” புறநானூறு கூறும் வாழ்த்தியல் முறைகள்”

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை,


நம் முன்னோர்கள் நல் மனத்துடன் பிறரை வாழ்த்தினர்- வாழ வைத்தனர். வாழ்த்துதற்கு வளமிகு பொன்னோ பொருளோ தேவையில்லை. நல்ல-தூய-சிறந்த-பண்பான-அன்பான உள்ளம் இருந்தால் மட்டுமே போதுமானதாகும். எத்தகைய நல்ல உள்ளங்களைப் பெற்றவர்கள் நம் முன்னோர்கள் என்பதனைப் புறநானூற்றில் காணலாகும் வாழ்த்தியல் முறைகளை வகைப்படுத்திப் பார்த்தாலே நன்கு புலனாகும்.
வயது முதிர்ந்தோ¡¢டத்தும் பொ¢யோ¡¢டத்தும் மற்றும் உயர்ந்தா¡¢டத்திலும் வாழ்த்துக்கள் பெறுதல் உலகியல் வழக்கமாகும். இன்றும் நாம் நடைமுறையில் இந்நற்பழக்கத்தினைக் காணலாம். சிறியவர்கள் பொ¢யவர்களின் கால்களில் வீழ்ந்தும் வணங்·கவர், அப்போது தமது கால்களில் வீழ்ந்து வணங்கியவரை,’மகராசனாக இரு’ பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துரைப்பார்கள். புகழ், கல்வி வலி வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் ஆகிய பதினாறு பேறுகளும் பெற்று வாழவேண்டும் நெப் பொ¢யோர்கள் வாழ்த்துவதையும் காணலாம். வாழ்துவது என்பது வாழ்வில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகின்றது. பழந்தமிழகத்தில் பொ¢யோர்கள் பலவகைகளில் வாழ்த்தியதனைப் புறநானூற்றின் மூலம் நன்கு அறியலாம்.
அழியாதிருக்கும் பொருள்களுடன் ஒப்புமை கூறி அத்தன்மைபோல் வாழ்க என்று கூறுவது ஒரு மரபாகும். ஞாயிறும் திங்களும் இவ்வையத்தில் என்றும் நின்று நிலவுவனவாகும். இதனை எண்ணி பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் கா¡¢க் கிழார் என்ற புலவர்,
“த்ண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
ஒண்கதிர் ஞயிறுபோலவும்
மன்னிய பெரும!நீ நிலமிசையானே” (புறம்.6)
வாழ்க என்று வாழ்த்துகிறார்.
இதேபோன்று பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் வானத்து வெய்யோன் போலவும், குளிர்ச்சி பொருந்திய சந்திரன் போலவும் உலகம் உள்ளளவும் நின்று நிலைபெற்று வாழ்வாயாக (புறம்.56) என்று வாழ்த்துகின்றார். வாட்டாற்று எழினியாதன் என்ற வேளிர் தலைவன் இரவலர்கள் போதும் போதும் எனப்புகலும் வரை வேண்டுமளவும் தருகின்றான். எம்பசிச் சுற்றம் மகிழ ஈந்த அருளோன் அவன்! அவன் மா¡¢க்கால வானிலே தோன்றும் விண்மீன்களுக்கும் நடுவே விளங்கும் வெண்ணிலவுபோல அவன் புகழ் விளங்கட்டும்(புறம்,396) என மாங்குடிகிழார் வாழ்த்துகிறார்.
அறிவியலறிஞர்களும் வானத்து மீனினை எண்ணி இயம்புதல் இயலாது அதுபோல எண்ணிக்கையற்ற ஆண்டுகள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வாழ வேண்டும் என்பதனை,
“வானத்து
வயங்குபன் மீனினும் வாழியர்” (புறம்.371)
எனக் கல்லாடனார் விண்மீன்களைக் குறிப்பிட்டு வாழ்த்துகிறார். மூவேந்தரும் ஒருங்கு வீற்றிருத்தலைக் கண்ட ஒளவையார் அவர்களை,
“வானத்து
வயங்கித் தோன்றும் மீனினு மிம்மென
இயங்கு மாமழை யுறையினும்” (புறம் 367)
என விண்மீன்களை மட்டும் கூற மனமின்றி மழைத்துளிகளிலும் வாழ்க என வாழ்த்துகின்றார்.
வானத்திலிருந்து வீழ்கின்ற மழைத்துளிகளை கணக்கிட்டுக் கூறுதல் இயலாது . அம்மழைத் துளிகள் போல கணக்கிலாத ஆண்டுகள் அம்பர்கிழான் அருவந்தை வாழவேண்டும் என்பதனைக் கல்லாடனார்,
“புல்லிய
வேங்கட விறல் வரைப்பட்ட
ஓங்கல் வானத்து றையினும் பலவே” (புறம். 385)
என்று குறிப்பிட்டு வாழ்த்துகின்றார். ஆலத்தூர் கிழார் என்ற புலவர் இமயமலைக்கே சென்று, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை, பெருமானே! நீ இமயமலைச் சாரலின்கண் பொழிந்த மழைத்துளிகளிலும் பலகாலம் வாழ்வாயாக!(புறம் 34) என வாழ்த்துகின்றார்.
நெற்களிலும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவது சிறந்த முறையாகும். மன்னன் ஒருவனை வாழ்த்த விழைந்த ஒளவையார் அவனை வாழ்த்தாது “வரப்புயர” என்று மட்டும் வாழ்த்தினார். வியந்தார்க்கு விடையாக,
“வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்”
என்று கூறி வாழ்த்துகின்றார். உயிர் வாழ்வுக்கு அடிப்படைத் தேவை நெல். நெல் இன்றேல் மன்னவன் நிம்மதியாக அரசாள இயலாது. இவற்றையெல்லாம் கருதியே நெல் மணிகள் நெருக்கமாக எண்ணிக்கையற்றிருப்பது போல் அதைவிடப் பன்மடங்கு காலம் வாழவேண்டும் என வாழ்த்தினர் பண்டையோர்.
பொறையாற்றுக்கிழானைப் புகழுமிடத்து, நீ நின் நெடுமனையின் கண் நின்னால் விரும்பப்பட்ட மனைவியோடு இனிது வாழ்வாயாக! நின் நாட்டிலே காலமறிந்து மழை பொழியட்டும்! அதன் காரணமாக நின் நிலங்கள் வேலிக்கு ஆயிரம் கலம் விளையட்டும்!
“துளியதனறிந்து பொழிய
வேலி யாயிரம் விளைக நின்வயலே” (புறம்.391)
எனக் கல்லாடனார் வாழ்த்துகின்றார். உயர்ந்த விளையுளைப்பெற்று நாடு சிறந்து அதன் காரணமாய் நீ சிறந்து வாழவேண்டுமென வாழ்த்தியநல்லுள்ளத்தினை இப்பாடலில் நாம் காண முடிகின்றது. முடத்தாமக்கண்ணியார் என்னும் புலவர் சோழன் கா¢காற்பெருவளத்தானை வாழ்த்தும்போது,
“வேலி
யாயிரம் விளையுட்டாக்
காவி¡¢ புரக்கு நாடு” (பொருநரா,)
என அவன் சோழவள நாட்டை வாழ்த்துவது ஈண்டு நினைக்கத்தக்தாகும்.
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதனை குண்டுகட் பாலியாதன்,
“கல்லென் பொருநை மணலினு மாங்கட்
பல்லூர் சுற்றிய கழனி
எல்லாம் விளையுநெல்லினும் பலவே” (புறம்,387)
என இரைச்சலுடன் ஓடிவரும் பொருநையாற்று ஆற்றுப் பாய்ச்சலால் சுற்றியுள்ள ஊர்களிலுள்ள கழனிகள் யாவற்றிலும் விளையும் நெல் மணிகளிலும் பல்லாண்டு காலம் நீ வாழ்வாயாக! என்று வாழ்த்துகிறார்.
ஆற்றிலுள்ள நுண்ணிய மணலையும் எண்ண இயலாது. அதுபோல் எண்ணிக்கையற்ற ஆண்டுகள் வாழ்ந்திட வேண்டும் எனும் பெரு விழைவால் தான் ஆற்று மணலினும் பல்லாண்டுகள் வாழ்ந்திட வேண்டுமெனப் பண்டையோர் வாழ்த்தினர். சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானை தாமப்பல் கண்ணனார் பாடும்போது, “மன்னவனே! காவோ¢ ஆறு கொணரும் மணலினும் நின் வாழ்நாள் பலவாகப் பெருகுவதாக! நீ நீண்ட காலம் வாழ்வாயாக!”
“சிறக்க நின்னாயுள்
மிக்குவரு மின்னீர்க் காவி¡¢
எக்க ¡¢ட்ட மணலினும் பலவே” (புறம். 43)
என வாழ்த்துகின்றார்.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிளநாகனார் புகழுங்காலை “மன்னனே! நீ நெடுங்காலம் வாழ்வாயாக! நெடுந்தகையே! திருச்செந்தூ¡¢ன் நெடிய முருகவேள் நிலைபெற்ற பொ¢ய கடற்கரையிலே பெருங்காற்றுத் தி
ரட்டிக் குவித்திருக்கும் மணலினும் பலகாலம் வாழ்வாயாக!
“தாழ்நீர்
வெண்டலைப் புணா¢ யலைக்குஞ் செந்தில்
நெடுவேணிலைஇய காமர் வியன்றுறைக்
கடுவளி தொகுப்ப வீண்டிய
விடுவா ழெக்கர் மணலினும் பலவே” (புறம்.55)
என வாழூத்தியுள்ளார்.
வேள் ஆய் அண்டிரனைத் துறையூர் ஓடைக்கிழார் என்னும் புலவர் புகழும்போது, ‘வள்ளலே நீ துறையூர்த் துறைமுன்னர் காணும் நுண்ணிய பல மணிலினும் பலநாள் வாழ்கவென வாழ்த்தி உண்டு மகிழ்வோம்,
“தண்புனல் வாயிற்றுறையூர் முன்றுறை
நுண்பல மணலினு மேத்தி
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே!” (புறம். 136)
என வாழ்த்தியுள்ளார்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் புகழும்போது, “அறவழி நடக்கும் குடுமியே! நீ வாழ்வாயாக! நல்ல நீரையுடைய ப·றுளி ஆற்று மணலினும் பல ஆண்டுகள் வாழ்வாயாக!
“முந்நீர் விழவி னெடியோன்
நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே” (புறம்.9)
என வாழ்த்தியுள்ளார்.
உலோச்சனார் என்ற புலவரோ மற்ற புலவர்களைப் போன்று அல்லாமல் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியை, நால்வகைப் படையும் நிறைந்து விளங்கி வெற்றியை விரும் என் கு¡¢சில் நீண்ட காலம் வாழ்வானாக!
“கடலொலி கொண்ட தானை
அடல் வெங் கு¡¢சின் மன்னிய நெடிதே” (புறம் 377)
என வாழ்த்தியுள்ளது வாழ்த்தும் முறையுள் ஒன்றாகும்.
இறைவனின் தாள் வணங்கி வாழ்த்துதல் மரபு. இதனை தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பக்திப் பனுவல்கள் மூலம் நன்குணரலாம். கடவுளர்க்கு அடுத்த நிலையில் மன்னனையும் கருதி அவன் தாள் வாழ்க எனப் பண்டைப் புலவர்கள் வாழ்த்தியுள்ளனர். இங்ஙனம் வாழ்த்துவது மரபாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தாளினைக் கோவூர் கிழாரும்(70) அதியமான் நெடுமான் அஞ்சியின் தாளினை ஒளவையாரும் (101,103) வாழ்த்துகின்றனர்.
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனின் தாள்கள் வாழ்கவென மதுரை நக்கீரரும் (395)
“ஈவோர ¡¢ய விவ்வுலகத்து
வாழ்வோர்வாழவலன் றாள் வாழியவே” (புறம்.171)
என காவி¡¢ப்பூம் பட்டினத்துக் கா¡¢க்கண்ணனார் பிட்டங்கொற்றன் தாளை வாழ்த்துவதும் குறிப்பிடத்தக்கதாகும். மன்னன் நெடிது வாழ்ந்தால் நாடு நன்முறையில் வாழும் என்பதை உணர்ந்தே புலவர்கள் அங்ஙனம் வாழ்த்தினர் எனலாம்.
தலைவனின் பகடுகளை( மாடுகளை) வாழ்த்துவது மற்றொருமுறையாகும். பகடுகள் வாழுமாயின் உழவுத்தொழில் நன்கு வளரும். அதன்காரணமாக வறுமை ஒழிந்து நாடுசிறக்கும். மன்னன் மகிழ்வுடன் வாழ்வான் என்பனவற்றையெல்லாம் உணர்ந்து பண்டைப் புலவர் பெருமக்கள் வாழ்த்தினர். மறோகத்து நப்பசலையார்,
“ஒண்பொறிச் சேவலெடுப்ப வேற்றெழுந்து
தண்பனி யுறைக்கும் புலராஞாங்கர்
நுண்கோற் சிறுகிணை சிலம்ப வொற்றி
நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தித்
தன் புகழேத்தினென்” (புறம்.383)
என கிணையை முழக்கி அவனது தலைநகா¢ன் நெடுவாசலில் நின்று அவன் பகடுகள் பலவற்றையும் வாழ்த்துகிறார்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர்க் கிழார்,”கையிலே வில்லைப் பிடித்துத் தோ¢லே நின்றவன் யார்? யாராக இருப்பினும் அவன் கண்ணி வாழ்க!
“நெடுந்தேர்க் கொடுஞ் சிபொலிய நின்றோன்
யார்கொல் வாழ்கவன் கண்ணி” (புறம்.77)
என்று வாழ்த்துவதன் மூலம் கண்ணியை வாழ்த்தும் மரபுமுண்டு என அறியலாம். வெற்றியை வாழ்த்தும் முறையும் பண்டைக் காலத்தில் இருந்துள்ளது. ஏனெனில் பண்டையோர் வீரனாக வாழவேண்டும் எனபதையே விரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. பிட்டங்கொற்றனைக் காவி¡¢ப்பூம் பட்டினத்துக் கா¡¢க்கண்ணனார் ,
“பொருநர்க் குலையாநின் வலன் வாழியவே” (புறம்.169)
என அவனின் வெற்றியை வாழ்த்தியுள்ளார்.
மாங்குடிக்கிழார் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை, இரவலர் உன் வள்ளன்மையை எடுத்துரைக்க, வஞ்சிக் கொடியர் மணமிக்க மதுவைப் பொற்கலத்தேத்தித் தர அதனையுண்டு இனிதே வாழ்வாயாக(புறம்.24) என வாழ்த்துகிறார். நீண்டகாலம் வாழ்வாயாக என வாழ்த்யதோடமையாது மகிழ்வுடன் வாழ்வாயாக என வாழ்த்தியது போற்றுதற்கு¡¢யதாகும்.
பிட்டங்கொற்றனை வாழ்த்த விரும்பிய வடமவண்ணக்கன் தாமோதரனார் என்ற புலவர், பிட்டனின் வேலும், அவன் தலைவனாகிய கொடைமிகு கோதையும் அவனோடு பகைத்த மன்னரும் நீண்ட காலம் வாழ்வாராக! (புறம்.172) எனவாழ்த்துகிறார். மாங்குடிக்கிழார் பகைவா¢ன் வாழ்நாள் நில்லாது பட்டுப்போவதாக என்று வாழ்த்துகையில், இப்புலவர் பகைவரும் வாழ்கவென வாழ்த்துவது வியப்பாகவுள்ளது. மன்னவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தன் நாட்டு வேளாண் பெருமகன் சிறுகுடிக் கிழான் பண்ணனை,
“யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய” (புறம்.173)
என வாழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு வாழ்த்துவது மன்னனின் உள்ள நிறைவைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
பாடும் தலைவனை வாழ்த்துவதோடன்றி அவன் பெற்றோரை வாழ்த்துவதும் மரபாக இருந்துள்ளது நோக்கத்தக்கது. அவன் புகழை அவனை ஈன்றவர்களும் கேட்டு உளம் மகிழ வேண்டும். அதற்கு அவர்களும் நெடுங்காலம் வாழவேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு நாஞ்சில் வள்ளுவனை ஒருசிறைப் பொ¢யனார் வாழ்த்தும்போது,
“நீ வாழியர் நின்றந்தை
தாய் வாழியர் நிற்பயந்திசினோரே” (புறம்.137)
என அவன் பெற்றோரையும் வாழ்த்தியுள்ளது நினைத்தற்கு¡¢யதாகும்.
வாழ்த்தும் முறையில் நின் இல் வாழ் மகளிர் , நின் வாசலில் சாப்பறை ஒலிப்பதைக் கேளாதார் ஆகுக என வாழ்த்துவதும் புதுமையானதாக அமைந்துள்ளது. ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடும்போது, பெருமானே! நின் இல்வாழ் மகளிர் நின் வாசலில் சாப்பறை முழங்குவதைக் கேளாதாராகுக,
“பெரும!
ஐதகல ல்குன் மகளிர்
நெய்தல் கேளன்மார் நெடுங்கடை யானே!” (புறம்.389)
என வாழ்த்துவதில் நீ மட்டும் நெடுங்காலம் வாழ்வதோடன்றி நின் இல்லத்திலுள்ளாரும் நெடுங்காலம் வாழவேண்டும் என வாழ்த்த விரும்பிய புலவர் நின் இல்லத்தில் சாப்பறையே கேட்காதிருக்கட்டும் என வாழ்த்துகின்றார். எல்லோரும் நீண்ட நாள் வாழவேண்டும் என வாழ்த்தவே நெய்தல் கேளன்மார் என்று கூறுகின்றார்.
மன்னர்களை வாழ்த்தும்போது உயர்ந்த மலைகளைப் போன்று வாழ்க என வாழ்த்தும் முறையும் புறநானூற்றில் காணப்படுகின்றது. சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் வாழ்த்தும்போது வானவரம்ப! நன்னாட்டுப் பொருந! பெருமானே!என விளித்து இறுதியில் பொன்கோட்டு இமயமலை போலவும், பொதியமலை போலவும் நெடிது வாழ்வாயாக என வாழ்த்துகின்றார்.
“முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட் டியமமும் பொதியமும் போன்றே! (புறம்.2)
துளக்கமின்றி நெடுங்காலம் வாழ்வதற்கு இமயத்தையும் பொதிகையையும் கூறுவது மரபாக இருந்திருப்பது நோக்குதற்கு¡¢யது, இன்றும் மலைபோல வாழ்க என பொ¢யோர் வாழ்த்துவது புறநானூற்றைத் தழுவியே அமைந்துள்ளது.
தான் அழிந்தாலும் உலகம் அழியாதென்பதை உணர்ந்த ஏணிச்சோ¢ முடமோசியார் வள்ளல் ஆய் அண்டிரனை வாழ்த்தும்போது,
“உலகம் உள்ளளவும் வாழ்க” என வாழ்த்தினார். “வள்ளலே! நீ ஒருவனே புலவர் எப்பொழுதும் நின் இல்லில் இருப்பதற்கு இடமளிக்கிறாய். நீ இவ்வுலகு உள்ளவரை நிலைபெற்று வாழ்வாயாக! ஒன்று மட்டும் உறுதி நீ இல்லையானால் வறுமையுற்று அதன் காரணமாகப் புலவர்களும் வாழ்வார்களோ?( புறம்.375) என்று கேட்டு வாழ்த்துகின்றார்.
ஒளவையார் நீண்ட நாள் வாழவேண்டும் எனக்கருதி அ¡¢திற்பெற்ற நெல்லிக்கனியினை அதியமான் நெடுமான் அஞ்சி அவர்க்குக் கொடுத்தான். அதனை எண்ணி வியந்த புலவர் பெருமாட்டி, “அதியர் கோமானே! சாதல் ஒழிய எனக்கு அளித்தனை. அதனால் நீயும் நீலமணிமிடற்று இறைவனைப்போல நிலைபெற்று வாழ்வாயாக” என்று வாழ்த்துகின்றார்.
“நீலமணிமிடற்று ஒருவன்போல
மன்னுக பெரும!” (புறம்.91)
தான் வாழக் கருதாமல் சாவைத்தரும் நஞ்சினை உண்டு பல்லுயிர்களையும் காத்தவர் சிவபெருமான். அதுபோன்று அதியன் தான் வாழக் கருதாமல் ஒளவைக்கு ஈந்ததை எண்ணிய பெருமாட்டியும் இறைவனைப்போன்று வாழ்க என உவமை கூறினார். கொடிய நஞ்சுண்டு சிவன் நிலைபெற்றிருப்பது போன்று நீயும் சாகாதிருத்தல் வேண்டும் எனுங் கருத்தில் தான் இவ்வாறு வாழ்த்தினார்.
மன்னர்கள் பா¢சில் கொடாத நிலையில் வறுமை அலைக்கழிக்க வாடிய நிலையில் வெந்த உள்ளங்களினின்றும் சில சொற்கள் வெடித்து வீழ்ந்துள்ளதை நாம் புறநானுற்றுப் பாடல்களில் காணமுடிகிறது. புலவர்கள் மன்னர்களால் புறக்கணிக்கப்பட்டபோது உள்ளம் குமுறி இகழ்ச்சியாய் வாழ்த்தினர்.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறன் பா¢சில் நீட்டித்தவிடத்து ஆவூர்மூலங்கிழார், “தம்மால் தர இயலும் பொருளைக் கொடுக்க இயலுமென்று கூறிக் கொடுத்தலும், யாவர்க்கும் கொடுக்க இயலாத பொருளை இல்லையென்று கூறி மறுத்தலும் தாளாண்மை உடையா¡¢டத்து உள்ளனவே. இயலாததனை இயலும் என்றலும் இயன்றதனை இயலாதென மறுத்தலும் ஆகிய இரண்டும் இரப்போரை மெலிவித்தலோடு புரப்பவர் புகழையும் குறைக்கும் வழியாகும். புலவர்கள் காணாத செயலை இன்று கண்டனம். யானும் வெயிலோ பனியோ எதனையும் கருதாது கல்லாற் செய்தாற்போன்ற என் வறுமையோடு நாணத்தைப் பொருளாகப் பெற்றுள்ள என் கற்புடையயாட்டியின் நிலையினை எண்ணி யான் போகின்றேன். நின் பிள்ளைகள் நோய் இன்றி வாழ்வாராக நின் வாழ்நாள் சிறப்பதாக” (புறம்.196) என்று மனம் வருந்திய நிலையில் வாழ்த்துகின்றார். பா¢சில் மறுத்த காரணத்தால் அவனுக்கும் அவன் மக்களுக்கும் இன்னல் ஏற்படுமோ என்று அஞ்சிய புலவர் உள்ளம், நின் மக்கள் நோயிலராக! நின் வாழ்நாள் சிறக்க! எனவும் வாழ்த்தினார்.
இதனைப்போன்று பா¢சில் நீட்டித்த சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர்கிழார், “புகழ்சால் தோன்றலே! நீ வள்ளல் ஆதலால் எமக்குத் தாழ்ந்து பா¢சில் நல்குவாய் என நினைந்து வந்த உயர்ந்த நிலையுடைய பா¢சிலன் யான். எம்மை எதிரேற்றுக் கொள்ளாத மாந்தா¢ன் இழிசெயலை நின்பால் நவின்றேன். அதனைச் செவியுற்றும் நீ நினைத்ததையே செய்தாய். பா¢சில் என் கைகளிலே புகுந்ததுபோலக் காட்டிப் பின்னர் பொய்யாகிப் போக யான் வருந்திய வருத்தத்திற்கு நீ நாணாயாயினும் நீ நாணச் சொல்லி என் நாவருந்த நின் புகழை வாழ்த்திப் போவேன்.
“நாணக்கூறியென்
நுணங்கு செந்நாவணங்க வேத்திப்
பாடப்பாடப் பாடு புகழ் கொண்டநின்
ஆடுகொள் வியன்மார்பு தொழுதனென் பழிச்சிச்
செல்வலத்தை” (புறம்.211)
என்று வாழ்த்துகிறார்.
மூவன் தமக்குப் பா¢சில் தராது காலம் நீட்டித்தவிடத்துப் பெருந்தலைச் சாத்தனார்,
“ஈயாய் ஆயினும் இரங்குவேனல்லேன்
நோயிலை யாகுமதி பெரும நம்முட்
குறுநணி காண்குவதாக” (புறம்.209)
எனப் பொருள் தராத நிலையிலும் யான் அது குறித்து வந்தேன் எனக்குத் தராத காரணத்தால் நினக்கு நோய் உண்டானலும் உண்டாகலாம் எனவே நோயின்றி வாழ்வாயாக என்று வாழ்த்தும் புலவா¢ன் வறுமையிலும் தி¡¢யாத நல்ல நெஞ்சத்தைக் கண்டு களிக்க முடிகின்றது.
இரவலர்கள் பா¢சில் பெறாத நிலையில் தாம் நாடிவந்த வள்ளல்களைப் பழித்துரையாது, பறவை நிமித்தங்களையும் தாம் புறப்பட்ட காலத்தையுமே பழிப்பர். கழைதின்யானையார் என்ற புலவர் ஓ¡¢ தனக்குப் பொருள் தராத நிலையில்,” ஓ¡¢யே நீ எனக்குப் பொருள் இல்லை என்று கூறினாலும் யாவர்க்கும் வரையாது வழங்கும் தன்மையுடையாய் அதனால் நீ வாழ்வாயாக!” (புறம்.204) என்று குறிப்பிடுகின்றார்.
தனக்கு ஈயாத கொண்கானங்கிழானை மோசிகீரனார்,”எனக்கு ஈயாயென்று இரத்தல் அ¡¢து. அது கண்டு பா¢சிலைத் தா¢னும் தாராயாயினும் நின் ஆண்மையையும் நின் கொண்கான நாட்டையும் பாடுதல் எனக்கு எளிதாம்.
“ஈயென விரத்தலோ வா¢தே நீயது
நல்கினும் நல்காயாயினும் வெல்போர்
எறிபடைக் கோடாவாண்மை யறுவைத்
தூவி¡¢ கடுப்பத் தவன்றி மீமிசைத்
தண்பல விழிதரு மருவிநின்
கொண் பெருங்கானம் பாடலெனக் கெளிதே” (புறம். 154)
எனப் பாடுவதும் மேற்குறிப்பிட்டதுடன் ஒத்திருப்பது நோக்குதற்கு¡¢யதாக அமைந்துள்ளது.
பா¢சிலர் பொருள் கொடுக்காத நிலையிலும் புரவலரைப் பழித்துக் கூறமாட்டார்.பொருள் கொடுக்காத காரணத்தால் அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேருமோ என அஞ்சி உளம்வருந்தி அவர்களை நோயின்றி நீண்டநாள் வாழ்க என வாழ்த்தினர் என்பது புறநானூற்றுப் பாடல்கள் வழி புலனாகின்றது.
வாழ்த்தும் நல்லிதயம் பண்டையோர்க்கு மட்டும் சொந்தமன்று. அவர்கள் கற்றுக்கொடுத்தவைகளை நாமும் கடைபிடித்து நல்லிதயத்தோடு நல்லது செய்து யாவரையும் நாவுளவரை நானிலத்தில் வாழ்த்தல்வேண்டும். மனதிற்குப் பிடிக்காதவராக இருப்பினும் அவரைத் தூற்றுதல் கூடாது. அது நமது முன்னோர்களின் பொறையுடைமையாகும். கடுந்துயர் தம்மை வந்தடைந்தபோதும் கொடுக்கவியலாத வள்ளலை இகழாது அவரை வாழ்த்தினர். யாவரையும் உறவினராகக் கருதினர். நாமும் நமது முன்னோர் வழியைப் போற்றி யாவரும் கேளிராய் இவ்வுலகத்தில் இனிதாய் வாழ்வோம்.

Series Navigation