This entry is in the series 20011215_Issue


கத்தரிக்காய் –1பெரியது

தயிர் –2கரண்டி

உளுத்தம்பருப்பு –கால் ஸ்பூன்

வற்றல் மிளகாய் –1

உப்பு –கால் ஸ்பூன்

பெருங்காயம் –சிறு துண்டு

கத்தரிக்காயைத் தணலில் சுட்டு, தோலை உரித்து நன்றாகப் பிட்டு வைத்துக் கொள்ளவும். பிறகு அதைத் தயிரில் கலந்து உப்பு சேர்த்து, உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயம், மிளகாய் இவற்றைத் தாளிக்கவேண்டும். பின் நன்றாகக் கலந்துவைக்கவும்.

பின் குறிப்பு: தணல் இல்லாவிட்டால் ஒரு வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் முழுசாகக் கத்தரிக்காயைப் போட்டுத் தீயைக் கொஞ்சமாக வைத்து சுமார் 7 நிமிடங்கள் அடுப்பில் வைத்து, காயைச் சிறிது நேரத்திற்கு ஒரு முறை பிரட்டிவிடவும். பின் இதை வெளியே எடுத்துத் தோலை நீக்கி மேற்சொன்னபடி செய்யவும். குக்கர் வைக்கும்போது, சாதத்தின் மூடியின் மீது சுமார் 20 நிமிடங்கள் கத்தரிக்காய் வைத்தும் சுடலாம்.

Series Navigation