முத்துக் குளியல்
Published June 25, 2009 • By
ஒளியவன்
ஒளியவன்

சலனமற்ற அந்த
மழையிரவில்
குடையற்று நடந்திருந்தோம்
மழை வருமென்று
தெரிந்தும்.
பேசிக்கொண்டே
நடந்தாய்…
அமைதியாய்
வா
உன்
உதட்டுச்
சிப்பிக்குள்
விழும் மழைத்துளிகள்
வெளியே முத்துக்களாய்
சிதறி வீணாகிறது
என்றேன்.
என்னைக்
கிள்ளிவிட்டு
முத்து முத்தாய்
முத்துகள் பரிமாறினாய்
சிப்பிகள் கொண்டு.