This entry is in the series 20110508_Issue

சித்ரா


___________________

தூக்க சொல்லி
கால் சுற்றி வந்து
புடவை கொசுவத்தில்
முகம் புதைக்கிற வேளைகளில்..

தூக்குகிற அம்மாவாயிருந்தால்
தோளில் சாய்ந்து
விரல் சப்பலாம்..

தூக்காத நேரங்களில் !!!
தூக்காத நேரங்களிலும்
அழாமல் இருக்க
கவிதை எழுதி
பழகி கொள்கிறேன்..

கை கோர்த்து நடக்கையிலும்
கைகள் வீசி நடக்கையிலும்
அப்படியாகிலும் இப்படியாகிலும் –

விளையாட்டு மட்டும்
கோர்த்த கைகளுடனோ
கையிலுள்ள பொம்மையுடனோ
நிறுத்தமில்லாமல் …

Series Navigation