அதீத வாழ்வு

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

சாரங்கா தயானந்தன்


விரித்திருந்த வெண்தாளாய்
வாழ்க்கைவெளி .
வர்ணங்களும் தரப்பட்டிருந்தன.
நிர்ணயிக்கப்பட்ட வர்ணங்களை
நிராகரிப்பதில் பெருமையுறும்
என்னிடத்தில் நிர்ச்சலனம்.
வர்ணங்களின் இணைவிலான
புதிய வரைவுருக்களை
மாற்றி மகிழ்ந்தது மனம்.
அவற்றின் முகங்கள்
எவரது கற்பனையுள்ளும் சிக்காது
இறந்து போன யுகத்தின்
அப்பாலும்
இனியொருநாள் வரும்
எதிர் காலத்திலும் உலவியதில்
என்மனத் திருப்தி.
ஆனால்….
ஒரு தனித்த பாலையில்
தெளிவுற ஒளிர்ந்த
எரிநட்சத்திரத்தின் உதிர்வாய்
இளமை விலகிய னைப்பு
என்னை நேற்றுலுக்கிப் போகையிலே
தோற்றதுணர்ந்தேன்.
என் நரைகளினூடு தெரியும்
மற்றவர் திரைகளிலே
ஏதேதோ ஒவியங்கள்
கிறுக்கப்பட்டும் …கீறப்பட்டும்…
என்னதோ வெறும்வெளியாய்…
ச்சே….
வர்ணக்குழம்புகளை
விசிறியடித்துக் கொண்டாவது
வாழ்ந்து பார்த்திருக்கலாம்
ஒருமுறை….

சாரங்கா தயானந்தன்

Series Navigation