This entry is in the series 20041104_Issue

புதியமாதவி


மழைத்துளியில் கால்பதிய
குடைவிரித்து நடக்கிறது என் நிழல்.
சாரலில் நனைகிறது
என் கண்ணாடிக்கதவுகள்.
துடைத்துவிட துடிக்கிறது
என் கரங்கள்.
உள்ளங்கையில் சிலிர்ப்புடன்
மரத்துப்போகிறது
என் மேனி.

கரியமேகங்களின்
இருட்டில்
நடைத்தடுமாறி
உடைத் தேடுகிறது
என் கண்கள்.
முழுவதும் நனைவதற்குள்
எட்டிப்பார்த்து
நகைக்கிறது
கதவிடுக்கில் கதிரவனின் ஓளி.
வெளிச்சத்தில் மட்டுமே
எழுந்து நடக்கிறது
எனக்கான.. என் நிழல்.

—-
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation