This entry is in the series 20040115_Issue

ரமா சங்கரன்


ஜன்னலைத் திறந்தால்
தனியே அமர்ந்திருக்கிறது
ஒற்றைக் குருவி
ஸ்பிலிட் ஏர்கண்டிஷன் மெக்கானிக்
சிதைத்த கூட்டுக்குள்
போக மனமில்லை

மாடிப்படி அரட்டை சங்கத்தில்
யாரோ யாரையோத்
திட்டுவது போல
பணிப்பெண்கள் வாய் ஒயாமல்
பேசும் வேறு பாஷைகள்
கார்பார்க்கில் வாகனங்கள்
தரையை முத்தமிடும் சத்தம்
ஏதோ நினைப்பில்
ஒற்றைக் குருவி
தனியாய் வெளியில்

அனாதையாய் ஒலிக்கும்
பக்கத்து வீட்டுத் தொலைபேசி
கவனத்தை மாற்றும் ஒலி 96.8
காது செவிடான ஒற்றைக்குருவி
தனியாய் வெளியில்

அத்துவானம் பிளந்து
ஊற்றும் மழைத்தாரைகள்
சன்னலை மூடுகிறேன்
உள்ளே நானும் கணிணியும்
ஒற்றைக்குருவி
தனியாய் வெளியில்
சரமாரியாய் ஊற்றும் மழை

———————
rhamas@yahoo.com

Series Navigation