கனவு மெய்ப்படுமா ?

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

தேவமைந்தன்

‘கனவுகளுக்கான விளக்கம் ‘ என்ற தன் புத்தகத்தில் சிக்மண்ட் ஃப்ராய்ட்

கூறினார்: ‘ ‘ ஒரு விருப்பத்தை நிறைவு செய்யும் வாயில் ஆக, இரகசியமானதோர்

அர்த்தத்தினைக் கனவுகள் மெய்யாகவே கொண்டிருக்கின்றன. ‘ ‘

‘ ‘இதைச் சொல்ல ஒரு வியன்னாக்காரர் வேணுமா ? நம்ம ஊர் கோயில் பூசாரி

கூட இதை வெகு சாதாரணமாச் சொல்லிவிடுவாரே! ‘ ‘ என்றார் நண்பர் முனுசாமி.

சிலப்பதிகாரக் காவியக் கனவுகள் முதற்கொண்டு விடலைகள் காணும்

பதின்பருவக் கனவுகள் வரை எத்தனை எத்தனை வகை ? மருட்டும் கனவு முதல்

தெருட்டும் கனவு வரை கனவுகளின் வினைப்பாடுகள்தாம் எத்தனை எத்தனை ?

ஈழத்து நாட்டார் பாட்டொன்று:

‘ ‘மாடப் புறாவே எண்ட

மாசுபடாச் சித்திரமே

கோடைக் கனவிலே

கொதிக்கிறேன்டி கண்மணியே ‘ ‘

இந்தப் பாட்டில் (ஈழத்து நா ட்டார் பாடல்கள்: எஃப். எக் ?. சி. நடராசா: மித்ர 2002:

பக்கம் 60) இடம்பெறும் ‘கோடைக் கனவு ‘ என்ற நாட்டுப்புறச் சொல்லாட்சியைவிடவும்

பிரிந்திருப்போர் காணும் பெருமூச்சுக்கனவுக்குப் பிறிதொரு கலைச்சொல் உண்டா ?

ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்கள் 1910-ஆம் ஆண்டு தொகுத்து வெளியிட்ட

அபிதான சிந்தாமணியில் ‘கனாநிலை ‘ என்ற சொல்லுக்கு விளக்கமாக 560-க்கு

மேற்பட்ட கனவுகள் சுட்டப்பெற்று (தேவகுரு வியாழன் மொழிந்ததாக) சுருக்கமாக

விளக்கப் பெற்றுள்ளன. சான்றுக்கு ஒன்று. ‘ ‘சங்கீதம் தான் பாடக் கனவு கண்டால்

துக்கம்; பிறர்பாடக் கண்டால் காரியசித்தி. ‘ ‘

மாயையின் ஆற்றல் பற்றி நாரதர் யோசித்துக் கொண்டே கடைசி யாமத்தில்

தூங்கிவிட்டாராம். வந்தது கனவு ஒன்று. திருமால் நாரதரைப் பார்த்து, தனக்கு

தாகமாக இருக்கிறது; தாகம் தீர்க்க நல்ல நீரெடுத்து வாரும் என்று பணித்தாராம்.

நாரதர், அழகான சூழல் அமைந்தவோர் ஆற்றங்கரைக்குச் சென்று கமண்டலத்தில் நீர்

மொள்ளும்பொழுது, அந்த நீரில் எழுந்த அலைகளில் அழகு மிகுந்த

பெண்ணொருத்தியின் முகம் தெரிய திரும்பிப் பார்த்தாராம். திருமால் எடுத்த

வடிவங்களுள் ஒன்றான மோகினி அங்கு நின்றாளாம் . பிறகென்ன ? மோகினியோடு

வாழ்வு நடத்துகிறார் நாரதர். அறுபது ஆண்டுகள், குழந்தைகளாகப் பிறக்கின்றன. ஒரு

நாள் அதே ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. எங்கும் காலவெள்ளம். மோகினியிடமிருந்தும்

அறுபது பிள்ளைகளிடமிருந்தும் அடித்துச் செல்லப்படுகிறார் நாரதர். ‘குய்யோ!

முய்யோ! ‘வென்று கூக்குரலிட்டு எழுந்து பார்த்தால் அதுவரை கண்டது கனவு என்று

அறிந்து மாயையின் ஆற்றலை எண்ணி எண்ணி வியந்தாராம்.

நாரதர் கண்ட கனவு குறித்து சிக்மண்ட் ஃப்ராய்ட் அறிந்திருந்தால் திருமால் –

மோகினி அவதாரம் – அறுபது பிள்ளைகள் எல்லாவற்றுக்கும் பட்டியல் போட்டுப்

பாலியல் விளக்கம் பலபடத் தந்து படிப்பவர்களை அதைவிடச் செறிவான பலவிதக்

கனவுகள் காணும்படி ஒருவழி பண்ணியிருப்பார்!

நல்லவேளையாக நம் தொன்மக் கதைகள் ஃப்ராய்டுக்கு அகப்படவில்லை.

பிழைத்தோம்.

நனவின் தொடர்ச்சி கனவு என்றோ, நனவின் விருப்பப் பதிவே கனவின்

வெளிப்பாடு என்றோ எளிதாகக் கூறிவிடலாம். ஆனால், இதுவும் கனவு பற்றிய

மதிப்பீடுகளுள் ஒன்று. அவ்வளவே.

இதில் ‘கட் – அவுட் ‘ கலாச்சாரம் வேறு, அர்த்தத்தை அனர்த்தம் பண்ணிக்

கொண்டு, வார்த்தைகளையெல்லாம் மாற்றிப்போட்டு மல்லடிக்கிறது. ‘ ‘எங்கள்

கனவுகளை எல்லாம் நினைவு கூறுகின்ற கருணாமணாளா! ‘ ‘ என்று தொடங்கும் கட் –

அவுட் வாசகத்தையும் அதன் தொடர்ச்சியையும் பார்த்து ‘வெலவெல ‘த்துப் போனேன்.

ஒரே வாக்கியத்தில் நனவை நினைவாக்கி நினைவுகூர்வதை நினைவுகூறவைத்து ஒரே

கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ‘ ‘கனவுகளை நினைவுகூற ‘ ‘ வைப்பதன்மூலம்

உள்ளுக்குள்ளேயே இரண்டு தப்பிதங்களைத் தாறுமாறாக மோதவைத்த அந்தக் கட் –

அவுட் வாசகம் எழுதியவரைப் பார்க்க நேர்ந்தால் காததூரம் தலைதெறிக்க

ஓடிவிடவேண்டியதுதான்.

அதெல்லாம் போகட்டும். பலருக்குத் தாங்கள் காணும் கனவுகள்,

விழித்தெழுந்தவுடன் மறந்துவிடும். சிலருக்குத் தாம் கண்ட கனவுகள் ‘சீனுக்கு சீன்,

?ாட்டுக்கு ?ாட் ‘ நினைவில் இருக்கும். யாராவது சைக்கியாட்டிரி ?ட்டிடம் ‘ ‘நான்

கண்ட கனவுகளை எல்லாம் மனசுக்குள்ளேயே ‘இண்டெக் ? ‘ போட்டு

வைத்திருக்கிறேன் டாக்டர்! ‘ ‘ என்று ‘அசட்டுப் பிசட் ‘டென்று உளறி வைத்து விடப்

போகிறார்கள் அவர்கள்… அப்புறம், அவர் – அவர்களைத் தீவிரமாக உற்றுப் பார்த்து

‘ ‘கனவுகைளையெல்லாம் நினைவில் வைத்திருப்பது என்பது ‘அப்நார்மல் ?டேட் ஆஃப்

அஃப்ஃபேர் ?! ‘ என்று சொல்லுவதோடு தன் ஆலோசனைக்குச் சலுகைக் கட்டணத்தில்

அழைத்துவிடப் போகிறார்…. எதற்கும் விழிப்புடன் இருங்கள்! ‘ ‘ என்று அவர்களிடம்

சொல்லிவைத்துவிட வேண்டும்.

‘ ‘என்ன விழிப்புடன் இருப்பதா ? ‘ ‘ என்கிறார்களா….

ஆமாம், விழிப்புடன் இருந்தால்தான் கனவே வராதே!

அப்புறம் எப்படி நிம்மதியாகத் தூங்குவது என்கிறார்களா ? அதுவும் சரிதான்….

ஆனால் கனவுகளற்ற உறக்கம்தான் உண்மையிலேயே நிம்மதி தரும் ஆழ்ந்த

உறக்கமாம்.

****

pasu2tamil@yahoo.com

கனவு மெய்ப்படுமா ?

– தேவமைந்தன்

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்