மனதின் கையில்… .. ..
சித. அருணாசலம்

மரம் அமைதியைத் தான் விரும்புகிறது – ஆனால்
காற்று விடுவதாயில்லை.
மழை அமைதியைத் தான் விரும்புகிறது – ஆனால்
மேகம் விடுவதாயில்லை.
மனம் அமைதியைத்தான் விரும்புகிறது – ஆனால்
ஆசை விடுவதாக இல்லை.
காதல் அமைதியைத் தான் விரும்புகிறது – ஆனால்
காமம் விடுவதாயில்லை.
மேகத்தையும், காற்றையும்
வேகத்தைக் கட்டுப்படுத்தச் சொல்ல முடியுமா?
ஆசையையும், காமத்தையும்
அளவாக்கிக் கொள்ளலாம் அல்லவா?
நிறைவாக ஒன்று இருக்கும் போது – அதில்
குறை சேர்வதற்கு மற்றது அவசியமா?
இவற்றையெல்லாம் இணைத்திருப்பது
இறைவன் படைப்போ – இல்லை
இயற்கையின் நியதியோ?
கட்டுப்பாடு என்பது
மனிதனின் கையில் – அதுவும்
மனதின் கையில் மட்டும்.
-சித. அருணாசலம்.