This entry is in the series 20010219_Issue


காரட் –1/2கிலோ

தேங்காய் –1

சர்க்கரை –3/4கிலோ

பால் –1கப்

நெய் –1டேபிள் ஸ்பூன்

காரட்டைக் கழுவி துருவிக் கொள்ளவும். துருவிய காரட்டை ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் நன்றாக வதக்கவும். பிறகு அதில் 1/2 கப் பாலை விட்டுக் கிளறவும். இது கெட்டியானதும் பாதி சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். கெட்டியாக பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பவும்.

தேங்காயைப் பத்து நிமிடங்கள் குறைவான தீயில் வதக்கவும். பிறகு அதில் 1/2 கப் பாலைச் சேர்த்துக் கிளறவும். கெட்டியானதும் மீதி சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். கெட்டியாக பர்பி பதம் வந்தவுடன் அதை அடுப்பிலிருந்து எடுத்துத் தாம்பாளத்தில் பரத்தியுள்ள காரட் கலவை மீது கொட்டி சமமாகப் பரப்பவும். ஆறியதும் வில்லைகள் போடவும். இதுவே சுவையான காரட், தேங்காய் மிக்ஸட் பர்பி ஆகும்.

Series Navigation