என் மண் மீதில்…

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue

வ.ந.கிாிதரன் –


பின்னல்.
காற்றிலாடுமுந்தன்
பின்னல் அழகை இரசித்தபடி
எத்தனை தரம் அலைந்திருப்பேன்
உனக்குப்
பின்னால்.

அதிகாலைப் பொழுதுகளின்
அழகிற்கு அணிகூட்டியபடி
ஆடி நீ சென்ற போதெல்லாம்
ஆயிரக்கணக்கில் அல்லவா
வடித்திருப்பேன்
கவிதைகளை.

உணர்வுகளைக் கோர்த்து
மடலுனக்குத் தந்த போது
நீ நின்றாயே
முறைத்தபடி.

முகாம் தாண்டி
நீ சென்ற போது
உன்
முகவாியை நீ
தொலைத்தாயாமே!

நண்பன் கூறியபோது
தாளவில்லையே என்னாலென்
பால்ய காலத்துச்
சகியே!

நண்பா!
ஆறு வயதிலிருந்து
உன்னை எனக்குத் தொியும்.

காடு, குளம் மேடென்று அலைந்து
திாிந்தெல்லாம் இன்னுமென் நெஞ்சின்
அழியாத கோலங்கள்.

ஓருயிாிற்குமே தீங்கெண்ணாத
அப்பாவி
நீ. நீ
பயங்கரவாதியாமே.

ஆண்டுக் கணக்கில்
அடைத்து வதைத்ததில்
சிதைந்து போனாயாமே!
அறிந்த பொழுது
தாளவில்லையே என்னாலென்
பால்ய காலத்துச்
சகியே!

‘விசரன் மார்க்கண்டு ‘
வீதி அலைந்தபடி
விசர்க் கதை
சொல்லிச் செல்லுமொரு
விசரன்.

அவனைக் கூட
அவர்கள்
விட்டு வைக்கவில்லையாமே.

அவன் செய்த குற்றம்…
ஊரடங்கு நேரத்தில்
ஊர் சுற்றித் திாிந்ததுதானாம்.
வேட்டு வைத்தது
அதனால் தானாம்.

சிலர் காலிழந்தார். சிலர் கையிழந்தார்.
சிலர் கண்ணிழந்தார்.
இன்னும் சிலரோ தம்
குறியுமிழந்தார்.

மண்ணே!
உன் மேல் தானெத்தனை
எத்தனை
அனர்த்தங்கள்.

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்