அஷ்டாவதானம்

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

எஸ் ஜெயலட்சுமி


.

வாசலில் ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டது.பள்ளியிலிருந்து குழந்தைகள் வந்துவிட்டார்கள்.மாலை நாலு மணியான போஹ்டிலும் வெய்யிலின் வெம்மை குறையவில்லை.சத்துமாவு அரைக்க மிஷினுக்குப் போக வேண்டுமே என்ற நினைவு வந்தது நாலு நாளுக்கு முன்னால் தங்கை பாலா போன் செய்தாள்.”என் மாமியார் திரு¦ந்ல்வேலி வருகிறார்.அவரி குழந்தைக்காக சத்துமாவு தயார் பண்ணிக் கொடுத்துவிட முடியுமா? இங்கு ரொம்பவே பவர் கட்.கொஞ்சம் குழம்புப் பொடியும் கொடுத்தனுப்பறியா”என்று கேட்டாள் இங்கும் அறிவிக்கப்படாத பவர் கட் என்பது தெரியாததால் சரி என்று சொல்லி விட்டேன்.

பாலா வடக்கே டில்லியிலிருந்து கொஞ்சம் தள்ளி நிஜாமுதீனில் இருக்கிறாள்.அந்த ஊரில் எப்பொழுது வேண்டுமானாலும் கரண்ட் காணாமல் போய்விடும்.வாஷிங் மிஷினில் துணிகள் போட்டிருப்பாள் அலசி எடுப்பதற்குள் கரண்ட் போய்விடும்.கிரைண்டரில் போட்ட அரிசி மாவானால் அதிசயம்.கம்ப்யூட்டரில் உட்கார்ந்து ஒரு வேலையை நிம்மதியாக முடிப்போம் என்ற உறுதி கிடையாது.இங்கு அந்த அளவு மோசமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.கஞ்சிமாவுக்கு வேண்டிய கேப்பை, காணாம். பாசிப்பயறு எல்லாம் வாங்கி முளைக்கட்டி வறுத்தும் விட்டேன்.குழம்புப் பொடிக்கான சாமான்களும் தயாராகி விட்டது.

கஞ்சிமாவு,குழம்புப்பொடிக்குரிய இரு டப்பாக்க்களையும் ஒரு பையில் போட்டுக்கொண்டு போனேன். நாங்கள் இருக்கும் சாலைத்தெரு மிகவும் நீளமானது.மிஷின் தெருக்கோடியில்.மிஷினில் ஆண்களும் பெண்களுமாக ஒரே
கூட்டமாகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.அன்று சனிக்கிழமை என்பதால் பள்ளி செல்லும் மாணவர்களும் இருந்தனர்.சில பெண்கள் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வந்திருந்தார்கள்.அதுவரை இவ்வளவு கூட்டம் சேர்ந்து பார்த்ததில்லை. பவர்கட் படுத்தும் பாடு என்று அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது.

மிஷின் இருந்த இடம் சுமார் இருபது அடி அகலமும் ஐம்பதுஅடி நீளமும் கொண்ட கட்டிடம். மேலே ஓடு வேயப்பட்டிருந்தது.நுழைந்ததும் இடப் பக்கம் மூன்று பெரிய கிரைண்டர்கள்.ஒன்றில் உளுந்து அரைபட்டுக் கொண்டிருந்தது. இரண்டாவதில் வடைப் பருப்பு. மூன்றாவதிலும் உள்ந்து.கொஞ்சம் உள்ளே தள்ளி வலப்பக்கம் நாலு மிஷின்கள்.
ஒன்று அரிசி,கோதுமை,பருப்பு வகைகள் அரைக்க.ஒன்று மிளகாய்வற்றல்,சாம்பார்பொடி,மல்லிப்பொடி,ரசப்பொடி அரைக்க
மூன்றாவது ஈர அரிசி திரிக்க.கடைசியில் உள்ளே தள்ளியிருப்பது நெல் அரைக்க.நான் உள்ளே போனபோது தான் தெரிந்தது, நிறையப்பேர் தங்கள் பைகளையும் தூக்குச்சட்டிகளையும்,பாத்திரங்களையும் வைத்துவிட்டுப் போயிருந்தார்கள். நிறைய அரிசிச் சாக்குகளும் இருந்தன.என்னைக் கண்டதும்”மாமி இப்பொ வரீங்களே ஆறுமணிக்குக் கரண்ட் போயிடுமே என்றான்.முடிந்தவரை பார்க்கலாமே என்ற நப்பாசையில் காத்திருக்கத் தயரானேன்.மறுநளெனக்கு வேறோர் இடத்திற்குப்போக வேண்டியிருந்தது
அகமது ஒரு கோணிப்பையிலிருந்து ஏழெட்டு பெரிய தேங்காய்களை எடுத்து உடைத்தான்.கிரைண்டரின் கீழே நியூஸ் பேப்பரைப் போட்டுவிட்டு கிரைண்டரின் தேங்காய் துருவும் கம்பியில் தேங்காய் மூடிகளைத் துருவ ஆரம்பித்தான். கிரைண்டர் ஓடிக்கொண்டிருந்தது. நடுவில் எழுந்து வந்து மாவு மிஷினையும் ஓட்டினான்.கிரைண்டரில் அரைபட்டுக் கொண்டிருந்த உளுந்தமாவை வழித்து சரி செய்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றினான்.இதற்குள் பள்ளி மாணவர்கள் இரண்டு மூன்று பேர்”அண்ணே, நாங்க இந்த அரிசிய மிஷின்ல போடட்டுமா”? என்று கேட்டார்கள்.அகமது மாவு மிஷினை நிறுத்தி விட்டு அவர்களுக்கு ஈர அரிசி போட உதவி செய்தான்.மாவு திரித்தவர்களிடம் கணக்குப் பார்த்து காசு வாங்கிக்கொண்டு மீதி சில்லரையை எண்ணிக் கொடுத்தான்.நடுவில் பெரிய டின்னில் திரித்து வைத்திருந்த ஈர அரிசிமாவை பெரிய கிரைண்டரில் போட்டுக்கலந்து பெரிய பெரிய அடுக்குகளில் வழித்து வைத்துவிட்டு மீண்டும் உளுத்தம்பருப்பைப் போட்டு ஓட விட்டான் நடு நடுவேஅஙு வந்திருந்த பெண்களிடம்,அக்காமுறை வைத்தும் மாமி முறை வைத்தும் அழைத்து குசலப்பிரசனங்கள்! மிஷின் சத்தத்தைக்கேட்டுக் குழந்தைகள் அழுதபோது ‘ ‘என்னக்கா,புள்ளைய வீட்ல விட்டுட்டு வரககூடாது? இங்க நெடி அடிக்குமே என்று கரிசனத்தோடு அறிவுரை.வந்திருந்த பள்ளி மாணவர்களிடம் அவர்கள் படிப்பைப் பற்றியு அக்றையான விசாரிப்பு.”என்ன சார் உங்கள கொஞ்ச நாளா காணலியே,என்ன விஷயம்”?எங்காச்சும் ஊர் வழி போயிட்டீங்களா”? என்பது போன்ற விசாரிப்புகள்.நடுவில் மாவு மிஷின்,கிரைண்டர்,அரிசிமிஷின் என்று சுற்றிவ் சுற்றி வந்து அஷ்டாவதானம் செய்து கொண்டுருந்தான்.பின் துருவிய தேங்காயை ஒரு கிரைண்டரில் போட்டு வேர்க்கடலையும் சேர்த்து சட்டினிக்காக கிரைண்டரை ஓடவிட்டான்.நடுவில் பாட்டிலிலிருந்த தண்ணீரைக் குடித்தபின் வியர்வை வழிய ஒரு நிமிஷம் வெளியே போய் முகத்தைக் கழுவித் துடைத்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.

என் அருகிலிருந்த பெண்மணி என் டப்பாவைப் பார்த்து”அது என்ன”?என்றாள்.”கஞ்சி மாவுக்கானது” என்றேன் ‘என்னவெல்லாம் போடுவீங்க? எப்படித் தயார் செய்வீங்க?பக்குவம் சொல்லுங்க”, என்றவள்,அஹமதிடம்’நான் பரணி நகர்லேர்ந்து வந்திருக்கேன்.எனக்குக் கொஞ்சம் சீக்கிரமாப் போட்டுக்குடு தம்பி நான் அம்மாந்தொலவு போகணும்”என்று சொல்லி முடிக்குமுன்பே”நாங்க அப்பவே வந்து வெச்சிட்டுப் போயிட்டோம் நீ இப்ப வந்துட்டு அவசரப்பட்டா எப்படி? எங்களுக்குத்தான் மொதல்ல போடணும்”.அந்தப் பெண்களில் இஸ்லாமிய,கிறிஸ்தவ,இந்துப் பெண்களும் இருந்தார்கள். அஹமது பொறுமையாக எல்லோரையும் சமாளித்து பக்குவமாகப் பேசி சமாதானமாகப் போகும்படி செய்ததை நான் மிகவும் ரசித்தேன்.”பாவம் அந்த ஆச்சி பரணி நகர்லேர்ந்து வந்திருக்காங்க.நீங்க பக்கத்தில தான இருக்கீங்க.கொஞ்சம்அட்ஜஸ்ட் பண்ணிப்போங்க” வாய் பேசினாலும் கைகள் இயங்கிக்கொண்டேயிருந்தன. அஷ்டாவதானம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அன்று அஹமதைப் பார்த்த போது தான் புரிந்தது.

என்னுடையது கஞ்சி மாவு என்பதால் கடைசியில் போடப்போகிறான் என்று தோன்றியது.ஏனென்றால் அதைப் போட்டால் அதன் பின் போடும் அரிசிமாவு கோதுமை மாவு எல்லாம் நிறம் மாறிவிடும் என்று ஆட்சேபணை எழும்.சரி எப்படியாவது அரைத்துக் கொடுத்தால் போதும் என்று பொறுமையாக இருந்தேன்.அஹமதுக்கு 25-30 வயது இருக்கலாம்.நல்ல பேச்சும் குசலம் விசாரிக்கும் இயல்பும் உண்டு.ஒருநாள் பாளையங்கோட்டை ஆயத்தம்மன் கோவிலருகில் என்னைப் பார்த்துவிட்டு “மாமி எங்ஜ இந்தப்பக்கம்?இந்த மிஷினும் எங்களோடது தான் இங்க யாரும் சொந்தக்காரங்க இருக்காங்கள?நீங்க இங்கவந்தா அரச்சிட்டுப் போகலம்” என்று அக்கரையோடு பேசினான் அஹமதிடம் மதம் பேசவில்லை மனிதம் தான் பேசியது என்பதை அன்று மிஷினில் பார்த்தபோது தெரிந்து கொண்டேன்.மத வேற்றுமை மதம்பிடித்த மனிதர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் தான் காணப்படுகிற்தே தவிர தனி மனிதனிடம் இல்லை.உறவு முறை சொல்லி அழைத்துப் பேசும் போது அங்கு மதம் மடிகிறது அங்கு மத,இன வேற்றுமைகள் தென்படுவதில்லை.

கடைசியாக என்முறை வந்தது.எனது டப்பாவில் இருந்ததை மிஷினில் போட்டுவிட்டான். அப்ப்பாடா,காத்திருந்தது வீண்போக வில்லை என்று சந்தோஷப் பட்டேன்.ஆனால் ஒரு தரம் போட்டுவிட்டு இரண்டாவது தரம் போட்ட போது மிஷின் நின்று விட்டது. மணி ஆறு ஆக இன்னும் ஐந்து நிமிஷங்கள் இருந்தன.மின்வாரிய ஊழியர்கள் மின் சப்ளையை நிறுத்தி விட்டார்கள்.மாலை ஆறுமணிக்கு மேல் மிஷின்கள் ஓடக்கூடாதென்று அரசு உத்திரவாம்!”மாமி நீங்க நாளைக் காலைல வந்து எடுத்துக்கிட்டுப் போங்க.எப்படியும் ஒங்களுக்குப் போட்டுக் குடுத்துடலாம்னு தான் நெனச்சேன்.ஆனா அஞ்சு நிமிஷத்துக்கு முன்னால கரண்ட்ட கட் பண்ணிட்டாங்க” என்றான் மன்னிப்புக் கேட்கும் குரலில்.”சரி பரவாயில்லை நாளைக்கு வரேன்” என்று சொல்லிவிட்டு வந்தேன்.என் வேலை முடியாவிட்டாலும் மனம் சோர்வடையவில்லை.ஒரு உழைப்பாளியின் உழைப்பையும் அவன் பழகும் விதத்தையும் பார்த்ததே ஒரு அனுபவமாக இருந்தது.

அன்று காலையில் படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.ஒரு இஸ்லாமிய மனவி தன் ஒரு சிறுநீரகத்தை ஒரு இந்துக் கணவனுக்கும், அந்த இந்துக் கணவனின் மனைவி தன் ஒரு சிறுநீரகத்தை, அந்த இஸ்லாமிய மனைவியின் கணவனுக்கும் தானமாகக் கொடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெற்று இருவரது கணவன்மார்களும் நலமாக இருப்பதால் இரு மனைவிகளும் வாழ்வு பெற்றனர் என்ற விஷயம் தான் அது.மனிதம் இன்னமும் வாழ்கிறது!

மிகவும் குறுகலான ஒரு மரப்பாலத்தைக் கடக்க முயன்ற இரு ஆடுகள் ஒன்றோடொன்று முட்டிச் சண்டை போட்டுக் கொண்டதால் இரு ஆடுகளுமே ஆற்றில் விழுந்து மடிகின்றன.பின்னால் வந்த இரு ஆடுகளும் நிலைமையைப் புரிந்து கொண்டன. ஒரு ஆடு பாலத்தின் மேல் படுக்க எதிர்திசையில் வந்த ஆடு முதலில் வந்த ஆட்டின் மேலேறிச் செல்கிறது.இரண்டு ஆடுகளுமே நல்லபடியாக ஆற்றைக் கடந்து விட்டன!ஆட்டுமந்தைப் புத்தி என்று சொல்கிறார்களே.பின்னால் வந்த இரு ஆடுகளும் எவ்வளவு அழகாக விட்டுக்கொடுத்து நலமடைந்தன!சின்ன வயதில் பள்ளியில் படித்த அந்தக் கதை நினைவில் ஓடியது.ஆட்டு மந்தைகளே பரவாயில்லையோ?

வீட்டில் நுழையும் போது தொலைக்காட்சிப் பெட்டியில், சேர்ந்திசைக் குழுவினர்
“வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்-அதில்
மானிடர் வேற்றுமையில்லை
எண்னங்கள் செய்கைகள் எல்லாம்-இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்
யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று-இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்

என்ற பாரதியின் பாடலைப் பாடிக் கொண்டிருந்தனர்.


vannaijaya@hotmail.com

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி