ஹைக்கு கவிதைகள்
Published July 22, 2001 • By
பிரபு
பிரபு

முரண்
நான் உன் மீது சந்தேகப்படுகிறேன்
தீக்குளிக்க தயாரா ராமனே !!!!!!!!
அரசியல்வாதி
வேட்டியின் கரை மாற்றி கரை மாற்றி
கறையாகிப் போனவர்கள்
ஒரு வோின் வருத்தம்
உலகை நீ தழுவ உனக்காய் நான் உழைத்தேன்
உழைத்து களைத்தவன் மண்ணுக்கடியில்
என்னால் உருவான நீயோ இன்னொருவன் மடியில்
புத்தகம்
திறந்தால் அறிவு
இல்லையேல் காகிதம்