‘படைத்தவனைத் தேடுகிறேன் ‘
கரு.திருவரசு

படைத்தவனைத் தேடுகிறேன் – அவன்
பதுங்கிப் பதுங்கி ஓடுகிறான் – படைத்தவனைத்
படைப்பிலொரு குறையுமில்லை
பாகுபாட்டுக் கறையுமில்லை
உடைப்பெடுக்கும் நீதிகளை
ஒழுங்குசெய்ய யாருமில்லை – படைத்தவனைத்
அறிவுமுதல் ஆயுள்வரை
அடுக்கடுக்காய் அளந்துவைத்தான்
முறிவுகளும் மோதல்களும்
முளைக்கையிலே என்னசெய்தான் – படைத்தவனைத்
ஆறறிவு மனிதனுக்கு
ஆற்றலள்ளிக் கொடுத்துவிட்டான்
பாரழியும் பாதைகளைப்
பார்த்துவிட்டும் எங்குச்சென்றான் – படைத்தவனைத்
thiruv@pc.jaring.my