வேர் மனது
வசிகர் நாகராஜன்

வண்ண வண்ண சரிகையிட்டு
பளபளக்கும் அலங்காரத் தோற்றம்
மழழை மொட்டுகள் வண்ண மலர்கள்
நீர்வீழ்ச்சி ஆறுகள் மலைகள் தோட்டங்கள்
வழுவழுப்பான காகிதத்தில்
மனம் மயக்கும் ஓர் கவிதை
பண்டிகை பிறந்த நாள் புதுவருடம் என
வந்திடும் வாழ்த்துக்கள் எதுவும் விட
காத்திருக்கும் ஈர விழிகள்,
கிராமத்து வாசம் சுமந்து வரும்
நடுங்கும் கையெழுத்தில்
‘ராசா, நீ நல்லா இருக்கியா ? ‘
vasikar@சுahoo.com
VNagarajan@us.imshealth.com