அழகியலும் எதிர் அழகியலும்

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


இருபதாம் நூற்றாண்டின் முடிவில் அழகியல் கோட்பாடாக கிரீன்பெர்க் மாடனிசம் பொதுவாக நிலைகொண்டிருந்தது.நவீனத்துவம் தன்னளவில் கலைமதிப்பீடுகளை நிரம்ப பெற்றிருந்தது.இந்த சூழல் கலைக்கும்,அழகியலும் நிரம்ப நெருக்கடியாக அமைந்தது.
பிரஞ்ச் விமர்சகரும்,தத்துவவாதியுமான தீரே டி துவே குழந்தையை குளிப்பாட்டிய பிறகு தூரவீசுவதற்கு சிலர் தயாராக இருந்தனர் என்று இந்த சூழலை பற்றி குறிப்பிட்டார்.1983 ஆம் ஆண்டு மாடனிசத்தையும்,அழகியலையும் மறுத்து The Anti-Aesthetic: Essays on
Postmodern Culture. என்ற ஒரு நூல் வெளிவந்தது.உன்னத கலையே உயர்வானது என்று நவீனத்துவம் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.அழகும்,அழகியலும் பண்பாட்டின் ஒரு பகுதி என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்.ஆகவே தான் எதிர் அழகியல் பற்றிய பார்வை இப்போது முக்கியமாக இருக்கிறது.எதிர் அழகியலை விளக்கும் போது அந்த நூலின் ஆசிரியர் பாஸ்டர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘Anti-aesthetic’ . . . signals that the very notion of the aesthetic, its network of ideas, is in question here: the idea that aesthetic experience exists apart,without ‘purpose,’ all but beyond history, or that art can now effect a world at once (inter)subjective, concrete and universal—a symbolic totality. Like ‘postmodernism,’ then, ‘anti-aesthetic’ marks a cultural position on the present: are
categories afforded by the aesthetic still valid?’

நவீனத்துவம் அழகை சமூகம் மற்றும் அரசியலில் இருந்து தனித்து பிரித்தெடுத்தது.ரஸ்கின் போன்றோர் ஒழுக்கத்துக்கும்,அழகியலுக்கும் சம்பந்தமில்லை என்ற நிலைபாடை முன்னமே கண்டித்திருந்தனர்.கலையின் மதிப்பீடுகளுக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசமுள்ளது என்ற நவீனத்துவ பார்வை காலாவதியாகிவிட்டது.அழகியலுக்கு புதிய வரையறைகளை உருவாக்கி கொண்டதன் மூலம் எதிர் அழகியல் உருவாகியது.ஆனால் கிரீன்பெர்க் நவீனத்துவத்தில் அழகியலின் மதிப்பீடுகள் ஏற்கனேவே மாறத்துவíகியிருந்தது.கலையை அரசியலாக்கும் எதிர் அழகியலை அப்போதே சிலர் கண்டிக்க துவíகுகிறார்கள்.எதிர் விளைவும்,கலகமும் அழகியல் மாதிரிகளாகிறது. 1990 க்கு பின்னர் அழகிற்கு திரும்புகள் என்ற கோஷத்துடன் தற்கால கலை விமர்சனம் மீண்டும் குரல் ஒலித்தது.பல முன்னணி கலாசாலைகள் இலக்கியம்,பண்பாட்டு ஆய்வுகள்,தத்துவம் போன்றவற்றில் அழகையும்,அழகியலையும் போதிக்க துவíகின.இந்த முன்னேற்றத்தின் அடிப்படையில் பல கலை கண்காட்சிகள் நடைபெற்றன.உதாரணமாக 1999 ஆம் ஆண்டு வாஷிíடனில் உள்ள ஹிர்சான் மியூசியம் மற்றும் ஸ்கல்ப்சர் கார்டன் Regarding Beauty:A View of the Late Twentieth Century. என்ற பெயரில் பல ஆக்கíகளை காட்டியது.1990 களில் மீண்டும் அழகு விவாத பொருளாக மாறுகிறது.அழகு என்பது எதிர் அழகியலில் உள்நோக்கு முறையை கொண்டிருந்தது.முந்தைய நவீனத்துவவாதிகளும் ஏறக்குறைய எதிர் மனோபாவத்துடனே அழகியலை பார்த்தனர்.எழுத்தாளர்களும்,கலைஞர்களும் அவரவர்க்கான பார்வையில் அழகியலை விளக்க முற்ப்பட்டனர்.கிரீன்பெர்க் மாடனிசமும்,நியூமன் சப்லைம் ஆகியவை பிந்தைய மாடனிசத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தன.அவை ஆண் பார்வையை கொண்டிருந்தன என்ற பால் அரசியலை பல எழுத்தாளர்களும் விமர்சனமாக முன்வைத்தனர்.கிரீன்பெர்க் வலியுறுத்துவது எல்லாம் வலிமை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது மட்டுமே.அழகு என்பது பெண்மொழியை சொல்ல வேண்டும்.ஆண் மொழியை மட்டும் சொன்னால் போதாது.இதனாலே அழகு குடும்ப நிறுவனமாக,ஆணாதிக்க சிந்தனை கொண்டதாக,மனிதயின அழிப்பை மேற்கொள்வதாக,ஆட்சிக்குட்படுத்துவதாக அமைந்தது.டேவ் ஹிக்லி,வெட்னி ஸ்டைனர் போன்ற விமர்சகர்களும் அழகு ஆணாதிக்கமாக கற்பிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.1993 ஆம் ஆண்டு The Invisible Dragon: Four Essays on Beauty என்ற நூலில்
அழகு பற்றிய கேள்விகள் காத்திரமாக இருந்தன.

the cultural demotic that [formerly] invested works of art with attributes traditionally characterized as ‘feminine’—beauty, harmony, generosity, etc.—now validates works with their ‘masculine’ counterparts—strength, singularity,autonomy, etc.—counterparts which, in my view, are no longer descriptive of conditions.

ஹிக்லி குறிப்பிடும் போது தற்கால கலையில் பாலின அரசியல் எப்படி இருக்கிறது என்றால் ஹோமோசெக்ஸுவலை கலையாக்குவது கூட தப்பில்லை என்ற வகையில் இருக்கிறது,ஸ்டைனர் தமது The Trouble with Beauty (2001) என்ற நூலில் மேற்கத்திய மரபு பெண்களை அழகு பாவைகளாக மட்டுமே கருதியது என்பதை ஆணித்தரமாக சொன்னார்.அவர் டச்சு கலைஞர் மெர்லின் துமாஸ் போன்றவர்களது நிலைபாடை ஆதரித்தார்.

(They say) Art no longer produces Beauty.
She produces meaning
but
(I say) One cannot paint a picture of
or make an image of a woman
and not deal with the concept of beauty

ஸ்டெய்னர் டுமாஸ் மற்றும் கிளிண்டி செர்மான் ஆகியோர் பெண்களை மாடல்களாக பயன்படுத்துவதை கேள்விக்கேட்டனர்.செர்மான் பெயரிடப்படாத படத்தின் புகைப்படíகள் என்ற பெயரில் தானே மாடலாக நடித்த புகைப்படíகளை கண்காட்சிக்கு வைத்து சிறந்த ஹாலிவுட் கிளாமர் என்ற பெயரை பெற்றார்.1990 ல் ஜிம் ஹாட்ஜஸ் என்பவர் ஒரு மலரை பெண்ணாக அழகின் அம்சமாக,குறியீடாக பயன்படுத்துவதை எதிர்த்தார்.பெண் ஒரு மலரல்ல அவள் ஒரு உயிர் என்று விவாதம் மேற்க்கொண்டார்.இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அழகு முன்னேற்ற அரசியலின் கருவியாக சில சமயம் பதினெட்டாம் நூற்றாண்டிலும்,பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் செயல்ப்பட்டதை போன்றாகியது.தற்காலத்தில் கவனம் பெற்ற அழகு திரும்புதல் அல்லது புதுபித்தல் என்ற வகைமாதிரியை கொண்டது.தத்துவவாதியும் கலைவிமர்சகராகிய ஆர்தர் சி டாண்டோ அழகிற்க்கு மறுவரைவிலக்கணத்தை அளித்தார்.1992 ஆம் ஆண்டு அவரது ஒரு கட்டுரையில் அழகிற்க்கு என்ன நேர்ந்தது? என்று விளக்கி டொரதெ ராக்பர்ன் மற்றும் ராபர்ட் மான்கோல்டு ஆகியவரின் கலை கண்காட்சிகளை வெகுவாக புகழ்ந்தார்.அவர்களை பற்றி அவர் சொல்லும் போது..

‘Rockburne and Mangold stand in a certain continuity with a past that unites them with classical antiquity, with marble forms and cadenced architectures, with clarity, certainty, exactitude and
the kind of universality Kant believed integral to our concept of beauty.’

அந்த கட்டுரையிலே டாண்டோ அழகியலுக்கும் அரசியலுக்குமான வித்தியாசíகளை விளக்கினார்.அழகு என்பது ஒருவகையில் நிலையானது அது கடந்தகாலத்தை திரும்ப கொண்டுவந்து காட்டினாலும் சரி நிகழ்காலத்தினை பிரதிபலித்தாலும் சரி அழகு மயíகவைக்கும் ஆற்றல் உள்ளது.அதை அற்ப காரணíகளுக்காக் அரசியலாக்கும் போது அழகு தெரிவதில்லை.அரசியலே தெரியும்.இதற்கெல்லாம் மேலாக மாடனிசத்துக்கு முன்பு அழகு தொழிற்பட்ட விதம் குறித்து அதிகாமாக விளக்கினார்.ஒரு வகையில் அழகின் செவ்வியல் தன்மை அழகியலாக இருக்கிறது என்றார்.பதினெட்டு,பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன்னோடிகள் சாதித்த அழகு கலைபடைப்புகள் அவரின் கவனத்தை கவர்ந்தது.விíகிள்மான்,சில்லர் ஆகியோரின் கிரேக்க கலையை மறுபடைப்பு செய்வது குறித்து விவாதித்தார்.

‘Then . . . let him return, a stranger, to his own century; not,however, to gladden it by his appearance, but rather, terrible like Agamemnon’s son, to cleanse and to purify it’.

இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் செவ்வியல் மயக்கம் கலையாக இருந்தது என்று புதிய வியாக்கியானம் அளித்தார்.விíகிள்மானின் In Blue Venus மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறது என்றார்.பிரஞ்ச் கலைஞர் கிலின் உருவாக்கிய சிற்பíகள் கிரேக்க மாதிரியை முன் கொண்டவை என்பதை விளக்கினார்.வாட்ஸ்ன் The Wife of Pygmalion என்ற சிற்பம் புராதனத்தை நவீனத்தோடு இணைத்தது.நவீன மாடன் ஆர்ட் புராதனகலையை மறு உருவாக்கம் நிகழ்த்தியது.நீல வர்ணத்தில் அழகு தேவதையாக வீனஸ் வந்தாள் என்ற கிரேக்க சிந்தனை நீல வர்ணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது

அதன்பிறகு இத்தாலிய கலைஞர் ஜியூலிபோலினியின் Venus de’Medici மிகச்சிறந்த நவீன சிற்ப்பமாக கருதப்பட்டது.

மேற்கத்திய மரபில் கலை தொழிற்நுட்பத்தில் போல செய்யும் உருவாக்கம் நவீன காலத்தில் எப்படி மாறுப்பட்டிருக்கிறது என்பதை போலினி நிறுவினார். அதை மிமிசிஸ் என்ற பெயராலே அழைத்தார்.சிற்ப கலையில் ஒரு வடிவம் இரண்டு விதமாக ஆனால் ஒரே மாதிரியானதாக பெண் உடலை காட்டியதை அனைவரும் பாராட்டினர்.புராதன சிற்பகலையில் ஒரே மாதிரியான உருவíகளை படைப்பது மிகவும் புகழ்மிக்கதாக இருந்த்தது.போலினி வலதும்,இடமும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும் என்பதில் முக்கிய கவனம் செலுத்தினார்.இதன் விளைவாக கோணíகள் முக்கியமானவை என்பதை மாடனிச கலை தகவமைத்துக் கொண்டது இதனால் கோண்íகள் குறித்த பெருவாரியான கலைப்படைப்புகள் உருவாகின.

நவீனத்துவ கலை புதிய வரையறைகளை அழகுக்கும்,அழகியலுக்கும் அளித்து வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டது.ஆனால் அழகும்,அழகியலும் மீறப்படாமல் அதே மாதிரி பாதுக்காக்கப்பட்டது,ஆனால் நவீனத்துவத்தை எதிர்த்துக் கொண்டு அழகும்.,அழகியலும் உருவாகிய போது புராதன கலையின் தேவை இன்னொரு முறை கூட தொழிற்ப்பட்டது.மேரி துபியின் அழகின் மர்மம் என்ற கலைப்படைப்பு எதிர் அழகியலின் மிகச்சிறந்த உதாரணமாக வர்ணிக்கப்படுகிறது.

கிரேக்க கலைஞர் ஜென்னிஸ் கௌனலிஸ் என்பவரது பெயரிடப்படாத என்ற என்ற சிற்ப்பக்கலை புராதன சிற்ப்பகலையில் இருந்து மாறுப்பட்டு நவீனகலையை தாண்டி தற்கால சிற்ப்பகலையை சொல்லுவதாக இருந்தது.புராதன சிற்பக்கலையை மையமாக கொண்டு
Apollo Belvedere என்ற சிற்பம் மிகவும் புகழ்பெற்றதாகும்.புஸ்லி என்பவரின் The Artist in Despair over the Magnitude of Ancient Fragments என்ற நூல் நவீன சிற்பக்கலை மற்றும் கலைகள் எவ்வாறு புராதன கலையை மறு உருவாக்கம் நிகழ்த்தியது என்பதை விளக்குகிறது.பளிíகு கற்களிலும்,துணிகளிலும்,ஒவியíகளிலும் நவீனத்துவ கலைப்படைப்புகள் எம்மாதிரியான அழகை பிரதிபலித்தன என்பதை சுட்டி காட்டுகிறார்.ஆக அழக்குக்கு திரும்புகள் என்ற கோஷம் அழகியலை மீண்டும் பேச வைத்தது.பின் நவீனத்துவ கலையாக அழகியல் மாறிய போது பழமையின் கூறுகள் புது வடிவில் வெளிகாட்டத்துவíகியது.மற்றும் இதுவரை வெளிச்சத்துக்கு வராத அனேக பண்பாடுகளின் கலையம்சíகளை புதுவகையில் பின் நவீன கலை பறைச்சாற்றியது.புகைப்படகலையில் கூட அனேக மாறுதல்கள் நிகழ்ந்தன.காட்சி தோற்றம் மெருகேறியது.அழகின் பாய்ச்சல் எல்லாவற்றையும் கபளீகரம் செய்து கொண்டது.ராபர்ட் மப்ளதோரப்பின் அஜிட்டோ,ஸ்டடி போன்ற புகைப்படíகள் பேர் சொல்லுவதாக அமைந்தது.சொந்த உடலை சக்திமிக்க ஆயுதமாக அழகை பரிணமித்த போதும்,புராதன அழகை மெருகேற்றி நவீன படுத்திய போதும் அழகியலின் சாரமோ அதன் வீச்சோ சலனமில்லாமல் அடுத்த கட்டத்தை நோக்கியே பயணித்தது.பிந்தைய மனபதிவுவாதம் வெறுமனே பழமை ஏக்கத்தை மட்டும் காட்டாமல் எதிர் அழகியலுக்கு அடியெடுத்து கொடுத்தது.கீரின்பெர்க் மாடனிசம் எதிர் அழகியலுக்கு அடித்தளம் இட்டபோதும் அழகியல் குறித்த மாறுப்பட்ட பார்வைகளும்,ஆக்கíகளும் குறைவில்லாமல் வெளிவந்தன.ஆக்னஸ் மார்டின் அழகு என்பது வாழ்வின் மர்மம் என்றதலைப்பில் எழுதிய கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.

‘When a beautiful rose dies,beauty does not die because it is not really in the rose. Beauty is an
awareness in the mind. It is a mental and emotional response that we make.’

துணைநூற்பட்டியல்

1. Thierry de Duve, Clement Greenberg between the Lines, trans. Brian Holmes, Paris:
Éditions Dis Voir, 1996, p. 108.
2. Hal Foster, ed., The Anti-Aesthetic: Essays on Postmodern Culture, Port Townsend,
Washington: Bay Press, 1983, p. xv.
3. Ibid., pp. xi–xii.
4. Dave Hickey, The Invisible Dragon: Four Essays on Beauty, Los Angeles: Art issues.Press, 1993, pp. 47, 41.
5. Wendy Steiner, The Trouble with Beauty,London: William Heinemann, 2001. See also
Francette Pacteau, The Symptom of Beauty,London: Reaktion Books, 1994.
6. Marlene Dumas, ‘on Beauty’ (1995), quoted in Wendy Steiner, The Trouble with Beauty,
London: William Heinemann, 2001, p. 216.
7. Arthur C. Danto, ‘Whatever Happened to Beauty?’ (1992), repr. in Embodied Meanings:
Critical Essays and Aesthetic Meditations, New York: Farrar Straus Giroux, 1994, p. 254.
8. Friedrich Schiller, On the Aesthetic Education of Man: In a Series of Letters (1795),
ed. and trans. Elizabeth M. Wilkinson and L. A.Willoughby, Oxford: Clarendon, 1967,
p. 57.
9. Agnes Martin, ‘Beauty Is the Mystery of Life’ (1989), repr. in Bill Beckley, ed. with
David Shapiro, Uncontrollable Beauty: Toward a New Aesthetics, New York: Allworth Press,
1998, pp. 399–401.
10. Ivan Gaskell, ‘Beauty’, in Robert S. Nelson and Richard Shiff, eds, Critical Terms for Art
History: Second Edition, Chicago and London:University of Chicago Press, 2003, p. 279.

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்