சேரனின் “இரண்டாவது சூரியோதயம்” என்ற கவித்தொகுப்பு குறித்த கலந்துரையாடல்
அறிவிப்பு
சேரனின் “இரண்டாவது சூரியோதயம்” கவிதைத் தொகுப்புக் குறித்த கலந்துரையாடல்
“முகில்களின் மீது நெருப்பு
தன் சேதியை எழுதியாயிற்று”
“சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து
எழுந்து வருக”
1980களில் ஈழப் போராட்டம் கொழுந்து விட்டெரிந்து கனன்று கொண்டிருந்த காலகட்டத்தில் சேரனின் இக் கவிதைகள் தமிழ்க் கவிதையுலகில் மிகவும் தீவிரமாகப் பேசப்பட்டவை. ஆனால் இன்று இரு தசாப்தங்களின் பின்னால் அவற்றின் கற்பனாவாதப் பண்பு, தற்காலிக எழுச்சி போன்ற விமர்சன உச்சாடனங்களுக்கும் அப்பால் அந்த மன எழுச்சிகளுக்கு அடிப்படையாக
அமைந்த ஒடுக்குதல் குறித்துப் பேசுவதற்கான தளம் அன்றும் போல் இன்றும் வாய்த்து நிற்கிறது.
புரட்சிகரம் என்பது எப்போதும் இளமைக்கால சாகசங்களுடன் மாத்திரமே பொருத்திப் பார்க்கப்பட வேண்டியவை என்பது போன்ற விமர்சனங்களை மீண்டும் மறுபரிசீலனைக்கு உள்ளாக்க வேண்டிய அவசியத்தை இலக்கியத்தில் அதுவும் குறிப்பாக சமகால ஈழத்துக் கவிதையுலகின் இன்றைய இடர் சூழ்ந்த காலத்துள் எழுப்புவது பொருத்தப்பாடுடையது.
அதற்கான களமாக சேரனின் “இரண்டாவது சூரியோதயம்” என்ற கவித்தொகுப்பு குறித்த இக் கலந்துரையாடல் தளம் அமையும.; எனவே தமிழ்க் கவிதை ஈடுபாடு கொண்ட அனைவரையும் இக் கலந்துரையாடலில் பங்கு பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
காலம் – 15-03-2009, ஞாயிறு(மாலை 6.00 மணி)
இடம்;; – 36 Salamander Street
Scarborough
தொடர்புகளுக்கான தொலைபேசி இலக்கங்கள் -: (647) 237-3619, (416) 500-9016
கலந்துரையாடல் ஏற்பாடு சார்பாக
முரளி
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -4 பாகம் -4
- வார்த்தை மார்ச் 2009 இதழில்
- திருக்குறளில் ஊழியல்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தாறு
- புத்தம் புதியதாய் மீண்டுமொரு முறை மரண வாடை
- மக்களைத் திசை திருப்பும் கூட்டம்!
- பேராசையெனும் பெருநோய் : அமெரிக்கப் பொருளாதாரச் சிக்கல் குறித்தான சில எண்ணங்கள்
- நினைவுகளின் தடத்தில் – (27)
- தலைகீழாய் எரியும் ஜின்கள்
- சங்கச் சுரங்கம் -5 ; மடலும் ஊர்ப
- நண்பர்கள்
- இருள் கவியும் முன் மாலை
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -27 << காதலிக்கு ஒரு கேள்வி >>
- வேத வனம் விருட்சம் 27
- கருணையும் கவிதையும் – புரந்தரதாசர் பாடல்கள்
- எதேச்சதிகாரம்
- மனிதன் என்று
- திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் “இணையத்தில் தமிழ்” : கருத்தரங்க செய்தி
- சுமந்தும் சார்ந்தும்…
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! புதிய பூமிகளைத் தேடிப் போகும் கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி !(கட்டுரை 55)
- “அநங்கம்” இதழ்
- கலில் கிப்ரான் கவிதைகள் << அலைகளின் கீதங்கள் >> கவிதை -3 (பாகம் -1)
- பம்பரக்கோனே !
- மூவரின் நூல்கள் வெளியீடு
- எனது பயம் மற்றும் நானற்ற என்னுடைய இது
- வெள்ளநிவாரணம்
- கருணையும் கவிதையும்
- இலக்கியத் தோட்டம் : தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது : பரிந்துரைக்கான அழைப்பு
- வேறு ஒன்றும்…
- தமிழ் ஸ்டுடியோ.காம் உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்
- சொற்கோவை (www.sotkovai.tk) என்னும் இணையத்தளம்
- சேரனின் “இரண்டாவது சூரியோதயம்” என்ற கவித்தொகுப்பு குறித்த கலந்துரையாடல்
- வாக்குச்சீட்டில் வேட்பாளரின் படம்
- எச்சரிக்கை வேண்டுகோள்!
- அநங்கம் ஆய்வரங்கம்
- போர்முனை இரவுகள்
- நீ….!