வேத வனம் விருட்சம் 12 கவிதை

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

எஸ்ஸார்சி


பிரம்மத்தின் குறியீடு
ஒம் எனும் பிரணவம்
உலகை
பிரதிந்தித்துவப்படுத்தும்
உள் ஒளிர் ஔளி.

பிரளயம் நேரும்போதும்
இயங்குகதியில்
செயல்படும் அது.
நான்மறைகள்
பிழிந்திடக்கிடைத்த
நறுந்தேன்.

மனவிகாரம் தொலைத்து
மன சஞ்சலம் வென்று
சத்துவ குணம்
பெற்றிட்டோர்
ஞான யோகத்திற்கு
அருகதை உடையோர்.

கவனமாய்
கடின உழைப்பு
நெடிய
தொடர்நிலைத்தியானம்
படிப்படியாய்
உயர்ந்து செல்லும்
உச்சியின் உச்ச உறவு
முயற்சி தொடர்க
கிடைத்திட்ட எளிய
இனிமையோடு
ஏனிங்கே சமாதானம்
செயல் தொடர்க
கூடாது ஒய்வு.

ஒம் எனும்
பிரணவச்சொல்
வசமாகட்டும்
தெரிந்தும் தெளிந்தும்
தொடர்க
இடைநில்லா
ஆன்மீகப்பயணம்
சுருக்கி சொல்ல
பிரணவம் பாவம் தொலைக்கும்
பெருக்கிச்சொல்ல
விடுதலை கிட்டும்
சொல்லுமாறு சொல்வாய்
வெற்றி எதனிலுமே

தத் த்வம் அசி
என்பது மாவாக்கியம்
தன்னை அறியும்
வழி அது
பொருளறிந்து
செய்க நீ தியானம். – 6-10 சிவஞானாம்ருத உபநிசத்.


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி