This entry is in the series 20010618_Issue

ராவ்


தேவையான பொருட்கள்

கெட்டி அவல் 2 கோப்பை

காய்கறித்துண்டுகள் 1 கோப்பை

இஞ்சிப் பூண்டு பசை 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் 4 (தேவையான அளவு)

முந்திரிப் பருப்பு 10

பட்டைக்கிராம்பு தாளிக்க

வெங்காயம் நறுக்கியது 1/2 கோப்பை

கொத்தமல்லி தழை, புதினாத் தழை, எண்ணெய் அல்லது நெய், உப்பு தேவையான அளவு

செய்யும் முறை

வாணலியில் எண்ணெய்(அல்லது நெய்யை) ஊற்றி பட்டைக்கிராம்பைத் தாளித்து, வெங்காயம் பச்சை மிளகாய், முந்திரிப் பருப்பை வதக்கி அதனுடன் இஞ்சி, பூண்டு போட்டு காய்கறிகளையும் போட்டு வதக்க வேண்டும்.

காய்கறி வெந்தவுடன் உப்பு போட்டு ருசி பார்க்கவும்

அவலை நன்றாகக் கழுவி பிழிந்து கொள்ளவும். இப்படிப் பிழிந்த அவலை போட்டு நன்றாகப் பிரட்டி, கொத்தமல்லி புதினா போட்டு பிரட்டி, சிறிது நேரம் தம்மில் வைக்கவும்.

**

இது காலை சிற்றுண்டி வகை.

Series Navigation