This entry is in the series 20010226_Issue


பச்சரிசி –250கிராம்

வெந்தயம் –2டாஸ்பூன்

முழு பூண்டு –2

தேங்காய் –1

முதலில் வெந்தயத்தைப் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பூண்டையும் உரித்துக் கொள்ளவும். அடுப்பைப் பற்ற வைத்து பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் வைத்துத் தண்ணீர் நன்றாகக் கொதிநிலை வந்ததும் அரிசி, வெந்தயம், பூண்டு மூன்றையும் ஒன்றாக வேகவிடவும். நன்றாக பசை போல் வெந்ததும் உப்பைத் தேவைக்கேற்ப போட்டு இறக்கி விடவும். பிறகு தேங்காயைப் பால் எடுத்துப் பிழிந்து பொங்கலில் ஊற்றிக் கிளறவும். சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

வெய்யில் காலத்தில் இது மிகவும் உஷ்ணத்தைத் தவிர்க்கும். மலச்சிக்கலைத் தவிர்க்கும்.

Series Navigation