பின் நாற்றம்
மனஹரன், மலேசியா

மரணச் சட்டியின்
மயான விவகாரம்
இல்லையெனில்
சாவுத்தீயில்
பத்தினி சாவித்திரி
படுத்திருப்பாளா ?
இராவணச் சக்கடை
எங்கள்
சித்திர தேவியை
மூழ்கடித்திருக்குமா ?
மாதவியெனும்
நாட்டிய மேடை
கோவலக் கோடரிக்கு
பலியாகி இருக்குமா
கண்ணகி சண்டையில்
மார்புக் கடை
நெருப்பை விற்றது
போதும்…. போதும்….
நிறுத்து
நடந்தது போதும்
இனி.
நாறுவது தீருவது
எப்போது ? ? ? ?
kabirani@tm.net.my