This entry is in the series 20010910_Issue

சேவியர்.


உள்ளீடற்ற சில உருவக எண்ணங்கள்,
மூலம் தொலைந்து போன சில
உணர்வுகளின் நகக்கீறல்கள்,
உருவம் தெளிய மறுக்கும் ஏதோ ஓர்
இருட்டுக் கரத்தின் விஷப்பாய்ச்சல்கள்,
துழாவித் துழாவி
கால்களாகிப் போகும் கரங்கள்,
இன்னும் இன்னும் காதுக்குள்
நெருங்கும் ஓநாய்களின் கூக்குரல்கள்,
மொத்த எண்ணங்களும் சுட்டுச் செரித்த
அமைதியின் பிணங்கள்.
மனம் ஓடிக்கொண்டிருக்கும் மாரத்தான் திடலில்
கால்கள் மட்டும்
மரணித்துக் கிடக்கும்.

***

Series Navigation