தடுத்தாலும் தாலாட்டு
Published January 17, 2008 • By
புகாரி
புகாரி

உள்ளத்தில் புரண்டோடும்
ஓரு கோடிக் கவி நதிகள்
அவை உயிரை எழுத்தாக்கி
உணர்வேந்தும் நவமணிகள்
சொல்லுக்குப் பொருளென்று
சில நூறு விளக்கங்கள்
அது சொல்லவந்த சேதிமட்டும்
சொன்னவனின் நெஞ்சுக்குள்
பள்ளத்தின் நிலையென்றும்
பரிதவிக்கும் தாகங்கள்
அதன் பசியுள்ளம்
கேட்பதெலாம்
பிரசவிக்கும் மேகங்கள்
வல்லோனும் வாழ்வதில்லை
வசைமொழியே இல்லாமல்
தினம் வந்தவற்றுள்
விசம்நீக்கி
வாழ்வதுதான் பெருவாழ்வு
கொண்டோடும் நதியோடு
கொடியாகச் சென்றாலும்
உன் கரைதேடும் கண்ணுக்குள்
கொள்வாய் ஓர் நம்பிக்கை
தண்டோடு தாழம்பூ
தனிவாசம் வீசிவரும்
நீ தடுத்தாலும் உனையள்ளித்
தாலாட்டுப் பாடிவிடும்
அன்புடன் புகாரி