This entry is in the series 20031010_Issue

நெப்போலியன், சிங்கப்பூர்


என்
இதயக் கூட்டிலிருந்து
பட்டாம் பூச்சிகளை
அவிழ்த்து விட்டபின்
மகரந்த வாசம்
எனதற்றுப் போனது……

திசைகளற்ற
தீர்வை நோக்கி
புறப்பட்ட
அவைகளின் பயணம்
பள்ளதாக்குகளில்
இளைப்பாறப்பட்டது……

இடையில் சந்தித்த
மலர்களுக்கெல்லாம்
அவைகளால்
தரப்பட்ட முத்தம்
மறு விடியலின்
பூப்பின்போது
புது வண்ணக்காயமாய்
சிவந்திருந்தது……

அந்தியின் சந்திப்பில்
கூடு நோக்கி
வந்தடையும்
அவைகளுக்கான
என் இதயம்
நாள்தோறும்
இது போன்ற
பாடல்களாலேயே
அவைகளற்ற
இருப்பை
அவைகள் ஆக்கும்……!
— நெப்போலியன்
சிங்கப்பூர்

kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation