வலியின் மொழி

This entry is part of 42 in the series 20060324_Issue

கலைவாணி இராஜகுமாரன்


உயிராசையைப் புறந்தள்ள
ஒருபொழுதும் முடிவதில்லை.
கண்ணீரையும் சிரிப்பையும்
உறிஞ்சி வைத்திருக்கும் வீட்டைஸ.
இளங்காலையின் தூய்மையை
ஏந்திவரும் காற்றைஸ
மரணம் போல சுடுவதாய்
வாழ்வு போல ஒளிர்வதாய்
வெயில் படரும் முற்றத்தைஸ
இன்னமும் பிரிக்காத புத்தகங்களைஸ
கேட்க முடியாமற்போன பாடற்பேழைகளைஸ
பழக்கப்பட்ட பறவைகளின் குரல்களைஸ
‘எனது மண்ணில் எழுகிறேன்’ எனும்
இனிய உணர்வைஸ.
துப்பாக்கிச் சத்தம் கேட்காத பொழுதுகளில்
எழுத நினைத்த கவிதை வரிகளைஸ
எல்லாம் இழந்து விதியை நொந்து
என் வேர்விட்டுப் போகிறேன்.
ஆனால் பூக்குட்டிஸ!
சாலையில் கண்டெடுத்து
வெண்பஞ்சாய் என் காலுரசித் திரிந்து
காலையில் என் கதவு திறக்கும் ஓசையில்
ஒளியினும் வேகமாய் ஓடிவரும் பூனைக்குட்டா!
உன்னிடத்தில் போர் குறித்து
எந்த மொழியில் எடுத்துரைத்து நான் பிரிய ?

-கலைவாணி இராஜகுமாரன்
27.பெப்.2006

tamilnathy@hotmail.com

Series Navigation