புறாக்களுடன்.

This entry is part of 49 in the series 20050225_Issue

அருண்பிரசாத்


மேகங்களற்ற
ஒரு வெளிர்நீல வானில்
நீந்தத் துவங்கினேன்.

கைகுலுக்கி
அறிமுகமாயின
சில புறாக்கள்.

எதிர்பாரா
முத்தங்கள்,
களியாட்டுக்கள்,
வலிகள்.

விடைபெற்றன
அதனதன் கூண்டுகளை
ஏந்திய கோபுரங்களைக்
கண்டவுடன்.

பிரிவின் தடங்களில்
சினேகமாய் தந்தன
வழித்துணைக்கு.

காற்றிலிருந்து
சேர்ந்து திரித்த
சில கவிதைகளை.

அருண்பிரசாத்
everminnal@yahoo.com

Series Navigation