“சந்திர யோகம்”

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

முனைவர் சி.சேதுராமன்


E.Mail. sethumalar68 yahoo.com

சந்திரனை உடம்பில் விளங்கச் செய்யும் யோகத்திற்குச் சந்திர யோகம் என்று பெயர். அண்டவெளியில் சந்திரன், சூ¡¢யன், அக்கினி ஆகியவை இருப்பதைப்போன்று நமது உடலின் அகத்திலும் இவ்வாற்றல்கள் அமைந்துள்ளன.புறத்தில் உள்ள சந்திரன், சூ¡¢யன், அக்கினி(நெருப்பு)ஆகியவை வளர்பிறையில் வளரந்தும், தேய்பிறையில் தேய்வுற்றும் வரும். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்று அறிஞர் கூறுவர்.சந்திரன் உள்ளிட்ட அண்டவெளிப் பொருள்களுக்குக் கலை முதலியவற்றைக் கூறுவதுபோன்று அகத்தில் உள்ள சந்திரன் முதலியபொருள்களுக்குக் கலை முதலியவற்றையும் திருமூலர் தெளிவுற எடுத்துரைக்கிறார்.

அண்டவெளியில் உள்ள பொருள்கள் குறித்து உணர்ந்தால்தான் அதனால் அடையும் பயனை நன்கு உணரஇயலும். ஆதலால் திருமூலர் அவவொளிப் பொருள்களின் இயல்புகளை முதலில் தமது திருமந்திரத்தில் எடுத்துரைக்கிறார்.உடலில் மூலாதாரத்திலிருந்து துவாதசாந்தம் வரை செல்லும் கலைகள் சந்தரனுக்குப் பதினாறு என்றும், சூ¡¢யனுக்குப பன்னிரண்டு என்றும் அக்கினிக்குப் பத்து என்றும் அகவுணர்வில் அறிந்த யோகியர்கள் கூறுகின்றனர். இம்மூன்றும் சேந்ந்து ஒன்றாவதில்தான் சந்திரயோகம் அமையும் என்பதனை,

“ஆகின்ற சந்திரன் சூ¡¢யன் அங்கியுள்

ஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள்

ஏகின்ற அக்கலை யெல்லா மிடைவழி

ஆகின்ற யோகி அறிந்த அறிவே” (திருமந்திரம், 852)

எனத் திருமூலர் தெளிவுறுத்துகின்றார்.

பன்னிரண்டு கலைகளை உடைய சூ¡¢யனைச் சந்தரன் வழியாகச் செலுத்தப் பயின்றவர் பெரும் பேற்றினை அடைவர். அப்போது சந்தரகலை பதினாறில சூ¡¢யனது கலைகளும், அக்கினியினது கலைகளும் அடங்கிவிடும். இம்மூன்றும் பொருந்தும்போது அறுபத்து நான்கு கலைகளைஉடைய பிரணவம் உதிக்கும். சிரசிற்குமேல் எல்லாக் கலைகளும் கருவாக உள்ளன. இக்கலைகள் எல்லாம் இடை, பிங்கலை சுழுமுனை வழியே தொடர்புடையன. இவைகளின் கீழ் நோக்கும் தன்மையைக் கெடுத்து மேலெழச் செய்து பிரமரந்திரப் புழையின் மேல் விளங்கும் சகஸ்சதளத்தில் கொண்டு சேர்க்க நல்ல சிவ யோகியர் சித்தியானத்தில் பொருந்தியிருப்பர். இதனை,

“எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்

சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ்

செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்

நல்லோர் திருவடி நண்ணிநிற் போரே” (திருமந்திரம், 857)

என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

இடைகலை, பிங்கலை ஆகிய இரு கலைகளும் ஒளி வடிவில் பின்னி அமைந்து மூலாதாரம் ஸ்வாதிஸ்டானம் ஆகிய அக்கினி கண்டம், மணிபூரகம், அநாகதம் ஆகிய சூ¡¢ய கண்டம், விசுக்தி ஆஞ்ஞையாகிய சந்திரகண்டம் என்று மூன்று கண்டங்களாக உடம்பைப் பி¡¢த்து நிற்கின்றன. மூலாதாரத்திலுள்ள புருடனோடு ஒளிவடிவில் பொருந்திய சூ¡¢ய சந்திர ஒளிகள் சுழுமுனை வழியாகப் பின்னி மேலே சென்று நட்சத்திரங்கள்போல் விளங்கசிச் சந்திரமண்டலம் அமைகின்றது. இதனால் பூமியிலிருந்து நவ(ஒன்பது) மண்டலங்களும் இங்கு பொருந்தி நிற்கும். பஞ்சபூதங்கள், சூ¡¢யன், சந்திரன், அக்கினி, நட்சத்திரம் ஆகியவை நவமண்டலங்கள் ஆகும். இந்நெறியில் சென்றவர்க்குப் பஞ்சபூத உலகமும், சோமசூ¡¢யாக்கினியால் உணர்த்தப்பட்ட சுட்டறிவும் இல்லை.

சந்திரன் தேய்பிறையை அனுசா¢த்துக் கீழ் முகமானபோது மூலாதார சக்தி அதிகா¢த்துச் சந்திரன் மனத்தை இருளில் செலுத்துவான். சந்திரன் வளர்பிறையை அனுசா¢த்து மேல்முகமானபோது மூலாதார சக்தி பிரகாசமின்றி மனம் மேல்நிலைக்குச் செல்லும். மூலாதார சக்தியின் ஆற்றலே எல்லா உற்பத்திக்கும் காரணமாகும். இம் மூலாதாரத்திலிருந்து மேலெழும் சோடச கலைகளின்(பதினாறுகலைகளின்)தன்மையை அறிந்தவர்களே வளர்பிறைபோல் ஒளிபெற்றுச் சிவத்தின் திருவடியை அடைவர். மூலாதாரத்திலுள்ள அக்கினி சூ¡¢யனைக் கடந்து சந்திரனை அடைந்தபோது பிரணவம் விளங்கும். இவ்வாறு ச்நதிரனின் பதினாறு கலைகளும் புறம்போகாது அகத்தே நிற்கின்ற தன்மை கண்டும் தாழ்வானவர்கள் உண்மையை நினைக்கவில்லை. அதனால் அவர்கள் வாழ்நாளை வீழ்நாளாக்கிக் காலனின் கருத்துப்படி சென்று பிறப்பிறப்பில் பட்டுழல்கின்றார்கள் என்பதனை,

“ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற

நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள்

கன்றிய காலன் கருத்துழடி வைத்தபின்

சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே” (திருமந்திரம் 868)

எனத் திருமூலர் நவில்கின்றார்.

சூ¡¢யனும் சந்திரனும் உடம்பில் எவ்வாறு விளங்குகின்றன என்பதனையும் திருமூலர் எடுத்துரைப்பது நோக்கத்தக்கது. சுவாதிட்டானத்தில் சந்திரன் ஒற்றைக்கலை பிறையாக உள்ளது. அச்சந்திரகலை மூலாதாரத்தை நோக்கிப் பாய்ந்து பிரமரந்திரம் சென்றால் கதிரொளி கிட்டும். மூலாதாரத்திலுள்ள அக்கினியையும் மணி பூரகத்திலுள்ள சூ¡¢யனையும் ஒன்றாகச் சேர்ப்பதில் சந்திரனொளி அமையும். இவ்விரண்டு ஒளிகளும் பிரமரந்திரத்தில் ஒன்றானால் சோமசூ¡¢யாக்கினி கூடிய பிரணவம் அமையும். பிரணவமே சிவாலயமாம். இதனை,

“அங்கி மதிகூட வாகும் கதிரொளி

அங்கி கதிர்கூட வாகு மதியொளி

அங்கி சசிகதிர் கூடவத் தாரகை

தங்கி யதுவே சகலமு மாமே” (திருமந்திரம், 864)

எனக் கூறுகின்றார். பன்னிரண்டு கலைகளையுடைய சூ¡¢யன் பெண்ணாகும்; பதினாறு கலைகளையுடைய சந்திரன் ஆணாகும். இவை இரண்டையும் உடம்பைவிட்டு அகலாமல் ஞான சாதனையால் முகத்துக்கு முன்னே தோன்றும் ஒளியில் கலப்பித்தால் தெவித்டாத திருவடி இன்பம் உண்டாகும்.

சூ¡¢யன் என்பது வலக்கண். சந்திரன் என்பது இடக்கண். இடக்கண் பார்வையை வலக்கண் பார்வையோடு பொருத்திக் கண்டால் வலக்கண்ணுக்கு மேலே ஒரு சிறு ஒளி தோன்றும். இதுவே சிரசில் அக்கினி மூலையாகும். இதை அறிந்தபிறகே பிரணவத்தின் விளக்கம் புலனாகும்.

சந்திரனும் சூ¡¢யனும் சேர்ந்தபோது உதித்தது பிரணவ சோதி என்ற அக்கினிக் கலை. இது முதல் நிலை. இந்நிலைக்குப் பிறகு வலக்கண் பார்வையை இடக்கண்பார்வையோடு பொருத்தவேண்டும். அவ்வாறு பொருந்தினால் சிரசில் அக்கினி மூலையிலிருந்து மறையாக ஈசானதிக்குச் சூ¡¢யகலை பாய்ந்து வட்டம் பூர்த்தியாகும்.”மாணுமதியதன் காலை வலத்திட்டு பா¢தியின் காலை இடத்திட்டுக் காணம்” என்பது திருமூலர் கருத்தாகும்.

அக்கினி மூலையிலிருந்து முறையாக ஈசான திக்கை நோக்கிக் கலைகள் பாய்ந்து சந்திரவீதி அமையும். இங்ஙனம் தெற்கிலிருந்து சீவகலை வடக்கு நோக்கிப் பாய்வதே உண்மையான கைலாச யாத்திரையாகும். இதை, அட்டதளகமல முக்குண அவத்தை” என்ற தலைப்பில் திருமூலர் எடுத்துரைத்துள்ளார். சிரசின் மேல் வடக்கு முதலான ஏழு திக்குகளும் சகள நிலை; ஈசான திக்கில்தான் நிட்களம் உள்ளது.

“ஏழுஞ் சகளம் இயம்புங் கடந்தெட்டில்

வாழும் பரம்” (திருமந்திரம்)

என்று திருமூலர் கூறுகின்றார்.

இதனை உடலில் கண்டோர் ஒளி நெறி பற்றியவராவர். இம்முறையி வழுவாது பயிற்சி செய்து வந்தால் ஆயிரம் ஆண்டு இவ்வுடம்பில் வாழலாம். மூச்சுக்கும் இவ்யோகத்துக்கும் தொடர்பு இல்லை என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இந்நெறி ஒளி பற்றியது; கண்ணாலே காணக்கூடியது என்பதனை,

“காணும் கா¢தியின் காலைஇடந்திட்டு

மாணும் மதியதன் காலைவலத்திட்டுப்

பேணியே இவ்வாறு பிழையாமற் செய்வீரேல்

ஆணி கலர்காதவ் வாயிரத் தாண்டே” (திருமந்திரம் 866)

என்று திருமூலர் உரைக்கின்றார்.

ஈசான திக்கில் விளங்கிய சீவகலை பிரமரந்திரப் புழைக்குமேல் விளங்கும் சகஸ்ரதளத்தை அடையும்போது சிர¨ச் சூழ்ந்துள்ள எட்டுத்திக்குகளையும் கடந்து ஒன்பதாவது திக்கு வரும். அப்போது சிரசில் நாதம் முழங்கும். அந்த நாதத்தில் தேவாதி தேவனான சிவபெருமான் களிப்புடன் பொருந்துவான். இந்த மேல் நிலையில் சூ¡¢ய சந்திரர்கள் வலப்புறமும்,இடப்புறமும் சிறு தீபஒளிபோன்று விளங்குவர். சூ¡¢யன் புறப்படுமுன்னர் சங்கின் ஒலி மக்களை விழிப்பிப்பதைப் போன்று ஞான சூ¡¢யன் எழுமுன் நாதம் உதித்து முன்னர் விளங்கும் என நமது உடம்பில் சூ¡¢யனும் சந்திரனும் விளங்குவதை விளக்குகிறார். இதனை,

“பாலிக்கும் நெஞ்சம் பறைஓசை ஓன்பதில்

ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்

மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங்

காலைக்குச் சங்கு கதிரவன் தானே” (திருமந்திரம், 867)

என்று திருமூலர் தெளிவுறுத்துகிறார். இவ்வெல்லையை அடைந்தவர்க்குச் சந்திரன் என்றும் சூ¡¢யன் என்றும் தனியாக இல்லை. அவை தனியாக இருக்கும்வரை சாதகர் (பயிற்சி செய்பவர்) கால அளவுக்குக் கட்டுப்பட்டவராவார்.சாதனை முற்றி(பயிற்சி முடிந்து) அவை ஒன்றானபோது அவர் கால நியதியைக் கடந்து நிற்பவராவார். சூ¡¢யனே நாதமாகவும், சந்திரனே ஒளியாகவும் பி¡¢ப்பற்று விளங்கும்.

சாதனையின் பயனாகச் சிரசின்மேலே சந்திரன் விளங்குமளவு உறங்காதிருந்து அச்சந்திரன் கீழே இறங்கிய பின்னரே தூக்கத்திற்குச் செல்லவேண்டும். அவ்வாறு செய்தால் ஒளி உள்ளத்தே நிலைபெற்றுச் சந்திரன் முழுமையாக இருக்கும். அதாவது சிரசின்மேல் ஒளியைக் கண்டு மனம் பதிந்திருக்கும்போது உறக்கத்திற்குச் செல்லக் கூடாது என்று சந்திரயோகம் பயில்வதற்கு¡¢ய இரு இன்றியமையாத குறிப்புகளை திருமூலர் எடுத்துரைக்கிறார். இக்குறிப்புகளை,

“அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்

பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று

நயந்தரு பூரணை உள்ள நடத்தி

வியந்தரு பூரணை மேவுஞ் சசியே” (திருமந்திரம், 872)

என்று திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிடுகிறார். மேலும், சந்திரன் சிரசில் உதிக்குமளவும் காலை எழுந்ததும் தியானம் செய்து சந்திரன் உதித்த பிறகு உணவை உட்கொள்ளவேண்டும். அதாவது காலை எழுந்ததும் தியானம் செய்து ஒளி பெற்ற பின்பே உணவு முதலியவை உட்கொள்ள வேண்டும் என்ற குறிப்பினை,

“சசியுதிக் கும்அள வுந்துயி லின் றிச்

சசியுதித் தானேல் தனதூண் அருந்திச்

சசிசா¢க் கின்றள வுந்துயி லாமற்

சசிசா¢ப் பின்கட்டன் கண்துயில் கொண்டதே” (திருமந்திரம், 873)

எனத் திருமூலர் நவில்கிறார்.

இங்ஙனம் நாள்தோறும் செய்து வரும் யோகியர் எமனது வாழ்நாளையும் அளக்க வல்லவராவர். மேலும் முக்காலத்தையும் அமுத கிரணத்தைப் பருகிச் சாவாமூவாநிலை எய்தியிருப்பர். ஆதலால் இவர்கட்கு ஆற்றலிழப்பு ஏற்படாது. சந்திர கலை முழுமையாக இருக்கும். இக்கலையைப் போற்றியிருந்தால் உடல் அழியாது. இது சந்திர யோகத்தினைச் செய்வதால் கிடைக்கும் பயனாகும்.இச்சந்திர யோகத்தை தகுந்த ஆசி¡¢யர் வழியாகவே பயிலுதல் வேண்டும். சந்திர யோகம் பயின்று உடல் நலமும் வளமும் பெற்று இனிது வாழ்வோம்.இறையருள் பெறுவோம்.


முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசி¡¢யர், மா.மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை,

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.