கடிதம் ஏப்ரல் 8,2005

This entry is part of 42 in the series 20050408_Issue

அருள்ராஜ் நவமணி


திண்ணை அறிவியல் புனைகதைப்போட்டி முடிவுபற்றிய என்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விழைகிறேன். வெகுஜன பத்திரிகைகளை விட்டு திண்ணையை விரும்பிப் படிக்கும் ஒரு வாசகன் என்ற முறையில் இதை எழுத எனக்கு உரிமை இருப்பதாக கருதுவதன் வெளிப்பாடே இக்கடிதம்.

முதல் பரிசுபெற்ற கதை மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

1. இது ஒரு புதிய கற்பனை இல்லை. Terminator I, II, III வரை வந்து அலுப்பூட்டிய ஒரு பழைய கற்பனை தான் இது. (இந்த ஒரு காரனம் போதாதா ?)

2. எதிர் காலத்தில் இருந்து வரும் இரண்டுபேரும் சிலுவையில் அறையப்பட்டு இறந்தால் அவர்கள் எப்படி எதிர் காலத்தில் இருந்தார்கள் ?

3. 2 பேரை ஒருவன் அவ்வளவு சுலபமாக சிலுவையில் அறைய ஏற்பாடு செய்ய முடியுமா ? அதுவும் பரபாஸ் போன்ற ஒரு தீவிரவாதியினுடைய சகோதரன் ?

—-

arulraj52@yahoo.com

Series Navigation