This entry is in the series 20091211_Issue

எஸஸார்சி


அன்புள்ள திண்ணை யர்க்கு
என் வணக்கங்கள். பாவண்ணனை வார்த்தை முகப்பில் பார்த்ததும் மகிழ்ந்தேன். திண்ணை பாவண்ணனை உச்சத்தில் வைத்தது கண்டு எனக்குப் பெருமகிழ்வு.
பாவண்ணனின் உள்ளத்தைச் சற்றேனும் உணர்ந்ததாய் எண்ணும் எனக்குப் பாவண்ணனின் சாகித்ய விசுவ ரூபத்தில் எங்கேனும் ஒரு இடுக்கில் என்னையே யான் தரிசித்து க்கொண்டுவிடுவதால் எப்போதும் பெருமிதம்.
நல்லோர் அவையத்து இருக்கவே எப்போதும் விழையும் அவாவையாவது
கொண்டு மனித வாழ்வு அமையவேணும்.
பாவண்ணன் பற்றிப் பேசுவதுமே ஒரு நிறைவைக்கொணரும் மனம் எப்படி மீட்டிக்கொள்கிறதோ
அப்படி. மனத்தளவு உறையும் திரு. திரு என்பது அவரவர் சிந்தனைப்பாடு.
-எஸஸார்சி

Series Navigation