மெய்வருகை…
பிச்சினிக்காடு இளங்கோ

(சிங்கப்பூர்)
எல்லா
முக்கிய இடங்களிலெல்லாம்
பார்க்கிறேன்…முன்வரிசையில்
எல்லா
முக்கிய தருணங்களிலெல்லாம்
பார்க்கிறேன்…முக்கியமானவர்களுடன்
எல்லா நிகழ்வுகளிலும்
நிகழ்கிறது
இந்த நிகழ்வு…வெளிப்படையாய்
ஆனால்,
ஒரு நிகழ்விற்குக்கூட
உணர்வோடு வராததை
உணர்ந்துவைத்திருக்கிறேன் இரகசியமாய்
—-
pichinikkaduelango@yahoo.com