This entry is in the series 20081023_Issue

சகாராதென்றல்


வீட்டு முற்றத்தில்
தேங்கிய மழைநீரில்
விளையாட
கத்திக்கப்பல் செய்து தாவென
ந‌ச்ச‌ரிக்கிறாள் ம‌து
பழசின் அதிர்வுக‌‌ள் உறுத்த
வேண்டும‌ட்டும் செய்துத‌ருகிறேன்
தெறித்த ம‌ழையின்துளிக்கு
மூழ்கிய க‌ப்ப‌லின் சோக‌ம் அழுத்த
வீரிட்டு அழுகிறாள்
தேற்ற வ‌ழியின்றி த‌விக்குமென் நினைவுக‌ளில்
உடைகிறது ஒரு
சிறு குமிழி

Series Navigation