This entry is in the series 20040422_Issue

ஃபரிதா அஷ்ரஃப்


தேவையான பொருட்கள்

1/2 கிலோ ஆட்டுக்கறி எலும்பு இல்லாமல்

1/2 கிலோ முழு கோதுமை

1 கோப்பை பருப்பு (துவரை கடலைப்பருப்பு போல)

2 கோப்பை எண்ணெய்

1 வெங்காயம் வெட்டியது

2 அல்லது 3 தக்காளி நறுக்கிக்கொண்டது

1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்

1 தேக்கரண்டி கரம்மசாலா

2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது

1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்

உப்பு ருசிக்கேற்ப

தண்ணீர் சிறிதளவு

மேலே தூவ garnish

எலுமிச்சை

பச்சை மிளகாய்

இஞ்சித்துண்டுகள்

புதினா இலைகள்

கொத்துமல்லி இலைகள்

சிவப்பு வெங்காயம்

சாட் மசாலா சிறிதளவு தூவ

செய்முறை

பருப்பை ஆறு அல்லது எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். பருப்பு மற்றும் கோதுமையை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி மிருதுவாகும்வரை வேக வைக்கவும். பிறகு இதனை ஒரு மிக்ஸியில் போட்டு அடித்துக்கொள்ளவும். இன்னொருபாத்திரத்தில் கறி மற்றும் இதர பொருட்களை சேர்த்து கறி மிருதுவாகும் வரை வேகவைக்கவும். பிறகு கறியை உதிர்த்துவிட்டு அத்துடன் கோதுமை பருப்பு கலவையைச் சேர்த்து ஒரு மரக்கரண்டியால் கலக்கி மெதுவான தீயில் நன்றாக வேகவைக்கவும். நன்றாக வெந்ததும், இதன் மேல் தூவ வைத்திருந்த பொருட்களை போட்டு எலுமிச்சை துண்டங்களோடு பறிமாறவும்.

Series Navigation