இன்னுமா மெளனம் ?
அபுல் கலாம் ஆசாத்

நீராக இருக்கின்ற நினைவுகளின் மேற்பரப்பை
நீ தொட்ட பொழுதெல்லாம் சிற்றலைகள்
நீ என்ன கல்லா ? தென்றலா ?
ஆறாத காயங்கள் ஆங்காங்கே என்னுள்ளே
ஆகிவிட்டதனால் அழுகின்றேன்
நீ என்ன விபத்தா ? போரா ?
நேராது இருந்திருந்தால் நிம்மதியும் நித்திரையும்
நேர்ந்து விட்டதனால் கண்விழிப்பு
நீ என்ன சத்தமா ? முத்தமா ?
கூறாது இருக்கத்தான் கோலமுற்றேன் ஊமையென
குருடாயும் ஆகிவிட்டேன் இப்போது
நீ என்ன இருளா ? கோலா ?
***
azad_ak@yahoo.com