This entry is in the series 20020106_Issue


இந்திய பகுதியில் ஜெய்ஸல்மார் நகரத்துக்கு அருகில் நமது படை குவிக்கப்பட்டு வருகிறது. இது பாகிஸ்தான் பகுதியான ரஹிமியார் கான் நகரத்தைக் குறி வைத்து உருவாக்கப்படும் குவிப்பு.

இந்த ரஹிமியார் கான் நகரம் வடக்கில் இருக்கும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்துக்கும் தெற்கில் இருக்கும் சிந்து மாநிலத்துக்கும் இடையே இருக்கும் நகரம். இந்த நகரத்தைக் கைப்பற்றி நேராக ஆஃப்கானிஸ்தான் வரைக்கும் இந்தியப்படை சென்று பாகிஸ்தானை இரண்டு துண்டாக உடைக்கும் என்று ஆங்கிலேய போர் நிபுணர்கள் கருதுகிறார்கள். (கார்டியன் பத்திரிக்கை). அதே நேரத்தில் வடக்கு பகுதியைப் பாதுகாக்க நமது காஷ்மீர் பஞ்சாப் மாநிலங்களில் படை குவிக்கப்பட்டிருப்பதை காணலாம்.

இவ்வாறு பாகிஸ்தானை இரண்டாக உடைத்து நேரடியாக இந்தியாவுக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கும் ஒரு சாலையை இன்றைய பாகிஸ்தான் நடுவே உருவாக்கிக்கொண்டு போர் நிறுத்தம் அறிவிக்கும் என்று ஆங்கிலேய போர் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

Series Navigation