விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

நா கோபால்சாமி

விளக்கு தமிழிலக்கிய மேம்பாட்டு நிறுவனம் – டிசம்பர் 9, 2004

அறிவிப்பு

விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது பேராசிரியர் சே. இராமனுஜம் அவர்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

விளக்கு இலக்கிய விருது நடுவர்களான திருவாளர் பெருமாள் முருகன், எஸ். ஆல்பர்ட், சி. மோகன் ஆகியோரின் ஒருமித்த பரிந்துரையின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. தமிழ் நாடகக் கருத்தாக்கத்துக்கும் செயல்பாட்டுக்கும் பேராசிரியர் இராமனுஜம் அவர்கள் செய்துள்ள வாழ்நாள் பங்களிப்பைப் பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது.

நாடக இலக்கிய உலகின் பன்முகங்களுடனும் தமது வாழ்க்கையைப் பிணைத்துகொண்டு கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கியப் பணிபுரிந்து வரும் இப்பேராசிரியரின் நாடகப் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை, கருத்த தெய்வத்தைத் தேடி, வெறியாட்டம், பிணம் தின்னும் சாத்திரங்கள், செம்பவளக்காளி, மெளனக்குறம் ஆகியன. ‘வெறியாட்டம் ‘ என்ற நாடகம் நாட்டார் பெண்கள் மரபில் முக்கிய இடம்பெறும் ஒப்பாரி வடிவத்தை மையமாகக் கொண்டு புனையப்பட்டதாகும்.

தமிழ் இலக்கிய மரபோடு நெருங்கிய தொடர்புள்ள மலயாள நாடக உலகிலும் இவரது பணி குறிப்பிடத்தக்கது. தமிழ், மலயாள மொழிகள் மட்டுமன்றி இந்தி, ஆங்கில மொழிகளிலும் சேர்த்து 40 நாடகங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். படைப்புப் பணியோடு, பயிற்சிப் பணியிலும், ஆய்வுப் பணியிலும், இலக்கியக் கல்வியிலும் தொடரிந்து ஈடுபட்டு வருகிறார்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறைத் தலைவராக எட்டாண்டுகள் திறம்படச் செயலாற்றியவர். தமிழ் நாடக இலக்கிய மரபின் இழைகளில் ஒன்றான திருக்குறுங்குடிக் கோயிலின் கைசிக நாடக வடிவத்தை மீட்டுருவக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

தற்காலத் தமிழ் இலக்கியத்தின் உயிரோட்டமாகக் கிடக்கும் படைப்பாளிகளையும் படைப்புகளையும் பரவலாக அறியச்செய்யும் விளக்கு இலக்கிய நிறுவனத்தின் முயற்சிகளுக்கு இந்தத் தெரிவு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

நடுவர்கள் பெருமாள் முருகன், சி. மோகன், எஸ். ஆல்பர்ட் ஆகியோர்க்கு விளக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது.

விளக்கு நிறுவனத்தின் இந்தியத் தொடர்பாளரன திரு வெளி ரங்கராஜன் அவர்களது பன்முக உதவிகளை விளக்கு நன்றியுடன் பாராட்டுகிறது. பரிசளிப்பும் பாராட்டு விழாவும் விரைவில் சென்னையில் நடக்கவுள்ளன.

நா. கோபால்சாமி

விளக்கு அமைப்பாளர்

vilakku@yahoo.com

Series Navigation