மெளனம் பற்றி ஏறி
எஸ் ரமேஷ்

அறைகிறது என்னை
உன் வாதை
இறுக்க அறைந்த முகங்களுக்கிடையே
தவித்து அலையும் பட்டாம்பூச்சியை
நானறிவேன்…
நெருக்கிய கிராதிக் கம்பிகளூக்கிடையே
சோகையாய் விரிந்த நாய்குடைப்
புன்னகை கூடப்போதும்
என் இருட்குகை முழுதும் சுடர் மெழுக
ஒளி ததும்பச் செய்துகொள்வேன்.
***
subramesh@hotmail.com