This entry is in the series 20020217_Issue

நிர்வாணி


எனக்கென்றவோர் பதையில்
சென்று கொண்டிருந்தேன்
அதே வழியில் என் தம்பியும்
அவனைத் தொடர்ந்து அவன் நண்பர்களும்
பாதையில் ஏதோ தடக்கி
விழுந்துவிட்டேன்
உதவிக்காக கரமேதும் வரவில்லை
என்ன மனிதர்களென்று
வெறுத்துக்கொண்டு
தலை தூக்கிய என் தலைக்குப் பின்னால்
அத்தனை தலைகளும் க்ஷரத்த வெள்ளத்தில்
என் தம்பி உட்பட

Series Navigation