தலைவா
ஜெயானந்தன்

தலைவா,
எதைத் தேடுகின்றாய்
புதை, குழியில் புதை.
தீயிட்டுக்கொளுத்து
கொழுப்பு சாம்பலாகி
எலும்புகள் உருமாறி
கலசத்தில் ஏறும்வரை
அந்த ‘இடத்தை ‘ சாணமிட்டு மொழுகு
கல்வைத்து புனிதமாக்கு
மெளனத்தோடு இரண்டு சொட்டுக் கண்ணீர்(!)
வரும்போகும் பாதசாரிகளுக்கு.
உண்டியல் குலுக்கி காசு சேர்
எரித்தவனை தலைவனாக்கு
இனி
வரப்போகும் தலைவனுக்கு
குழிவேட்டு பக்கத்தில்.