This entry is in the series 20040226_Issue

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி


—-
குஜராத் பெரு நெருப்பின் வெளிச்சத்தில்
இந்தியா ஒளிர்கிறது
ஒரிஸ்ஸாவில் பாதிரியும் பிள்ளைகளும்
ஜீப்போடு எரிக்கப்பட்ட வெளிச்சத்தில்
இந்தியா ஒளிர்கிறது
இராஜஸ்தானில் கற்பழிக்கப்பட்ட
கன்னிகாஸ்திரிகளின்
கண்ணீரின் பிரதிபலிப்பில்
இந்தியா ஒளிர்கிறது
மதவெறியை வாக்குகளாக்கி
மறுபடியும் ஆட்சியைப் பிடிக்க
பேயாய் அலையும்
அரசியல்வாதிகளின் கண்களில்
இந்தியா இன்னும் ஒளிர்கிறது

—-
gk_aazhi@yahoo.com

Series Navigation