அப்பாவின் மரணம்

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

றகுமான் ஏ. ஜெமில்


அப்பா முதற்கொண்டு
தொழுவத்து மாடுகள் வரையாக
எல்லாமே தனதின் காலடியில்
விழுந்து கிடப்பதுபோலவே மிதந்தாள் அம்மா
திமிர் படிந்த நடத்தைகளோடு

மீன் சந்தை முதலாக
தோட்டம் தொறவுவரையென விரியும்
எல்லாவிதமான பாடுகளையும்
அள்ளிச் செருகிக் கொண்டாள் அம்மா
அப்பாவின் கிரீடத்தை அலங்கரிக்கும்படியாக

மறுகாவும் மறுகாவுமாய்
அப்பாவின் கையாலாகாத்தனங்களை
படுக்கையிலுமாகக் கிளறி
கொட்டிக்கொண்டே கிடந்தாள் அம்மா
ராட்சத தேள்மாதி
அப்பாவின் சாபத்தை செமிக்கும்படியாக

இன்னும் யாரேனும் தன்னை
கொடூ¡¢யென்று சொல்லாதபடியாக
அப்பாவின் அறுந்துபோன
பட்டன்களை தைப்பதுபோலவுமாய்
பாசாங்கும் செய்துகொள்வாள் அம்மா
பழைய கடன்காறிமாதிரி

அப்பா இறந்தபோது
தன்வசம் எதுவுமே இல்லாதமாதிரி
இடிந்துபோய் கிடந்தாள் அம்மா
இருண்டதொரு உலகத்துள்

றகுமான் ஏ. ஜெமில், இலங்கை

Series Navigation

றகுமான் ஏ. ஜெமில்

றகுமான் ஏ. ஜெமில்