கண்ணதாசா
Published June 30, 2005 • By
ரஜித்
ரஜித்

ஜூனில் பிறந்த
சூரியனே
வானப் பலகையில்
தமிழ் எழுதினாய்
விண்மீன்களால்
புள்ளியிட்டாய்
கருவூருக்கு முன்னும்
சாவூருக்குப் பின்னும்
பயணித்தாய்
திரை உலகின்
நரை களைந்தாய்
நானூறு ஆண்டின்
அனுபவத்தை
நாற்பதே ஆண்டில்
அடைந்தாய்
அடைந்ததை
அம்பலமாக்கினாய்
விதை மூடிய
கனிகளுக்கிடையே
முந்திரிக்கனி நீ ஆனாய்
பாசத்தை
பாலால் எழுதினாய்
உறவுகளைப் பிரிவுகளை
குருதியால் எழுதினாய்
துக்கங்களை
கண்ணீரால் எழுதினாய்
காதலை
பூக்களால் எழுதினாய்
ஓடப் பயணம்
உன் வாழ்க்கை
ஆடிக் கொண்டே
முடித்தாய்- தமிழை என்றும்
ஆடாமல் பிடித்தாய்
ரஜித்
rajid_ahamed@yahoo.com.sg