சிங்கள அச்சரு (சிங்கள காய்கறி ஊறுகாய்)

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue


தேவையான பொருட்கள்

15-20 சின்ன வெங்காயங்கள்

10-15 சின்ன பச்சை மிளகாய்கள் (இரண்டாக நடுவில் கிழிக்கப்பட்டது)

2 பெரிய காரெட்டுகள் (சின்ன நீள துண்டங்களாக வெட்டப்பட்டது)

1 சின்ன டர்னிப் (முக்கோண வடிவில் மெல்லிய துண்டங்களாக வெட்டப்பட்டது)

15-20 சின்ன காலி பிளவர் மொட்டுகள் (இருந்தால்) (அரை காலிபிளவரை உதிர்த்தால் கிடைக்கும்)

2 கோப்பை வினிகர் (தேங்காய் வினிகர் இருந்தால் நலம்)

2 செமீ இஞ்சி (இடித்தது)

6 பூண்டு பற்கள் (இடித்தது)

2 தேக்கரண்டி கருப்பு கடுகு அரைத்தது

1 தேக்கரண்டி கறுப்பு மிளகு அரைத்தது

சிறிதளவு மஞ்சள்

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு கோப்பை வினிகரை ஒரு வாணலியில் ஊற்றி சூடாக்கவும்

வெங்காயத்தைச் சேர்த்து மெதுவான தீயில் வைக்கவும்

வெங்காயத்தை வெளியே எடுத்து, இறுத்து, தனியே ஒரு பாத்திரத்தில் வைக்கவும்

பச்சை மிள்காயை சூடான வெனிகரில் சேர்த்து மெதுவான தீயில் வைக்கவும் சில நிமிடங்கள்.

பச்சை மிள்காயை எடுத்து வெங்காய்த்துடன் வைக்கவும். இதே போல கேரட்டுகள், காலிபிளவர் ஆகியவற்றையும் செய்து வெங்காயம் பச்சை மிள்காயுடன் சேர்க்கவும்.

டர்னிப்பை சூடாக்காமல், வெங்காயக்கலவையுடன் சேர்த்து சிறுதுண்டங்களாக்கிக் கொண்டு எல்லாவற்றையும் கலக்கவும்.

மீதமிருக்கும் ஒரு கோப்பை வினிகரையும் சூடாகும் வெனீகருடன் சேர்த்து, உப்பு, மஞ்சள், கடுகு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை இந்த வெனிகருடன் சேர்த்து கொதிக்கவிடவும் சில நிமிடங்கள்.

இந்த சூடான வெனிகர் கலவையை வெங்காயம், காய்கறிக்கலவை மேல் ஊற்றி கலக்கவும்

இதனை ஒரு பாட்டிலில் அடைத்து இரண்டு நாள் முதிர விடவும்.

***

Series Navigation