ஆலும் மரம்
Published August 25, 2001 • By
விவேகா.
விவேகா.

பழுத்த இலைகள் தன்னை விலக்கி
கீழே விழும்போதெல்லாம்
வலிக்கும்.
துளிர் தள்ளி ஒளிநோக்கும்
ஒவ்வொருமுறையும் ஏதோ
புதியதாய் பிறந்த இன்பம்.
வெறும் கிளைகளாய் இருந்திட ஒப்பாது
பூத்து காய்த்து பின்னர் கனிந்து
உறவுக்கெல்லாம் உணவளிக்கையில்
உள்ளம் களிக்கும்.
வயது முதிர்ந்து வாலிபம் கலைந்தபின்
தலைக் கொடுத்து
கடைசிவரை தாங்கி நிற்கும்
விழுதுகள் !