சகுனம் பற்றி…

This entry is part of 40 in the series 20110206_Issue

ஹேமா(சுவிஸ்)


**************************
சந்தோஷமாய்
செல்லமொழிச் சத்தம்
சகுனமெனத் திட்டு.
சும்மா மிரட்டித் துரத்த
பாட்டி தலையில் தவறி விழ
பூசை பரிகாரம்.

மௌனமாய்
அப்பிய மூலையோடு
பகலோ இரவோ
ஓடி ஒட்டித் திரிந்த
சுவர் வெறுமையாய்.

தனித்த அவதி
எரிச்சலான சிரிப்பொலிகள்
முகட்டுக்குள்ளும் கதவிடுக்கிலும்
வரைந்த ஓவியங்கள்
தடக்கி வருட
கதவிடுக்கில்
நசிபட்டது தெரியாமல்
குட்டிப்பல்லியைத் தேடும்
அம்மாப் பல்லி.

பல்லிக் குட்டி சாக
சகுனமாய்
அதன் தலையில்
என்ன விழுந்திருக்கும்!!!

ஹேமா(சுவிஸ்)

Series Navigation