This entry is in the series 20030427_Issue

நெப்போலியன், சிங்கப்பூர்


(சிங்கப்பூர்-மலேசியா தமிழருக்கும் தமிழுக்கும் மொழிக்காவலனாய் சமுதாயச் சிற்பியாய் இறுதிவரை உழைத்துச் சாய்ந்த தமிழ் ஆல் ‘ தமிழவேள் கோ.சாரங்கபாணி ‘ சிங்கப்பூர் குடியரசில் அவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது )

தமிழா கேள்…
தமிழவேள்!
தமிழின் வாள்.
தமிழா கேள்…
தமிழவேள்!
தமிழின் யாழ்.

தமிழா கேள்…
தமிழவேள்!
தமிழில் நூல்.
தமிழா கேள்…
தமிழவேள்!
தமிழன் நாள்.

தமிழா கேள்…
தமிழவேள்!
தமிழே சொல்.
தமிழா கேள்…
தமிழவேள்!
தமிழே கொள்.

தமிழா கேள்…
தமிழவேள்!
தமிழால் தோல்.
தமிழா கேள்…
தமிழவேள்!
தமிழைப் போல்.

— நெப்போலியன்
சிங்கப்பூர்
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation