு திரும்பி[14] இஸ்லாத்துக்காகத் தான் செய்த பெருஞ்செயல்களைப் பட்டியலிட்டான்… அதுபோன்றே ஒவ்வொரு வருடமும் (காஃபிர்கள் நிறைந்த) இந்தியாவுக்கெதிராக ஜிஹாத் செய்யப்போவதாகச் சூளுரைத்தான்…”

கஜினி முஹம்மதுவுக்குப் பின்பு வந்த கோரி முஹம்மதுவும் அதே புனிதக் கடமையினால் உந்தப்பட்டே இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்தான் என்பதைச் சரித்திர வல்லுனர் ஹஸன் நிஸாமி இவ்வாறு வர்ணிக்கின்றார்:

“தனது வாளின் வலிமையால் அவன் இந்துக்களின் பூமியில் கேவலமான விக்கிரக ஆராதனையையும் பல கடவுள் வழிபாட்டையும் ஒழித்துக்கட்டினான். ஒரு கோவிலைக்கூட விட்டுவைக்கவில்லை அவன்…”

இதன் பின்பு வந்த தைமூர் அவனது நினைவுகளைப் பதிவு செய்யும்போது இவ்வாறு குறிப்பிடுகிறான்:

“(இந்தியாவை நோக்கிப் படையெடுத்ததன்) நோக்கம் என்னவெனில், இந்த தேசத்தில் காஃபிர்களுக்கு எதிராகப் போர் தொடுத்து, அவர்களைச் சத்திய மார்க்கமாம் இஸ்லாத்துக்கு மதம் மாற்றி நபி முஹம்மது (அவர் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் அல்லாஹ்வின் அருளும் அமைதியும் சென்றிறங்கட்டும்) அவர்கள் கட்டளையிட்டபடி அந்த தேசத்தை நம்பிக்கையின்மையிலிருந்தும் [குஃபார்-15], பலகடவுள் வழிபாட்டிலிருந்தும் மீட்டு, அங்கிருக்கும் ஆலயங்களை இடித்துத் தரைமட்டமாக்கி, விக்கிரகங்களை அழித்துவிட்டு, கடவுளுக்கு முன்பாக காஸியாக[16], முஜாஹித்தீனாக[17], கடவுளின் போராளியாக(ஜிஹாதி) ஆகவேண்டும் என்பதே எனது விருப்பம்…”

இவ்வாறு படையெடுத்து வந்தவர்கள் எல்லோரும் முஸ்லீம்கள் என்ற பொதுவான ஒற்றை அடையாளத்துக்குள் வந்தாலும், அவர்கள் டார்டார்கள், ஆஃப்கன்கள், மங்கோலியர்கள் போன்ற வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள். கஜினி முஹம்மது டார்டார்[18] இனத்தைச் சேர்ந்தவன். தைமூர் மங்கோலியன்[19], பாபர் டார்டார் இனத்தவன், கோரி முஹம்மது நாதிர்ஷா, அஹ்மத் ஷா அப்தலி ஆகியோர் ஆஃப்கன்[20] இனத்தவர்கள். இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற (பொய்யான) கோஷம் இவர்களிடையே எவ்வித நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, மாறாக இவர்கள் ஒருவரையொருவர் ஒழிக்க முனைந்து, பெரும் வன்முறைகளை நிகழ்த்தினார்கள். ஆனால், இந்த இரத்த வெறியை மீறி, இவர்கள் அனைவருக்கிடையே ஒருமித்த கருத்தொன்று இருந்ததென்றால் அது இந்து நெறியை, வாழ்முறையை அழிக்கும் வெறிதான்.

இந்த அன்னிய இஸ்லாமிய ஜிஹாதிகளின் நோக்கத்தைப் போன்றே அவர்கள் நடந்து கொண்ட விதமும் நாம் கூர்ந்து கவனிக்கத்தக்கது. தேபுல் (அல்லது தேபால்– Debul or Debal in Sind province) மீது படையெடுத்து வந்த முஹம்மது பின் காசிமின் முதல் இஸ்லாமிய செயல்பாடு அங்கிருந்த பிராம்மணர்களுக்கு சுன்னத்து (கத்னா)[21] செய்து அவர்களை மதம் மாற்றுவதாக இருந்தது. ஆனால், அவர்கள் இந்தக் கட்டாய மதமாற்றுதலை நிராகரிப்பதை அறிந்தவுடன் அவர்களில் 17 வயதுக்கு மேம்பட்டவர்களை எல்லாம் வெட்டிக் கொலை செய்துவிட்டு, சிறுவர்கள், குழந்தைகள், மற்றும் பெண்களை அடிமைகளாக்கி, ஹிந்துக்களின் ஆலயத்தை கொள்ளையடித்து, அங்கிருந்தவற்றைத் தமது படைவீரர்களுக்குப் பங்கிட்டுத் தந்துவிட்டு, (இஸ்லாம் ஆணையட்டுள்ளவாறு) ஐந்தில் ஒரு பங்கை அரசுக்குச் சேரும்படி செய்தான்[22].

கஜினி முஹம்மதோ முதலிலிருந்தே இந்துக்களின் மனதில் திகிலைப் பரப்பும் (ஜிஹாது) நெறிமுறையைக்[23] கடைப்பிடித்தான். அரசன் ஜெயபாலனை கிபி 1001ல் சிறைப்பிடித்த அவன், “அவ்வரசனை (கைதியாக இருக்கும் நிலையில்) தெருக்களில் இழுத்துவந்து, விலங்கிடப்பட்டு இழிவுபடுத்தப்படுவதை[24] அவரது மகன்கள், படைத்தலைவர்கள் பார்த்து இஸ்லாம் பற்றிய பயம் காபிர்களின் நாட்டில் விதைக்கப்படட்டும்” என்றான்:

“காஃபிர்களை வெட்டிக் கொலை செய்வது (கஜினி) முஹம்மதுவுக்கு மிகவும் பிடித்தமான செயலாக இருந்தது. கிபி 1019ல் இந்திய அரசன் சந்த் ராயின் (Chand Rai) மீது நிகழ்த்திய தாக்குதலின்போது (வழக்கமான படையெடுப்புகளைப் போலல்லாது), சொத்துக்களைக் கொள்ளையடிப்பதிலும், சூறையாடுவதிலும் கவனத்தை செலுத்தாமல் (இஸ்லாத்திற்கு மாறாக) சூரியனையும் சந்திரனையும் வணங்கும் காஃபிர்களை பெரும் எண்ணிக்கையில் வெட்டிச் சாய்ப்பதையும், (இஸ்லாம் விதித்துள்ளபடி[25] பெண்கள் மற்றும் குழந்தைகளை) அடிமைகளாகப் பிடிப்பதையுமே முதற்கடமையாகக் கொண்டு செயல்பட்டது கஜினி முஹம்மதின் படை. இங்கு இதைப் பதிவு செய்யும் (இஸ்லாமிய) எழுத்தர் இன்னொரு விசித்திரமான செயலையும் பதிவு செய்கிறார். சிலைகளை வணங்கும் இந்துப் படைகளின் போக்கு பிடிக்காமல் சந்த் ராயின் படையில் இருந்த யானைகள் இஸ்லாத்தின் நோக்கத்தை நிறைவேற்ற வந்திட்டன என்கிறார் அவர்”[26].

இது போன்று வந்திறங்கிய கூட்டங்கள் தொடர்ந்து அடிக்கடி நிகழ்த்திய படுகொலைகளும், கொள்ளையும், பேரழிவுகளும் இந்துக்களின் நாட்டார் பண்பாட்டுக்கும், கலாசாரத்திற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின. இந்த விஷயத்தில் ஒரு முக்கிய உதாரணமாக பீஹாரில் வந்திறங்கிய முஹம்மது பக்தியார் கில்ஜியின் கூட்டம் நிகழ்த்திய பேரழிவைக் குறிப்பிடலாம். தபாகாத்-ஈ-நஸ்ரி[27] இது குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறது:

“வென்றவர்களிடம் பெரும் கொள்ளைப் பொருள் (அன்ஃபால் – [28]) வந்து சேர்ந்தது. அங்கிருந்தவர்களில் பெரும்பாலோர் தலைமழித்த பிராம்மணர்கள் [29]. அவர்கள் அனைவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அநேக நூல்கள் அவ்விடத்தில் காணப்பட்டன… ஆனால், அவ்விடம் வேத பாடசாலையாக இருந்த காரணத்தினாலும், அங்கிருந்த ஆண்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாலும் அந்த நூல்களில் என்ன இருக்கின்றது என்பதை விளக்குவாரில்லை[30].”

“கோவில்கள் அழிக்கப்பட்டதற்கும் அங்கிருந்த கடவுள் விக்கிரகங்கள் சேதப்படுத்தப் பட்டதற்கும் நமக்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. முஹம்மது பின் காசிம் சிந்து மாகாணத்தில் நிகழ்த்திய அழிவுகளை நாம் கண்டோம். ஆனால், அங்கிருந்த மூல்தான் நகரின் கோவிலை அவன் விட்டுவைத்தான், அங்கிருந்த ஆலயத்தை வலுப்படுத்தவும் செய்தான். ஏனெனில், அந்த ஆலயத்திற்கு (இந்து யாத்ரிகர்கள் மூலம்) பெரும் வருமானம் வந்துகொண்டிருந்தது. ஆனால், அப்படி விட்டுவைத்த ஆலயத்திலும் அவனது வக்கிர புத்தி செயல்பட்டது. அங்கேயிருந்த தெய்வ விக்கிரகத்தின் கழுத்தில் பசு மாட்டின் இறைச்சியைத் தொங்கவிட்டான் அவன்..”

“மேலும் எப்படி முஹம்மது ஆயிரம் (இந்து) ஆலயங்களை உடைத்து அழித்தான், எப்படி சோமநாதபுரத்தின் சிவாலயத்தைச் சூறையாடி அங்கிருந்த கடவுட் சிலையை நான்கு பகுதிகளாக உடைத்து எடுத்துச் சென்றான் என்பதை மின்ஹாஜ் அஸ் சிராஜ் விரிவாக விவரிக்கின்றார். (சிவலிங்கத்தின்) ஒரு பகுதியை கஜினி நகரின் ஜாமி(யா) மசூதியிலும், அரண்மனைப் படிக்கட்டிலும் பதித்து, மற்ற இருபகுதிகளை மெக்காவிற்கும், மதீனா நகரிற்கும் அனுப்பிவைத்தான்[31]”.

[தொடரும்]

1) ஹ்வான் த்சாங் அல்லது ஹுவான் த்சுவாங் என அழைக்கப்படும் Hsuan-Tsang, இந்தியாவின்மீதான முதல் முஸ்லீம் படையெடுப்புக்கு ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து காஷ்மீர் முதல் காஞ்சிபுரம்வரை பயணம் செய்தவர். இஸ்லாத்தின் வருகைக்கு முந்தைய இந்தியாவைப் பற்றிய விவரணைகள் இவரது எழுத்துக்களில் காணக் கிடைக்கின்றன. இதில் குறிப்பிடத் தகுந்த அம்சம், ஜாதீய உணர்வு இஸ்லாம் வந்தபின்னரே குறைத்தது என்ற வழக்கமான வாதத்தைப் பொய்யாக்கும் வகையில், அக்கால கட்ட த்திலேயே பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் அரசர்களாக இருந்ததை அவரது பயணக்குறிப்புகளில் காணமுடிகின்றது. தற்போதைய உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்த மாதபுரம் என்ற அரசை விவசாயக் குடியைச் சேர்ந்த அரசன் ஒருவன் ஆண்டு வந்ததைக் குறிப்பிடுகிறார் (சூத்திரர்கள் என்போர் வேளாண்மை செய்தவர்கள் என்கிறார் ஹ்வான் த்சாங்). அங்கேயிருந்த குடிமக்கள் இந்து மதத்தையும், பவுத்த மத த்தையும் பின்பற்றி வந்தவர்கள் என்கிறார். சமணர்களும் இருந்தனர் என்கின்றனர் சரித்திர ஆசிரியர்கள். உதாரணமாக சிந்து பிரதேசத்தில் முஸ்லீம் படையெடுப்புகளுக்கு முன்பாகப் பெருமளவில் பவுத்தர்கள் வசித்துவந்தனர். அங்கே நானூற்றுக்கும் மேற்பட்ட புத்த விஹாரங்கள் இருந்தன. நகரங்களில் இருந்த வணிகர்களும், கலைஞர்களும் பவுத்தத்தையும், குடியானவ (வேளாண்) மக்கள் இந்து மதத்தையும் பின்பற்றி வந்தனர். ஆனால், இஸ்லாமியப் படையெடுப்புகளுக்குப் பின்னால் எதிர்த்து நின்ற இந்து மதம் தப்பிப் பிழைத்தது. ஆனால், வன்முறையை நிராகரித்த பவுத்த மதம் முற்றிலும் அழிக்கப்பட்டு இல்லாமல் போனது.
2) பஞ்சாப் என்று இங்கே குறிப்பிடப்படுவது, இன்றைய பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரு நாடுகளையும் சேர்ந்த பஞ்சாப் பிரதேசமாகும்.
3) கிபி பத்தாம் நூற்றாண்டுவரை இந்து ஷாஹி மன்னர்களின் ஆளுமையின் கீழ் ஆஃப்கானிஸ்தான் இருந்தது. பின்னாளில் சீக்கியர்கள் ஆஃப்கானிஸ்தானின் ஒரு பகுதியை ஆண்டனர்.
4) சிரியாவைச் சேர்ந்த முஹம்மது பின் காசிம் அல் தகஃபியை அப்போதைய கலீஃபா அல்-வலீது, சிந்து மற்றும் பஞ்சாப் பிரதேசங்களைத் தாக்க அனுப்பினார். முதல் இரு படையெடுப்புகள் தோல்வியில் முடிந்தன. மூன்றாவது படையெடுப்பு உயர்வகை இராணுவ தளவாடங்களாலும், மற்ற பிற காரணங்களினாலும் வெற்றி பெற்றது. பார்க்க: http://www.class.uidaho.edu/ngier/mm.htm. இந்த முதல் ஆக்கிரமிப்பிலேயே அங்கிருந்த இந்து ஆலயம் இடிக்கப்பட்டு அவ்விடத்தில் மசூதி எழுப்பப்பட்டது. இஸ்லாமிய மேலாண்மையை ஏற்றுத் தமது பூர்வீக நிலத்திலேயே இரண்டாந்தரக் குடிகளாக இருக்க இசைந்தோருக்கு திம்மி நிலை வழங்கியது ஆக்கிரமித்த அரபு ஜிஹாதிக் கூட்டம்.
5) மூன்று வருடங்களே முஹம்மது பின் காசிம் இந்தியாவில் வசித்தான். அப்போதைய கலீஃபா சுலைமான் முஹம்மது பின் காசிமை சித்தரவதை செய்து கொன்றான். வன்முறையை வழியாகத் தேர்ந்தெடுத்த முஹம்மது பின் காசிம், தானே அவ்வன்முறைக்கு பலியானான். (இந்திய வரலாறெங்கும் இதை மீண்டும் மீண்டும் காணமுடிகிறது. ஜிஹாதிகள் மற்றவர்களைத் துன்புறுத்தியதோடு மட்டுமல்லாமல், தாமும் சித்திரவதை அனுபவித்தே இறந்தனர்.) அவன் சென்ற பிறகு இந்துக்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால், வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட இந்துக்கள் திரும்ப அழைத்துக் கொள்ளப்படவில்லை. அவர்கள் அமைதியாக இஸ்லாமியர்களாகவே வாழ்க்கையை நட்த்திவந்தார்கள். பார்க்க: http://www.berzinarchives.com/web/en/archives/e-eooks/unpublished_manuscripts/historical_interaction/pt1/history_cultures_04.html#n5
அது போன்றே இப்படையெடுப்பில் விரட்டப்பட்ட இந்துக்களும், பவுத்தர்களும் ஐரோப்பா வரை சென்று, இன்றும் அவர்கள் ஜிப்ஸி இனமாக விளங்குகின்றனர்.
6) படையெடுப்புகள் என்று இங்கே குறிப்பிடப்படுவது கஸ்வா எனப்படும் திடீர் தாக்குதலாகும். இப்படி முன்னறிவிப்பில்லாமல் காஃபிர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும், அப்படி நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் மூலம் கொள்ளையடிப்பதற்கும் இஸ்லாமிய மதஆவணங்கள் அனுமதி வழங்குகின்றன. அன்ஃபால் எனும் கொள்ளைப் பணம், இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இறைவனின் வெகுமதி என்கிறது இந்த ஹதீது:
Sahih Bukhari – Volume 1, Book 2, Number 35:
Narrated Abu Huraira: The Prophet said, “The person who participates in (Holy battles) in Allah’s cause and nothing compels him to do so except belief in Allah and His Apostles, will be recompensed by Allah either with a reward, or booty (if he survives) or will be admitted to Paradise (if he is killed in the battle as a martyr). Had I not found it difficult for my followers, then I would not remain behind any sariya going for Jihad and I would have loved to be martyred in Allah’s cause and then made alive, and then martyred and then made alive, and then again martyred in His cause.” http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/002.sbt.html#001.002.035
இப்படி காஃபிர்களிடமிருந்து கொள்ளயடிக்கப்படும் பணத்தில் ஐந்தில் ஒரு பகுதி இறைத்தூதர் முஹம்மதுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்கிறது திருக்குரான் (பார்க்க வசனம்8:41). கும்ஸ்(Khums) என்றழைக்கப்படும் இந்த ஐந்தில் ஒரு பகுதியை பிற்காலத்தில் கலீஃபாக்கள் பெற்றனர்.
7) தேபுல் அல்லது தேபல் என்று குறிப்பிடப்படும் இந்நகரம் இன்றைய கராச்சியாக இருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது. கராச்சி தற்போதைய பாகிஸ்தானின் வணிகத் தலைநகரம். இந்திய – பாகிஸ்தான் பிரிவினை வரை இங்கே இந்துக்கள் வணிகத்திலும் பிற துறைகளிலும் சிறந்து விளங்கினர்.
8) ராஜா தாஹிரின் பகுதியில் இருந்த கடற்கொள்ளையர் இலங்கையிலிருந்து அரேபியா திரும்பிய கப்பலில் இருந்த பெண்களையும், குழந்தைகளையும் பிடித்தனர், அதனாலேயே இந்தப் படையெடுப்பு நிகழ்ந்தது என்று இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், இது அநேகமாக ஒரு கட்டுக்கதையாக இருக்கலாம். கடல் வணிகத்தில் ஈடுபட்ட அரபு வணிகர்களும், படையெடுத்துப் பிற தேசங்களுக்குச் சென்ற அரபியரும் தமது மனைவியரையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்லும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. தமது கொடூரங்களை நியாயப்படுத்துவதற்கு மாற்று மதத்தவரை இன்னும் கொடூரமாகச் சித்தரிக்கும் வழக்கம் இஸ்லாத்தின் துவக்க காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது.
9) படையெடுப்பின் முதலில் அங்கிருந்தவர்கள் மதம் மாறும்படி நிர்ப்பந்திக்கப் பட்டனர். மதம் மாற மறுத்தவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களது மனைவியரும், குழந்தைகளும் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். முஹம்மது பின் காசிம் 6000 பெண்களை அடிமைகளாகப் பிடித்து கலீஃபாவுக்கு அனுப்பினான். இப்படி அனுப்பப்பட்ட பெண்களில் ராஜா தாஹீரின் இரு மகள்களும் அடங்குவர். அவர்கள் கலீஃபாவிடம் அனுப்பப்பட்டனர். அவர்கள் தங்களுடன் முஹம்மது பின் காசிம் உறவு வைத்துக் கொண்டான் என்று சொல்ல, கலீஃபா கோபப்பட்டு முஹம்மது பின் காசிமைச் சித்தரவதை செய்து கொலை செய்ய உத்தரவிட்டார் என்று ஒரு குறிப்பு உள்ளது. பின்பு இந்தப் பெண்கள் தாம் தமது தந்தையைக் கொன்ற முஹம்மதைப் பழிவாங்கவே இவ்வாறு சொன்னதாகச் சொல்ல, அப்பெண்கள் உயிருடன் சமாதி கட்டப்பட்டனர் என்றும் அக்குறிப்பு தெரிவிக்கின்றது.
10) தக்பீர் – இஸ்லாமியர்களின் கடவுளே பெரியவன் என்பதை சொல்லும் கோஷங்கள்.
11) தமது கடவுளே வலிமை வாய்ந்த கடவுள், மற்ற மதத்தவரின் கடவுள் வலிமையில்லாத சக்தியற்ற கடவுள்கள் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்று. இது இஸ்லாத்தில் மட்டுமல்லாது, பின்னாளில் தோன்றிய அஹமதியா பிரிவிலும் ஆழமாக வேரூண்றியிருப்பதை காணலாம்: “The Holy Quran teems with verses declaring the omnipotence, majesty and glory of God… and rejects the dead, weak, unmerciful, and powerless gods of false religions” Teachings of Islam By Hazrat Mirza Ghulam Ahmad, Published by Kessinger Publishing, 2003, page134.
12) பார்க்க குறிப்பு(6).
13) வழிகேடு என்பது மற்ற மதங்களைப் பற்றி விவரிக்கும்போது இஸ்லாமிய மதத்தில் அடிக்கடி பயன்படும் வார்த்தை. உலகம் முழுவதும் இறைவனின் தூய்மையான உபதேசங்கள் அவரது தூதர்கள் மூலம் வந்திறங்கியதாகவும், அதை மற்ற மதத்தினர் தவறாகப் புரிந்து கொண்டு அல்லது அவற்றைப் பாழ்படுத்தி உருக்குலைந்த வடிவில் பின்பற்றுவதாகவும், இஸ்லாமியரிடையே மட்டுமே கடவுளின் தூய்மையான கட்டளைகள் இன்னமும் புழக்கத்தில் இருப்பதாகவும், அவர்களின் கோட்பாடுகளை மாசுபடாமல் இறைவனே காப்பதாகவும் இஸ்லாமியர் நம்புகின்றனர்.
14) அவனது நாடு கஜினி. இன்றைய ஆப்கானிஸ்தானில் இருக்கும் நகரம் அது. அந்நகரை கைப்பற்றி ஆட்சிபுரிந்த முஹம்மதுவே கஜினி முஹம்மது என்று குறிப்பிடப் படுகிறான். இவனை பாரசீகக் கவியான ஃபிர்தவ்ஸி ‘அடிமையின் மகன்’ என்று ஏளனமாகக் குறிப்பிடுகிறார். http://www.sacred-texts.com/isl/gsw/gsw07.htm. கஜினி முஹம்மது மட்டுமல்லாது, மற்ற பல படையெடுப்பாளர்களும் அடிமைகள் அல்லது அடிமைகளின் வழி வந்தோரே. இந்த அடிமைகள் மற்ற காஃபிர் குலங்களை அழிக்க மட்டுமே பயன்படுத்தப் பட்டனர். இவர்களில் யாரும் கலீஃபா ஆக அனுமதிக்கப்படவில்லை, அந்தப் பதவி உயர்குலமான குரைஷிகளிடமே இருந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது.
15) குஃபார் அல்லது குஃப்ர் (Kufr) – தமிழில் இறைமறுப்பு என்று தவறாக மொழிபெயர்க்கப்படும் சொல். இது இறைமறுப்பு அல்ல, மாறாக முஹம்மதின் நபித்துவத்தின் மீது நம்பிக்கை வைக்க மறுப்பதைக் குறிக்கும் அரபி சொல் இது. இறைவன் ஒருவனே என்று நம்பிக்கை வைத்தாலும், முஹம்மது இறைவனின் தூதர் (பின்னாளில் இறுதி இறைத்தூதர்) என்று நம்ப மறுப்பவர்களையும், ஷரீயத்தை மறுப்பவர்களையும் இந்த வார்த்தை குறிக்கிறது.
16) காஸி (Ghazi): காஃபிர்களைக் கொன்று, நாட்டார் வாழ்வியலை அழித்து இஸ்லாத்தின் பாதையில் வெற்றி வாகை சூடிய இஸ்லாமியப் போராளிக்குத் தரப்படும் பட்டம்.
17) முஹாஹித்தீன்: ஜிஹாதில் ஈடுபடும் இஸ்லாமியப் போராளி.
18) டார்டார் அல்லது டாடார் (Tartar or Tatar): மத்திய ஆசியாவைச் சேர்ந்த துருக்க மொழி பேசும் நாடோடி இனம்.
19) மங்கோலியர்கள்: மங்கோலியாவைச் சேர்ந்த நாடோடி இனம். ஆரம்பத்தில் இஸ்லாத்தின் விரிவைப் பெருமளவில் தடுத்து நிறுத்திப் பின்வாங்க வைத்தது செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியப் படையெடுப்புகளே. கிட்டத்தட்ட இஸ்லாத்தின் பாணியை அப்படியே கடைப்பிடித்த செங்கிஸ்கானின் வாழ்க்கை குறித்து டாக்டர். கொய்ன்ராட் எல்ஸ்ட் தனது வஹி பற்றிய கட்டுரைகளில் எழுதியுள்ளார். ஆனால், தீவிர மதக்காழ்ப்பு இல்லாததால் பின்னாளில் செங்கிஸ்கானின் சந்ததியினரில் பலர் இஸ்லாமியர்களாக மாறினர். இங்கே குறிப்பிடப்படும் மங்கோலியர், இஸ்லாத்துக்கு மதம் மாறிய மங்கோலியர் ஆவர்.
20) ஆஃப்கானியர்: அநேகமாக இது பஷ்தூன் இனத்தை குறிக்கிறது.
21) சுன்னத்து/கத்னா: ஆண்குறியின் முன்தோலை நீக்கிவிடுவது. ஆப்ரிக்கப் பழங்குடி வழக்கமான இது எகிப்தில் கடவுளுக்கான சடங்கானது. பின்னாளில் இதுபற்றிய நாட்டார் கதையாடல்கள் உருவாகி, பழைய ஏற்பாட்டில் இது கடவுளுக்கும் இபுராஹீம் நபிக்குமான உடன்படிக்கையாக உருமாற்றம் பெற்றது. இஸ்லாத்தில், இது நபிமார்களின் செயல்பாடானதால் சுன்னத்து என்று குறிப்பிடப்படுகிறது. சுன்னாஹ் என்றால், ஒருவரின் செயல்களை அப்படியே பின்பற்றும் பாகன் அரபி வழக்கம். இது பின்னாளில் இஸ்லாத்தின் ஒரு முக்கியக் கோட்பாடாக பரிணமித்து, முஹமதின் செயல்பாடுகளைப் பின்பற்றுவதை குறிக்க ஆரம்பித்தது.
22) கும்ஸ் (Khums) என்பது ஜிஹாதில் பிடிக்கப்படும் காபிர்களின் பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதியை நபி அல்லது அமீர் அல்லது காலிஃபுக்குத் தருவதை குறிக்கிறது. இது முஹம்மதின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டது.
23) “நான் மற்றவர்களின் மனதில் பயத்தை உண்டு செய்வதன் மூலம் வெற்றிபெறும்படி கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டேன்” – ஹதீஸ் புகாரி. Volume 4, Book 52, Number 220: Narrated Abu Huraira: Allah’s Apostle said, “I have been sent with the shortest expressions bearing the widest meanings, and I have been made victorious with terror (cast in the hearts of the enemy), and while I was sleeping, the keys of the treasures of the world were brought to me and put in my hand.” Abu Huraira added: Allah’s Apostle has left the world and now you, people, are bringing out those treasures (i.e. the Prophet did not benefit by them). http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/052.sbt.html#004.052.220
24) ஒரு தகவலின்படி அரசர் ஜெயபாலனின் ஆடைகளைக் களைந்து பிணைக்கப்பட்ட நிலையில் கேவலப்படுத்தியது ஆக்கிரமித்த அந்நியக்கூட்டம். கடவுளுக்கு மாறாகக் காபிர்கள் செயல்படுவதால் (சிலைகளை வணங்குவது, முஹம்மதை இறைத்தூதர் என்று ஏற்க மறுப்பது போன்ற குஃப்ர் செயல்பாடுகள்), அவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்று. பார்க்க திருக்குரான் வசனம் 2:61 (“And humiliation and wretchedness were stamped upon them and they were visited with wrath from Allah.”). கடவுளால் அனுப்பப்படும் தூதர்களுக்குப் பணியாதவர்களை கடவுள் கேவலப்படுத்துவார் என்பதை மீண்டும் மீண்டும் குரானும், ஹதீஸ் கிரந்தங்களும் தெளிவுபடுத்துகின்றன. இதனால், பிடிக்கப்பட்ட காபிர்களை இழிவுபடுத்துவதை கடவுளின் கட்டளையாக ஏற்று ஜிஹாதிகள் செயல்பட்டனர். இதனால், தலைப்பாகை அணிவது, செருப்புகளை அணிவது, குதிரைமீது சவாரி செய்வது, நல்ல உடைகளை உடுத்துவது, புதிய வீடுகளில் வசிப்பது, மேளதாளத்துடன் செல்வது போன்றவை காஃபிர்களுக்கு ஹராமாக ஆக்கப்பட்டன.
25) பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்வதை இஸ்லாம் தடுக்கிறது. மாறாக ஜிஹாதில் பிடிக்கப்படும் காஃபிர்களின் பெண்கள் மற்றும் குழந்தைகள், கடவுளால் அனுமதிக்கப்பட்ட கனீமா ஆவர். இப்படிப் பிடிக்கப்படும் குழந்தைகளும், பெண்களும் முஃமீனான முஸ்லீம்களுக்கு அடிமைகளே ஆவர். இவர்களுடன் பாலியல் உறவுகொள்வதை ஷரீயத் அனுமதிக்கிறது. இந்த அடிமைப் பெண்களில் முஸ்லீமாக மதம் மாறுபவர்களை மனமிறங்கி விடுவிப்பது, பிடித்த முஸ்லீமின் முடிவைப் பொறுத்தது. இப்படி பிடிக்கப்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சுதந்திரமானவர்களாக, முஸ்லீம்களாக ஆகின்றனர். இஸ்லாம் விரைவாக வளர்ந்ததற்கும், பரவியதற்கும் இப்படி அடிமைகளைப் பிடிப்பது முக்கிய காரணமாக மத்திய காலத்தில் விளங்கியது.
26) விலங்குகள் இயல்பாகவே இஸ்லாமியர் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கைகளுள் ஒன்று. அதேபோன்று குழந்தைகளும் இயல்பாகவே இஸ்லாமியராகவே பிறக்கின்றனர் என்பதும் இஸ்லாமிய நம்பிக்கை. சூஃபி குருமார்களின் பிறப்பை வர்ணிக்கும் இஸ்லாமிய நூல்களில் பிறந்தவுடன் கலீமா சொல்லும் குழந்தைகள் பற்றிய வருணனைகள் இதன் காரணமாகவே ஏற்பட்டன.
27) Tabaqat-i-Nasri: இந்தியாவுக்கு வந்து இங்கிருந்த இஸ்லாமிய மன்னர்களிடம் பணிபுரிந்த ஆப்கானிய மின்ஹஜீ சிராஜ் எழுதிய நூல். ஆரம்பகால இஸ்லாமியப் படையெடுப்புகள் குறித்த விவரங்களைத் தரும் முக்கிய நூல். பீஹார் மற்றும் வங்காளத்தில் நிகழ்ந்த இஸ்லாமியப் படையெடுப்புகள், நாலந்தா பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டது ஆகியவை குறித்த விவரங்களை இவர் பதிவு செய்துள்ளார்.
28) அன்ஃபல்: ஜிஹாதில் வெற்றி கொள்ளப்படும், கடவுளால் அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) கொள்ளைப் பொருள். ஜிஹாதில் ஈடுபட்டு வெல்லும் முஜாஹித்தீன்களுக்கு இந்த அன்ஃபல்லை கடவுளே தருவதாக பல ஹதீஸ்கள் உரைக்கின்றன. ஹதீஸ் புகாரி, Volume 4, Book 52, Number 46 Narrated Abu Huraira: I heard Allah’s Apostle saying, “The example of a Mujahid in Allah’s Cause– and Allah knows better who really strives in His Cause—-is like a person who fasts and prays continuously. Allah guarantees that He will admit the Mujahid in His Cause into Paradise if he is killed, otherwise He will return him to his home safely with rewards and war booty.” http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/052.sbt.html#004.052.046
29) பிராம்மணர்கள் என்று தவறாகக் குறிப்பிடப்படும் இவர்கள் நாலந்தாவின் புத்த பிட்சுகள் ஆவர். ஒரு குறிப்பின்படி பீஹார் மற்றும் வங்காளத்தில் முஹம்மது பக்தியார் கில்ஜியின் தாக்குதலில் ஒரு லட்சம் பவுத்தர்கள் கொலை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஒரு காலத்தில் ஈரான், ஆஃப்கானிஸ்தான், இன்றைய பாகிஸ்தான், இந்தியா போன்ற பிரதேசங்களில் பரவி, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பின்பற்றுவோரைக் கொண்டிருந்த பவுத்தம், திபெத்தைத் தவிர மற்ற இடங்களில் இல்லாமல் போனது இப்படையெடுப்புகளுக்குப் பிறகுதான். இது குறித்து ஈரானிய வலைத்தளம் இரானியன்.காம் இவ்வாறு தெரிவிக்கிறது: “Buddhism eventually demised with the Arab Muslim invasion of the 7th century. The Muslims considered Buddhists idol worshippers and did all they could to destroy “heretical” temples and deface artwork.” http://www.iranian.com/History/2004/December/Buddhism/index.html
30) விளக்க ஆளில்லாததால், இந்த நூல்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. ஒரு வரலாற்றுக் குறிப்பின்படி, நாலந்தா பல்கலைக் கழகத்தின் நூல்கள் பலமாத காலம் எரிந்தன என்று அறியமுடிகிறது. நாலந்தாவின் அழிவு, எகிப்து நாட்டின் அலக்சாந்த்ரியா (Alexandria) நூலகத்தின் அழிவை நினைவுறுத்துகிறது. இஸ்லாத்தின் துவக்க காலத்தில் அங்கே சென்ற இஸ்லாமியப் போராளி அம்ரு இப்னு அல் ஆஸ், அப்போதைய கலீஃபா உமரிடம் நூலகத்தை என்ன செய்யலாம் என்று கேட்டதற்கு, “அவை குரானில் உள்ளதற்கு மாறாக இருந்தால், அது தெய்வத்துக்கு எதிரானது, குரானில் உள்ளது இருந்தால் அது தேவையற்றது” என்று மறுமொழி கொடுத்து, அந்த நூல்களை எரிக்கக் கட்டளை இட்டாராம். விலை மதிப்பற்ற நூல்கள், அரபு ஜிஹாதிகள் குளிப்பதற்கு நீரைச் சுடவைக்கப் பயன்படுத்தப்பட்டன.
31) இப்படி கைப்பற்றப்பட்ட மாற்று மதத்தவரின் புனித விக்கிரகங்களை படிக்கட்டில் அல்லது பக்கவாட்டில் பதித்து ‘மகத்தான கடவுளான’ அல்லாஹ்வுக்குக் கீழானதாக வைப்பது அல்லது திம்மியாக இழிவுபடுத்துவது இஸ்லாத்தின் துவக்க காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப் படும் நடவடிக்கை. இஸ்லாத்துக்கு முந்தைய காலகட்டத்தில் அங்கே வழிபடப்பட்ட ஹூபல் கடவுளின் பிம்பமான கறுப்பு விக்கிரகம் (ஹஜருல் அஸ்வத்) இன்றும் காபாவின் பக்கவாட்டுச் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் மேலாண்மையை ஏற்காத கடவுள்கள் சைத்தான்கள் என்று நிராகரிக்கப்பட்டும், ஏற்கும் கடவுள்கள், அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்த மலக்குகளாகவும் (இறைவனின் ஏவலாட்கள்) ஜின்களாகவும் (அமானுஷ்ய அருவ ஜீவன்கள்) இஸ்லாத்தால் சித்தரிக்கப் படுகின்றன.

Series Navigation

நேச குமார்

நேச குமார்

இந்திய வரலாற்றில் ஜிஹாத் : பசுமலை இறையியல் பயிற்சி மையத்தின் முதல்வர் ரெவரண்ட் டாக்டர் பனிங்கரின் கட்டுரை (1923)

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

நேசகுமார்


கடந்த நூறு வருடங்களில் குறைந்த பட்சம் 51 ஜிஹாத் கலவரங்கள் மாப்ளாக்களால் [1] நிகழ்த்தப்பட்டுள்ளன. ஜூலை 6, 1922 தேதியிட்ட வெஸ்ட் கோஸ்ட் ஸ்பெக்டேடர்(West Coast Spectator]) மாப்ளா-ஜிஹாதிகளால் பாடப்படும் இறைப்பாடலின் பகுதியை பதிப்பித்துள்ளது. இப்பாடல் காஃபிர்களை அழித்து இறைபாதையில் போரிட்டு மடியும் ஷஹீதுகளுக்கு[2] வழங்கப்படும் நிரந்தர சொர்க்கம் குறித்தும், அங்கே அவர்களுக்கு கடவுள் தரும் அழகிய ஹூரிகள்[3] பற்றியும் விரிவான விவரனைகளை கொண்டிருக்கின்றது. மாப்ளாக்கள் தங்களது தீவிரவாதச் செயல்களின் போது இந்த பாடலின் பிரதியை தம்முடன் வைத்திருந்ததை இந்த செய்தி விவரிக்கிறது.
….இந்த கலவரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்த மூன்று நீதிபதிகளடங்கிய விசேஷ ட்ரிப்யூனல்(காலிகட்) தமது தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“கடந்த நூறு வருடங்களாக மாப்ளா சமுதாயம் அவ்வப்போது இந்த திடீர் வன்முறையில் ஈடுபட்டு அவப்பெயரை சம்பாதித்து வருகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் இதற்கு ஒரு காரணம். மாப்ளாக்கள் மிகுந்திருக்கும் எர்னாடு [11] தாலுக்காவிலிருந்து திடீரென்று கிளம்பி இவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். கல்லா மூடர்களான இவர்களது மனது காஃபிர்களை கொல்வதன் மூலம் கடவுளிடமிருந்து சொர்க்கம் கிட்டும் என்ற அடிப்படைவாத இஸ்லாமிய போதனைக்கு பலியாகிவிடுகிறது. அவர்கள் திடீரென்று கிளம்பி இந்த ஜிஹாதில் ஈடுபடுவார்கள். எந்த ஹிந்துக்கள் கைக்கு அகப்படுகிறார்களோ அவர்களை எவ்வித முகாந்திரமுமின்றி கொல்வார்கள். அவர்களது நோக்கம் பிரிட்டிஷ் ஆட்சியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக உலகளாவிய இஸ்லாமிய ஆட்சியை (காலிஃபேட்) [4]தீவிரவாதத்தின் மூலமாக ஏற்படுத்த வேண்டும் என்பதாம்”.
….1921 மாப்ளா கலவரங்களுக்கு பின்னால், விவசாய குறைபாடுகளும், விவசாய பிரச்சினைகளும் இருக்கின்றன என்பது பொய்யான தகவல்களாகும். அப்படி என்றால், பிராம்மண – நாயர் நிலச்சுவாந்தார்களின் நிலங்களை நிர்வகித்த இந்த மாப்ளாக்களிடம் வேலைபார்க்கும் இந்து குடியானவர்களே[5] இப்படிப்பட்ட கலவரங்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஏனெனில், அவர்களது நிலையே மிகவும் மோசமானது. ஆனால், அவர்களின் மேலாளர்களாக இருந்து அவர்களை துன்புறுத்தி வந்த மாப்ளா முஸ்லீம்கள் இந்த தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கு எவ்வித முகாந்திரமும் கிடையாது.
(அங்கேயிருந்த) இந்து சமுதாயம் இந்த திடீர் வன்முறைகளுக்கு பலியானது. அவர்களுக்கு(இந்துக்களுக்கு) நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை விவரிக்கவும் மனம் அஞ்சுகிறது. … மலபார்(கேரளா) மாநிலத்தின் பெண்கள் கவுண்டஸ் ஆஃப் ரீடிங்கிற்கு அளித்த மகஜரில்[6] மிகவும் வருத்தம் தரத்தக்க விவரங்கள் அடங்கியுள்ளன. சிதைக்கப்பட்ட உடல்களால் நிரப்பப்பட்ட கிணறுகள், துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொல்லப்பட்ட கர்ப்பினிப் பெண்கள், தாய்மார்களின் கரத்திலிருந்து பிடுங்கி கொல்லப்பட்ட குழந்தைகள், பெண்களின் கண்கள் முன்னாலேயே அவர்களது கணவர்கள், தந்தைகள் சித்திரவதை செய்யப்பட்டு, சாட்டையால் அடிக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டது, தூக்கி செல்லப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் சோகக்கதைகள், இடிக்கப்பட்ட வீடுகள் என்று பெரும் பட்டியல் அதில் தரப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் மாப்ளா முஸ்லீம்களால் அங்கே இடிக்கப்பட்டோ, சேதப்படுத்தப்பட்டோ உள்ளன. அந்த ஆலயங்களில் நுழைந்து சொத்துகளை சூறையாடிவிட்டு[7], அங்கே ஆவினங்களை கொன்று அவற்றின் தசைகளை அங்கிருக்கும் கடவுள் சிலைகளின் மீது மாலையைப் போன்று போடுவதை[8] இவர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள். கற்பனை செய்துபார்க்கவும் முடியாத கொடூரங்களை அவர்கள் மலபாரில் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
…இந்த மாப்ளா கலவரங்களின் போது பல இடங்களில் அச்சுறுத்தி வலுக்கட்டாயமாக இந்துக்களை இஸ்லாமியர்களாக மதம் மாற்றியுள்ளனர்[7]. வன்முறை முடிந்த பின்பும் இவர்கள் இந்துவாக தமது சமூகத்திற்கு திரும்ப முடியாததற்கு இரண்டு காரணங்கள், ஒன்று – இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேற முயல்பவர்களுக்கு அந்த சமுதாயம் தரும் அதீத தண்டனை[9], இரண்டாவது – இந்து மதம் திரும்பவும் அவர்களை தன்னிடையே அழைத்துக்கொள்ள மறுத்து கதவுகளை மூடிவைத்திருப்பது[10].
——
குறிப்புகள்:
பனிங்கர் – Dr. J. J. Banninga, an American graduate of the Western Theological Seminary, spent forty two years in India, serving for 25 years as head of the Union Theological Seminary at Pasumalai in South India.
[1] – மாப்ளாக்கள் – இந்திய கரைகளில் வந்திறங்கிய தாற்காலிக அரபு தந்தைகளுக்கும் இந்திய பெண்களுக்கும் பிறந்தவர்கள். அரபிகளைவிட அந்தஸ்து குறைவானவர்கள். இஸ்லாம் பரவிய இடமெங்கும் இந்த வித்தியாசம் இருந்த்து. அரபு எஜமானர்களுக்கும் அடிமைப் பெண்களுக்கும் பிறந்தவர்கள் மாவ்ளாக்கள்(மாவளி- பன்மை) என்றழைக்கப்பட்டவர்கள் பல சமயங்களில் இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட போரில் பிடிக்கப்பட்ட மாற்றுமதப் பெண்களுக்கு பிறந்து வேறு வழியின்றி இஸ்லாமியர்களான பிள்ளைகளையும், பிடிமக்களையும் குறிக்கிறது – இஸ்லாமிய வரலாறெங்கும் அரபுகளுக்கும் மாவ்ளாக்களுக்குமான வித்தியாசம் நீடித்தது. மாவ்ளாக்கள் என்றால் நேரடியாக அடிமை என்றர்த்தமும் உண்டு. இஸ்லாத்துக்கு முந்தய காலத்தே மாப்ளாக்கள் இருந்திருக்கின்றனர் என்கின்றனர். அது கேரளக்கரைகளுக்கு தாற்காலிகமாக வந்த அரபு வியாபாரிகளுக்கும் இந்து பெண்களுக்கும் பிறந்த குழந்தைகளை குறிக்கும் பொதுச்சொல்லாக இருக்கலாம். கிறிஸ்துவ மாப்ளாக்கள் பற்றிய குறிப்புகள், அவர்கள் திப்பு சுல்தானின் படையெடுப்புகளின் போது வலுக்கட்டாயமாக முகமதியர்களாக மாற்றப்பட்ட்தை காட்டுகின்றன.
பார்க்க: The Rise of Islam by Mathew Gordon, page 41. “Known as mawali (sing- mawla), these were formerly prisoners of war and their descendents; most were Persian speakers. Enslaved in large numbers during the Arab-Islamic campaigns, these were settled (or chosen to settle) in Arab garrison cities. They attached to Arab tribes through clientage, and, in most cases converted to Islam.” திருநெல்வேலி முஸ்லீம்கள் தங்களை மாப்ளா முஸ்லீம்கள் வழி வந்தவர்கள் என்றே கருதுகின்றனர். http://www.geocities.com/kadayanallur_muslims/kadayanallur_history.html?20051/
[2] – ஷஹீது – அல்லாஹ்வுக்காக போரிட்டு மடிபவர்கள். இது நடைமுறையில் முஸ்லீம் மத த்துக்காக போரிட்டு மடிபவர்களையும் குறிக்கிறது. இந்தவகை மரணத்தை எய்துபவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் பெண்களையும், அவர்களுடன் கூடும் காம வலிமையையும் தருவார் என்பது ஜிகாத் பற்றிய முக்கிய இஸ்லாமிய நம்பிக்கைகளுள் ஒன்று.
[3] – ஹூரிகள் – சுவனக் கன்னியர். இவர்களைப் பற்றிய விவரணைகளை இஸ்லாமிய நூல்கள் எங்கும், இஸ்லாத்தை முஹமது தோற்றுவித்த நாள் முதல் காணலாம். வெண்மையான நிறமும், பெருத்த மார்புகளையும் அழகிய கண்களையும் உடைய இவர்கள், ஷஹீதுகளின் காம இச்சைகளை தீர்த்து வைப்பவர்களாகவும் தமக்கென சுயமான மன இச்சைகள் இல்லாதவர்களாகவும் இவர்கள் ஹதீதுகளில் சித்தரிக்கப்படுகின்றனர்.
[4] – காலிஃபேட் – இஸ்லாமிய மதவாதிகளின் கையில் ஆட்சியதிகாரம் இருக்கும், மதவாத ஷரீய்யா சட்டமே அரசாங்கத்தின் சட்டமாக இருக்கும், உலகளாவிய ஒரு மத அரசு. இப்படிப்பட்ட உலகளாவிய காலிஃபேட்டை நிறுவது தமது இறுதி நோக்கம் என்று அல் குவைதா அறிவித்துள்ளது. இது சம்பந்தமான இங்கிலாந்து அரசின் ஆய்வுகளை இங்கே காணலாம்: “They assert that the solution to this problem is to eradicate Western influences from the Muslim world, replace existing governments with a supranational “caliphate” and impose a strict and exclusive form of government based on their particular interpretation of Sunni Islam.” http://www.mi5.gov.uk/output/Page546.html
[5] – மாப்ளாக்களை விட கடுமையான கொடுமைக்கு இந்து குடியானவர்கள் உள்ளானர்கள். பல சமயங்களில் நம்பூதிரி மற்றும் நாயர் (ஜன்மிமார்) நிலங்களில் மாப்ளாக்கள் மேலாண்மையில் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஆனால், மாப்ளாக்களின் கலவரத்தில் இவர்களும் குறிவைத்து தாக்கப்பட்டார்கள், காஃபிர்கள் என்ற காரணத்தினால்.
[6] – இதில் குறிப்பிடப்பட்டுள்ள மகஜர், நிலாம்பூர் ராணியால் அளிக்கப்பட்டது. (India and the British: A Quest for Truth By Patricia Kendal ).
[7] – மாப்ளா கலவர ஜிகாதில் இடிக்கப்பட்ட இந்து ஆலயங்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டும். இந்த ஜிகாதில் 320 இந்து ஆலயங்கள் உடைத்து அழிக்கப்பட்ட்தாகவும், 900 இந்துக்கள் பயங்கரவாத் அச்சுறுத்தலின் மூலம் முஸ்லீமாக மதம் மாற்றப்பட்ட்தாகவும் conroy wood தெரிவிக்கிறார். http://repository.upenn.edu/cgi/viewcontent.cgi?article=1000&context=uhf_2008
இறந்த இந்துக்களின் எண்ணிக்கை பற்றிய பல்வேறு தகவல்கள் கிட்டுகின்றன. அதே போன்று பிரிட்டிஷ் ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட மாப்ளாக்கள் பற்றிய எண்ணிக்கை குறித்தும் உறுதியான தகவல்கள் இல்லை. இரண்டாயிரத்து முன்னூறு மாப்ளாக்களும், 500-600 பொதுமக்களும் கொல்லப்பட்டதாக நயீம் குரேஷி தனது Pan Islam in British Indian Politics நூலில் குறிப்பிடுகிறார். மற்றொரு இட்த்தில், இந்துக்களைப் போல பத்துமடங்கு முஸ்லீம்கள் பாதிக்கப்பட்ட்தாக செய்திகளை மேற்கோள் காட்டி குறிப்பிடும் நயீம் குரேஷி, வலுக்கட்டாயமாக இந்துக்கள் முகமதியராக மதம் மாற்றப்பட்டதையும்(பக்கம் 456) சுட்டிக்காட்டுகிறார்.
[8] – முதலில் சிந்து பிரதேசத்தில் நிகழ்ந்த இஸ்லாமிய ஜிகாதிலும், இது பின்பற்றப்பட்டிருப்பதைக் காணலாம். சிந்து மாகாணத்தின் முல்தானை கைப்பற்றிய முகமது பின் காசிம், அங்கிருந்த சூரியனார் கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டிருந்த சூரியதேவனின் சிலைமீது மாட்டிறைச்சியை தொங்கவிட்டான்(அல் பெருனி). மாற்றுமதங்களின் புனித்த்தலங்களுக்கும், கடவுள்களுக்கும் சக்தியில்லை என்பதைக் காட்ட இது போன்ற செயல்களில் முகமதியர்கள் ஈடுபட்டனர்.
[9] – கடவுளால் அளிக்கப்பட்டதாக முகமதியர்கள் நம்பும் ஷரீயத்து சட்டத்தின் படி, முஸ்லீமாக இருக்கும் ஒருவர் வேறு மதங்களுக்கு மாறினால் அவருக்கு மரண தண்டனை தரப்பட வேண்டும். இதையொட்டி ஆஃப்கானிஸ்தான், ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் மரண தண்டனை அளிக்கப்படுகிறது. பார்க்க: http://www.crosswalk.com/news/religiontoday/11582099/
http://www.cbsnews.com/stories/2006/03/22/world/main1428951.shtml
[10] – சரித்திரமெங்கும் இந்து சமூகம் தன்னகத்தே மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள தொடர்ந்து சேர்த்துக் கொண்டே வந்துள்ளது. ஆனால், மத்திய கிழக்கின் தேவாலயங்கள் இஸ்லாமிய தாக்குதல்களின் காரணமாக மதமாற்றங்களில் ஈடுபடாத்துபோன்று, இந்து சமூகமும் தன்னகத்தே மதம் மாறி வந்தவர்களை சேர்த்துக்கொள்ள மறுத்தது. ஆனால், இந்து சமூகம் தன்னம்பிக்கை பெறும்போதெல்லாம் மீள்-மதமாற்றங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக விஜயநகர சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திய புக்கராயர் முஹமது பின் துக்ளக்கினால் இஸ்லாமியராக மதம் மாற்றப்பட்டு மீண்டும் இந்து சமூகத்துக்கு திரும்பியவர். சிவாஜியின் பிம்பம் எனக்கருதப்பட்ட நேதாஜி பால்கர் வாள் முனையில் முகலாயர்களால் முஹம்மது குலி கானாக மதம் மாற்றப்பட்ட பின்னர், சிவாஜியை சந்தித்து மதம் திரும்பி இந்து சமூகத்தில் இணைந்து கொண்டார். மாப்ளா கலவரங்களைத் தொடர்ந்து இந்துமகாசபையின் மதன் மோகன் மாளவியா, அச்சுறுத்தி மதம் மாற்றப்பட்டவர்களை மீண்டும் இந்து சமூகம் தன்னகத்தே சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்[Hindu Muslim Relations in British India by G.R.Thursby, pages162-164].
[11] – எர்னாடு மற்றும் வள்ளுவநாடு ஆகிய இரு பிரதேசங்களும் இஸ்லாமிய அரசாக அறிவிக்கப்பட்டன. இந்த இரு பிரதேசங்களிலும் மாப்ளா முஸ்லீம்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்தனர்.
பின் குறிப்பு : 1922ல் நிகழ்ந்த மாப்ளா கலவரங்கள் கேரளாவில் பாரிய அளவில் நிகழ்ந்தன. ஆனால், இதைத் தொடர்ந்து இந்தியாவெங்கும் ஆங்காங்கே இஸ்லாமியர்கள் கலவரங்களில் ஈடுபட்டனர். முல்தான்(பஞ்சாப்), அஜ்மீர்(ராஜஸ்தான்), சிந்து மாகாணம், ஜபல்பூர்(உபி), ரேபரேலி(உபி) ஆகிய இடங்களிலும் கலவரங்கள் நிகழ்ந்தன.
http://repository.upenn.edu/cgi/viewcontent.cgi?article=1000&context=uhf_2008
மாப்ளா கலவரங்கள் பற்றிய தகவல்கள் பொது ஊடகங்களில் வெளியாகி இந்து சமூகத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தின. இதே சமயத்தில் நிகழ்ந்த முல்தான் கலவரங்களில் நிகழ்த்தப்பட்ட கொலைகள், மற்றும் கற்பழிப்புகள் ஆகியவையும் இதனுடன் சேர்ந்து இந்து மகாசபை வலுவான அமைப்பாக உருவாக வழிவகுத்தது.
இஸ்லாமிய மத்திலிருந்து இந்து மத்த்திற்கு திரும்பியவர்களைக் குறிவைத்து இந்த ஜிஹாத் நிகழ்த்தப்பட்ட்து என்று Robert Hardgrave குறிப்பிடுகிறார். http://repository.upenn.edu/cgi/viewcontent.cgi?article=1000&context=uhf_2008
இக்கட்டுரை, ஆண்ட்ரூ போஸ்தமின் The Legacy of Jihad நூலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. http://www.andrewbostom.org/loj//content/view/143/28/

Series Navigation

நேச குமார்

நேச குமார்