புதிய காற்று

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா



2006 ந்தேதி டிசம்பர் 31ந்தேதி கொண்டாட்டங்களின் போதைகள் முடிந்து, நண்பர்களுடன் சிரிப்பும் கேலியும் கூத்துமாய் நேரம் நள்ளிரவு தாண்டியும் 2007 1ந்தேதியன்று ஆனந்தக் கொண்டாட்டங்கள் போய்க் கொண்டிருந்தன. குளிர் காற்று வேறு வீசிக் கொண்டிருந்தது. கடந்த வருடக் கவலைகள் மறந்து அனைவரும் புதிய காற்றைச் சுவாசித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு ‘தம்’ போன வருடம் போன்றே இழுத்துக் கொண்டிருந்தேன்.

அட, போன வருடம் போலவே இப்போது நுரையீரலில் புதிய ‘தம்’ காற்று உள்ளே போகிறதே !

போன வருடனம் கொஞ்சம் ‘சளி’யிருந்ததால் இவ்வருடம் புகை இழுத்தவுடன் காறித் துப்பினேன். போன வருடம் முழுவதும் அருகே யாருமே இல்லலில்லையென்றால் ‘சத்தம்’ போடாமல் பளிச்சென்று சுத்தமான இடமாகப் பார்த்து துப்புவேன்.

இவ்வருடம் அவ்வாரு செய்யக் கூடாது என்று போதையில் கூடப் பிரதிஞை பண்ணாமல் சென்ற வருடம் போன்றேத் துப்பினேன்.

புதிய காற்று வீசினால் கூட என் மார் சளியில் மாற்றம் இல்லை. எல்லாம் மாறும் என்று ‘கனா’ கண்டு கொண்டிருந்தேன்.

இதைப் போய் ஒரு டைரியில் எழுத வேண்டும்.

2007 ஜன 1

1.00 மணி – ‘தம் 1’ – மால்பரோ லைட்
1.30 மணி – தம் 2 – மால்பரோ லைட்
1.45 மணி – பெக் 3
2.00 மணி – பெக் 4
2.05 மணி – தம் 3
2.15 – பெக் 5
2.16 – பெ . . . . க் ….. ஆ று மனசே ஆ ………று …..
2.20 – தூக்கம்
11.00 மணி – தூக்கதிலிருந்து எழுந்தேன்
11.05 – காபி
12 மணி – சாப்பாடு
1 மணி – தம் 1
1.30 – தம் 2
1.45 – தம் 3
2.00 – கடைக்குப் போய் தயிர் வாங்கினேன்
2.15 – தூக்கம்
5.00 மணி – காபி
5.15 – தம் 4
6.00 மணி – நண்பர்களுடன் அரட்டை
6.30 – 8.00 – தம் 5,6,7,8,9,10,11,12
8.00 மணி – இரவுச் சாப்பாடு
8.15 – தம் 13
8.30 – புதிய காற்று – மொட்டை மாடி
9.00 மணி – பக்கத்து வீட்டு நண்பருடன் அரட்டை
9.30 – தம் 14
10 மணி – டிவி
12 மணி – தூக்கம் ‘அந்தக் கனவு! தாவணிக் கனவு தான்ய்யா !’

2006 ஜன 1ந்தேதி கூட இப்படியே இருந்ததால்,

2007 ஜன 2

8.00 மணி – காலை காபி

5.00 மணி – நண்பர்களுடன் …..

8.00 மணி – சாப்பாடு

10.00 மணி – தாவணிக் கன……வ்வ்வ்வ்வ்வ்வ் வு

2007 ஜன 3

– ல்ந்ல்ந்

———–

2007 ஜன 4

எழுத ஒன்றுமில்லாமல் போன வருடம் போலவே இருந்ததால் . . .

நிறுத்திக் கொண்டேன்.

இனிமேல் 2007 டிச 31ந்தேதி பார்த்துக் கொள்ளலாம்.

பழைய காற்று, புதிய காற்று நமக்கு எல்லாம் ஒன்று தான். நாணலைப் போன்று போன வருடம் எப்படி சாய்ந்து ஆடினோமோ அப்படியே இவ்வருடமும் ஆடுகிறோம்.

சாப்பிடும் பாத்திரம் ஒன்றே தான். விவேக் அண்டு கோவில் போய் ஏதாவது வாங்கி போகியன்று ஜன் 13ந்த்தேதி பழையன கழிதல் புதியன புகுதலே என் விஷயத்தில் கிடையாது.

சட்டை கூட மாற்றவில்லை.

தை பிறந்தால் வழி பிறக்குமெல்லாம் ஒன்றுமில்லை.

ஜனவரி மிகவும் பழக்கிப்போனதால் ‘தை’ என்று எதைக்கூறி இப்படி ‘தை தக்கா’ வென்று குதிக்கிறார்கள். ?

புதிய நண்பர்கள் ஊகும் !

இல்லை !

புதிய சிந்தனைகள் !

இல்லை !

அதே ரோடு ! அதே இடம் ! அதே நூற்றாண்டுச் சிந்தனைகள் !

அவன் இப்படி தான் !

இவன் இப்படி தான் !

அவள் அப்படி தான் ! ( நல்ல படமாச்சே! ஸ்ரீபிரியா ‘நல்லா’ நடிச்சிருப்பாங்களே!)

அதே நினைப்பு தான் சர்வ காலமும் !

புதிய வகுப்பு ! ஆனால் பழைய மாணவன் ! ஆதலால் அதே குணாதிசயம் !

கிளாஸ் கட்!

சினிமா !

அரியர்ஸ் !

புதியதாய் ஒரு அரியர்ஸ் சேர்த்தேன் !

அவ்வளவு தான் !

புதியதாய் ஏதும் கற்றுக் கொள்ளவில்லை.

எதுவும் புதியதாய் முயலவில்லை !

புதியதாய் ஒரு கடை வைத்துக் கொள்ளுப்பா ! VAT வருதாம் ! லாபம் பார்க்கலாம் !

புதியதாய் ஒரு பொருள் மார்க்கெட்டில் வருதாம் ! விற்றுக் காசு பண்ணலாம் !

ஆனால் பழைய அப்பா ! இருக்கிறாரே ! அப்ப அப்படியே ஓட்டலாம் ! இருக்கிறவரைக்கும் ஓகே !

புதியதாய் ஒரு ஏமாளி வந்திருக்கிறான் !

அவன் மீது கை வைத்தால், இரண்டு பாக்கெட் ‘தம்’, வாரம் இரு ‘பெக்’ கிடைக்கும் ! தொட்டுக்க கொஞ்சம் ஊறுகாயும் கிடைக்கும் !

அப்படியே புதியதாய் ஹிட்லர் என்று ஒரு ரம் வந்திருக்காம் ! கை பார்க்கணும் !

புதியதாய் பெஞ்சு போட்டு புதுச்செடி வைத்து, புது கிளாஸில் ஊற்றிக் கொடுக்க ‘பார்’ வசதி உண்டு என்று புதிய போர்டு போட்ட கடை ஒன்று வந்துள்ளது !

புதியதாய் முருகன் இட்லி கடை ஒன்று வந்திருக்காம் !

புதியதாய் புதினா சட்னி வந்திருக்காம் ! புதியதாய் ஒரு ‘பைக்’ வந்திருக்காம் ! அது வாங்கினால் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசமாம் !

அதில் போனால் புதிய காற்று வந்தாலும் வரும் !

புதியதாய் தெருக் கொடியில் ஒரு அழகிய தமிழ் மகள் வந்திருக்காளாம். அதையாவது ‘ட்ரை’ பண்ண வேண்டும் !

அந்த ஆண்டவன் கட்டளை ஆறு !

கடவுளைக் கும்பிட்டுக் கொண்டே

போன வருடம் போன்றே சற்றும் மனம் தளராமல் விக்கிரமாதித்தன் போன்று மீண்டும் முயற்சிக்கலானேன் !

kkvshyam@yahoo.com

Series Navigation

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா