This entry is in the series 20010122_Issue


பிரெட் முழுதாக –1

இறால் –1/4கிலோ

பெரிய வெங்காயம் –3

பச்சை மிளகாய் –5

இஞ்சி –1துண்டு

பூண்டு –6பற்கள்

கொத்துமல்லித் தழை –சிறதளவு

காரத்தூள் –2டாஸ்பூன்

கரம் மசாலாத் தூள் –1/2டாஸ்பூன்

(அல்லது) கிராம்பு –2

பட்டை } –1துண்டு

ஏலக்காய் –2

பால் –1/2கப்

டால்டா அல்லது நெய் –50கிராம்

இறாலுடன் உப்புத்தூள், மஞ்சள் தூள், ஒரு டாஸ்பூன் மிளகாய்த்தூள் கலந்து ஊற வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

ரொட்டியை சிறு சிறு சதுரத்துண்டுகளாக நறுக்கவும். பாலில் இரண்டு டாஸ்பூன் மிளகாய்த்தூள், உப்புத்தூள் கலந்து, தெளித்து பிசறி வைக்கவும்.

கரம்மசாலாத்தூள் இல்லாவிட்டால் கிராம்பு, ஏலக்காய், பட்டை இவைகளை தூள் செய்யவும். இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டு இவற்றை விழுதாக அரைக்கவும். வெங்காயத்தை நீள, நீளமாக நறுக்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி அரைத்த விழுது சேர்த்து வாசனை வருகையில் வெங்காயம் கரம் மசாலத்தூள் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், ரொட்டித் துண்டுகள், இறால் சேர்த்து கிளறி மூடி வேக வைக்கவும்.

ரொட்டியும், இறாலும் பொன்னிறமாக வதங்கியதும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும்.

மணமும், சுவையும் நிறைந்த இறால்-பிரெட் கிச்சடி தயார்.

Series Navigation