விழுங்கப்பட்ட வாழ்வு

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

தினேஸ்வரி


கலாச்சாரத்திற்கு
பிறப்பிக்கப் பட்டதால்
இன்னும்
வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறோம்
ஒரு கூரைக் கீழ்
நானும் நீயும்

நான் சொல்லி
நீ கேட்க
இது என்ன
ஜெனநாயகமா ?
குடும்பம்….!!!
அதனால்
நீ சொல்லிக் கொண்டே
இருக்கிறாய்.
நான் எதையும்
கேட்பதில்லை….!!!

மூக்கணாங் கயிறுக்கும்
மூனு முடிச்சிக்கும்
ஒற்றுமை உனக்கு
தெரிகிறது
வித்தியாசம்தான்
எனக்கு தெரிவதில்லை…..

salthana82@yahoo.com.my

Series Navigation

தினேஸ்வரி

தினேஸ்வரி